நெல்லை மாவட்டத்தில் அதிகரித்துவரும் கொலைச் சம்பவங்கள் காவல் துறையைக் கதிகலங்கவைக்கின்றன. கடந்த 20-ம் தேதி பனவடலி சத்திரம் காவல் நிலையத்தில் கையெழுத்துப் போட வந்த இருவரை ஒரு கும்பல் வெட்டிச் சாய்த்த சம்பவம் ஏரியாவில் பதற்றத்தை அதிகரித்துள்ளது.

சங்கரன்கோவில் களப்பாளன்குளத்தைச் சேர்ந்தவர் பூதக்காளை. அதே ஊரைச் சேர்ந்த பூல்பாண்டியன் என்பவருடன் இவருக்கு முன்விரோதம். அந்தப் பகை நாளடைவில் பழிவாங்கும் எண்ணமாக மாறியது. இருவரும் ஒருவரை ஒருவர் வெட்டிச் சாய்க்கத் திட்டம் போட்டதில் பூதக்காளையும் அவரது உறவினர்களும் சேர்ந்து பூல்பாண்டியை வெட்டிக் கொன்றனர்.

இது தொடர்பாக பூதக்காளை அவரது மகன்கள் முத்துபாண்டி, மகாராஜன், முத்துபாண்டியின் மனைவி பொன்னுக்கொடி, அவரது தம்பி முருகன் உறவினரான ஆறுமுகபாண்டி ஆகியோர் மீது வழக்குத் தொடரப்பட்டது. இதில் முத்துபாண்டியைத் தவிர ஐந்து பேரும் கைதுசெய்யப்பட்டு நிபந்தனை ஜாமினில் வெளியே வந்தனர்.

இவர்களைப் பழிவாங்கத் திட்டமிட்டனர் பூல்பாண்டியின் குடும்பத்தினர். போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்துப் போட்டுவிட்டு ஊருக்கு திரும்பிக்கொண்டிருந்த பூதப்பாண்டியையும் அவருடன் வந்தவர்களையும் வழியில் மறித்தனர். கையில் பயங்கர ஆயுதங்களுடன் எதிர் முகாமைச்

சேர்ந்தவர்கள் நிற்பதைக் கண்டதும் மகாராஜன், முருகன், ஆறுமுகபாண்டி ஆகியோர் தப்பி ஓடிவிட்டனர். அந்தக் கும்பலின் பிடியில் பூதக்காளையும் அவரது மருமகள் பொன்னுக்கொடியும் சிக்கிக்கொண்டனர். கொலை வெறிக் கும்பல், உயிர் தப்புவதற்காகக் காட்டுக்குள் ஓடிய இருவரையும் சரமாரியாக வெட்டிச் சாய்த்தது. இருவரும் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர்.

பூதக்காளையின் உறவினர்கள், ''பூதக்காளையும் பூல்பாண்டியும் சொந்தக்காரங்க. கடந்த முறை நடந்த கூட்டுறவுச் சங்கத் தேர்தலின்போது பூல்பாண்டியின் ஆதரவுடன் பூதக்காளை போட்டியிட்டார். அவரை எதிர்த்து கரிசல்குளம் கிராமத்தைச் சேர்ந்த பாலு என்பவர் போட்டியிட்டார். அதனால் ஏற்பட்ட விரோதத்தில் இருவரும் சேர்ந்து பாலுவை வெட்டிக் கொன்றார்கள். அந்த அளவுக்கு இருவரும் நெருக்கம். அதற்கு பிறகு 2007 உள்ளாட்சித் தேர்தலில் பூதக்காளையின் மருமகள் பொன்னுக்கொடி ஒன்றிய கவுன்சிலருக்குப் போட்டியிட்டார். அதே பதவிக்கு பூல்பாண்டியின் மனைவியும் போட்டியிட்டார். அதில் மனக்கசப்பு ஏற்பட்டு, தேர்தலின்போது இருவரும் பலமுறை மோதிக்கிட்டாங்க. அது நிரந்தரப் பகையா மாறி, கடந்த ஜனவரி மாதத்தில் பூல்பாண்டியை வெட்டிக் கொன்னுட்டாங்க. அதுக்குப் பழிக்குப் பழியா இப்போது பூதக்காளையையும் அவரோட மருமகளையும் எதிர் தரப்பு போட்டுருச்சு. இந்த விரோதம் இப்போதைக்கு முடிவுக்கு வரும்னு தோணலை. போலீஸார் இரு தரப்பையும் கைதுசெய்வதோடு மேலும் உயிர் இழப்பு ஏற்படாமத் தடுக்கணும்'' என்றனர்.

களப்பாளன்குளத்தைச் சேர்ந்த சிலர், ''தேர்தல் சமயத்தில் ஏற்பட்ட பகையில், பொன்னுக்கொடியின் அண்ணன் மாரிச்செல்வனை முதலில் வெட்டிக் கொன்னுட்டாங்க. அதற்குப் பழியா, ஜனவரி 5-ம் தேதி பூல்பாண்டியனைக் கொன்னாங்க. இந்தக் கொலைக்குப் பழிவாங்கத் துடித்த பூல்பாண்டி குடும்பத்தினர், கொலைச் சம்பவத்தில் ஈடுபட்டவங்க ஜாமினில் வெளியே வந்ததும் அவங்க நடவடிக்கையைக் கண்காணிக்க ஆரம்பிச்சாங்க.

தினமும் பனவடலி சத்திரம் ஸ்டேஷனில் கையெழுத்துப் போடுவதற்கு ஐந்து பேரும் போவது தெரிஞ்சு அவர்களைப் போட்டுத்தள்ளத் திட்டம் தீட்டினாங்க. 20-ம் தேதி அவங்க போலீஸ் ஸ்டேஷனில் இருந்து வெளியே வந்து இரண்டு பைக்கில் போயிருக்காங்க. பின்னால் காரில் வந்த பூல்பாண்டி குடும்பத்தினர், காரைக்கொண்டு பைக்கில் மோதியிருக்காங்க. அதில் பூதக்காளையும் அவரது மருமகள் பொன்னுக்கொடியும் சென்ற பைக் நிலைதடுமாறி சாய்ஞ்சிருச்சு.

அதற்குள் இன்னொரு பைக்கில் சென்ற மூவரும் எஸ்கேப் ஆகிட்டாங்க. வயதானவரையும் பெண்ணையும் அந்தக் கும்பல் வெட்டிக் கொன்னுட்டுத் தப்பிடுச்சு. இப்படியே பழிக்குப் பழியா கொலை விழுந்துக்கிட்டே இருந்தா, நாங்க எப்படி இந்த ஊரில் குடியிருக்க முடியும்?'' எனக் கொந்தளிக்கிறார்கள் ஊர் மக்கள்.

நெல்லை மாவட்டக் காவல் துறைக் கண்காணிப்பாளரான விஜயேந்திர பிதரி, ''பூல்பாண்டியின் கொலைக்குப் பழிவாங்கும் நடவடிக்கையாக அவரது மனைவி வேல்தாய் என்பவரின் ஆலோசனையில் கொலை நடந்திருப்பது முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்திருக்கிறது. இதில் ஈடுபட்ட மூன்று பேர் மட்டும் இப்போது பிடிபட்டிருக்கிறார்கள். வேல்தாய் மற்றும் அவருடன் தலைமறைவாக இருக்கும் மற்றவர்களைப் பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது'' என்றார்.

மக்களிடம் ஏற்பட்டிருக்கும் அச்சத்தைப் போக்குவதற்குக் காவல் துறை தீவிரமாகச் செயல்பட வேண்டியது அவசியம்.

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்