Published:Updated:

''சுடுகாட்டுக்குப் பக்கத்தில் பஸ் ஸ்டாண்ட் வேண்டாம்!''

அமைச்சர் சுப்ரமணியனுடன் மல்லுக்கட்டும் பொதுமக்கள்!

''சுடுகாட்டுக்குப் பக்கத்தில் பஸ் ஸ்டாண்ட் வேண்டாம்!''

அமைச்சர் சுப்ரமணியனுடன் மல்லுக்கட்டும் பொதுமக்கள்!

Published:Updated:
##~##

சுடுகாட்டுக்கு அருகில்தான் புதிய பேருந்து நிலையத்தைக் கொண்டுவருவேன் என அமைச்சர் சுப்ரமணியனும், பழைய பேருந்து நிலையத்துக்கு அருகிலேயே புதிய பேருந்து நிலையத்தைக் கட்ட வேண்டும் எனப் பொதுமக்களும் மல்லுக்கட்டுவதால், புதுக்கோட்டையில் ஏக பரபரப்பு. 

கடந்த சட்டமன்றத் தேர்தலின்போது புதுக்கோட்டைக்கு வந்த ஜெயலலிதா, 'நான் ஆட்சிக்கு வந்தால், இங்கு புதிய பேருந்து நிலையம் கட்டித் தருவேன்’ என வாக்குறுதி கொடுத்துவிட்டுச் சென்றார். இந்தத் தொகுதியில் போட்டியிட்டு வென்ற சுப்ரமணியன், ஆதிதிராவிட நலத் துறை அமைச்சரானார். கடந்த ஆண்டு, புதிய பேருந்து நிலையம் கட்ட இரண்டு கோடி ரூபாய் ஒதுக்கினார் முதல்வர். அதில் இருந்தே பிரச்னையும் தொடங்கி விட்டது. பொதுமக்கள் சார்பில் பல்வேறு அரசியல் கட்சிகளைச் சேர்ந்த பிரமுகர்கள் அமைச்சருடன் மல்லுக்கட்டுகிறார்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''சுடுகாட்டுக்குப் பக்கத்தில் பஸ் ஸ்டாண்ட் வேண்டாம்!''

காங்கிரஸ் பிரமுகர் அங்கமுத்து, ''கந்தர்வகோட்டையில் பஸ் ஸ்டாண்ட் கட்டணும்னு முதல்வர் நிதி

''சுடுகாட்டுக்குப் பக்கத்தில் பஸ் ஸ்டாண்ட் வேண்டாம்!''

ஒதுக்கியிருக்காங்க. ஆனா, கந்தர்வக்கோட்டை பஞ்சாயத்தைத் தாண்டி அக்கச்சிப்பட்டி பஞ்சாயத்தில் கட்டப்போறதா சொல்றாரு அமைச்சர். அவர் சொல்ற இடம், மழைக் காலங்களில் தண்ணீர் தேங்கி நிக்கிற இடம். கீரனூர் தொடங்கி கந்தர்வகோட்டை வரை உள்ள ஊரில் வெள்ளம் வந்துச்சுன்னா, அந்த சுடுகாட்டுக்குப் பக்கத்தில் ஓடும் காட்டாத்துலதான் ஓடும். அது மட்டும் இல்லாம, அவங்க பார்த்துருக்குற இடத்துக்குப் பக்கத்தில் செட்டியூரணினு ஒரு குளம் இருக்கு. அந்தக் குளத்துலதான் அந்தப் பகுதி மக்கள் எல்லாரும் குளிப்பாங்க. அங்க பஸ் ஸ்டாண்ட் வந்தா, அதுவும் பிரச்னையாகிடும்'' என்றார்.

ம.தி.மு.க. பிரமுகரான மதன் கிருஷ்ணமூர்த்தி, ''இப்ப பார்த்துருக்கிற இடம் ஒரு தனி நபருக்கு சொந்தமான இடம். ஏற்கெனவே இன்னொரு இடத்தை அமைச்சரே பார்த்தாரு. அந்த இடம் அரசு புறம்போக்கு இடம்தான். ஆனாலும், ஏனோ இந்த இடத்தில்தான் பேருந்து நிலையத்தைக் கட்டுவோம்னு அமைச்சர் பிடிவாதமா இருக்காரு. அந்த இடத்துக்குப் பக்கத்தில் அனைத்து சாதியினருக்குமான ஐந்து சுடுகாடுகள் இருக்கு. அதோட தஞ்சாவூரில் இருந்து மதுரை, காரைக்குடினு நெடுந்தூரம் போற பேருந்துகள் பஸ் ஸ்டாண்டில் மட்டும்தான் நிப்பாட்டுவாங்க. ஊரைவிட்டு ஒரு

''சுடுகாட்டுக்குப் பக்கத்தில் பஸ் ஸ்டாண்ட் வேண்டாம்!''

கிலோ மீட்டர் தள்ளி பஸ் ஸ்டாண்ட் கட்டினாங்கன்னா, மறுபடி ஊருக்குள் வர வேறு வாகனத்தைத் தேடணும்.

இப்ப பஸ் ஸ்டாண்ட் இருக்கும் இடத்துக்குப் பக்கத்தில் அம்மாகுட்டைனு ஒரு குளம் இருக்கு. அந்தக் குளத்தை யாரும் பயன்படுத்தாததால், மலஜலம் கழிச்சு அசிங்கப்படுத்தி சாக்கடையாக்கிட்டாங்க. அந்தக் குளத்தைத் தூர்த்து புதிய பேருந்து நிலையத்தை அங்கே கட்டுங்கனு பலர் அமைச்சர்கிட்ட சொன்னாங்க. ஆனா, அது நீர்நிலைப் புறம்போக்கு... அந்த இடத்தில் கட்டடம் கட்ட முடியாதுனு அமைச்சர் மறுத்துட்டார். அந்தக் குட்டை இருக்கும் இடத்தை வகைமாற்றம் செய்யலாம்னும் சொல்றாங்க. அப்படி செஞ்சு, அங்கேயே கட்டினாங்கன்னா, ரொம்ப வசதியா இருக்கும்'' என்ற யோசனையை முன்வைத்தார்.

புதிய தமிழகம் கட்சியைச் சேர்ந்த சௌந்தர்ராஜன், ''இப்ப பேருந்து நிலையம் கட்டப் பார்த்துருக்கிற இடம், ஒரு காலத்தில் இந்தப் பகுதி தி.மு.க.  சேர்மனா இருந்த அடைக்கலம் செட்டியாருடைய நிலம். அந்த இடத்துக்குப் பக்கத்தில் சுடுகாடு இருந்ததால், இடத்தை விற்க முடியலை. அதைப் பயன்படுத்தி தஞ்சாவூர் பிரமுகர் ஒருத்தர் இந்த பதினைந்து ஏக்கரையும் குறைந்த விலைக்கு வாங்கிட்டார். இப்ப புதிய பேருந்து நிலையம் கட்டப்போறதா தகவல் வந்ததும், அமைச்சரைச் சந்திச்சுப் பேசியிருக்கார். அவர் கொடுத்த ஐடியாப்படி அந்த பதினைந்து ஏக்கர் நிலத்துல நாலு ஏக்கர் நிலத்தை அரசாங்கத்துக்கு இலவசமா எழுதிக் கொடுத்துருக்கார். முதல்வர், கந்தர்வகோட்டையில்தான் பேருந்து நிலையம் கட்டித்தர்றதா சொன்னாங்க. அதுக்குதான் நிதியும் ஒதுக்கியிருக்காங்க. ஆனா, தன்னோட சுயலாபத்துக்காக அக்கச்சிப்பட்டி பஞ்சாயத்துல பேருந்து நிலையத்தைக் கட்ட முயற்சி செய்றார் அமைச்சர்'' என்று ஆதங்கப்பட்டார்.

இதுகுறித்து, அமைச்சர் சுப்ரமணியனிடம் பேசினோம். ''அந்த ஊரில் வேறு இடமே இல்லை. அந்த இடம்கூட நாங்களாகக் கேட்டுத்தான் எழுதி வாங்கியிருக்கிறோம். அவர்கள் சொல்வதுபோல், அந்த இடத்தில் சுடுகாடே இல்லை. பஸ் ஸ்டாண்ட் கட்ட நிலம் கொடுத்தவர், தன் இடமதிப்பைக் அதிகரிக்கும் உள்நோக்கத்தோடுதான் அரசுக்கு இலவசமாக எழுதிக் கொடுத்திருப்பதாகச் சொல்வதுபற்றி எனக்குத் தெரியாது.அவருடைய இடத்தை அவர் எவ்வளவுக்கு வேண்டுமானாலும் விற்கட்டும். அதைப்பற்றி பிரச்னை இல்லை. நீர்நிலைப் புறம்போக்கில் பஸ் ஸ்டாண்ட் கட்ட முடியாது. வேற இடமும் இல்லை. அதனால்தான் அந்த இடத்தை தேர்வுசெய்திருக்கிறோம்'' என்றார்.

மக்களைத் திரட்டிச் சென்று முதல்வரை சந்தித்து முறையிட அரசியல் பிரமுகர்கள் திட்டமிட்டு இருப்பதால், அமைச்சர் சுப்ரமணியனுக்கு சிக்கல்தான்!  

- வீ.மாணிக்கவாசகம்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism