Published:Updated:

''படம் எடுத்து வெச்சுக்கிட்டு மிரட்டுறான்!''

புதுச்சேரி சிறுமிக்கு நேர்ந்த அவலம்

''படம் எடுத்து வெச்சுக்கிட்டு மிரட்டுறான்!''

புதுச்சேரி சிறுமிக்கு நேர்ந்த அவலம்

Published:Updated:
##~##
''படம் எடுத்து வெச்சுக்கிட்டு மிரட்டுறான்!''

டந்த மாதம் தலைநகரம் சந்தித்த அதே அதிர்ச்சி, இப்போது புதுச்சேரியில். எட்டாம் வகுப்பு படிக்கும் ஒரு மாணவியைக் கடத்திச் சின்னாபின்னமாக்கிய சம்பவம் புதுச்சேரியை உலுக்கியுள்ளது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதுச்சேரியில் உள்ள ஆதரவற்றோர் பள்ளி​யில் தங்கி எட்டாம் வகுப்பு படித்து வருகிறார் புவனா (பெயர் மாற்றப்பட்டுள்ளது). அவருடைய தந்தை சென்னையில் கூலி வேலை செய்கிறார். 10 வருடங்களுக்கு முன்னரே தாய் இறந்துவிட்டதால், புதுச்சேரி அரியாங்குப்பம் மணவெளியில் உள்ள தன் மாமாவின் பராமரிப்பில் இருந்தார் புவனா. விடுதியில் விடுமுறை நாட்களின்போது தன் மாமா குடும்பத்தினரைப் பார்ப்பதற்காக மணவெளிக்கு வருவார்.

அப்படித்தான் அன்றும் ஊருக்கு வந்துவிட்டுத் திரும்​பினார். அன்று நடந்த சம்பவங்களை புவனாவின் மாமா விவரிக்கிறார். ''எப்ப லீவு கிடைச்சாலும் உடனே ஊருக்குக் கிளம்பி வந்துடுவா. போன மாசம் விடுதியிலிருந்து ஊருக்கு வந்துட்டு, லீவு முடிஞ்சு மீண்டும் விடுதிக்குக் கிளம்பிப் போனா. பஸ்ஸுக்குக் காத்துக்கிட்டு இருக்கும்போது எங்க ஊரைச் சேர்ந்த ஆனந்துங்கிறவன், 'நானும்

''படம் எடுத்து வெச்சுக்கிட்டு மிரட்டுறான்!''

டவுனுக்குத்தான் போறேன். உன்னை அங்கே விட்டுடுறேன்’னு சொல்லி புவனாவைத் தன்னோட பைக்குல ஏத்திக்​கிட்டு சுண்ணாம்பு ஆறு போட் ஹவுஸ்கிட்ட ஒதுக்குப்புறமான இடத்துக்குக் கூட்டிட்டுப் போய் எங்க புள்ளைய சீரழிச்சிட்டான். சீரழிச்சதை செல்போன்ல வீடியோவும் எடுத்திருக்கான். அவன்கூட பைக்குல போகும்போதே வேற வழியாப் போறதைப் பார்த்துக் கத்தியிருக்கா. வண்டிக்குப் பெட்ரோல் போடப் போறதாச் சொல்லி ஏமாத்தியிருக்கான். மெயின் ரோட்டை விட்டு வேற பக்கம் போறது தெரிஞ்சதும் ஏதோ தப்பு நடக்கப்போறதை உணர்ந்து காப்பாத்துங்கன்னு கத்தியிருக்கு. கடைசியில எதுவுமே பலன் தரலை. வீட்டுக்குப் பயந்து நடந்த சம்பவங்களை எங்கிட்ட சொல்லாம மறைச்சுட்டா.

ஆனா, லீவுக்கு இங்க வரும்போதேல்லாம் பதற்றமா இருப்பா. 'நான் விடுதிக்குப்  போறேன்’னு சொல்லிட்டே இருப்பா. காரணம் புரியாம இருந்தப்ப​தான் ஆனந்துங்கிறவன் இந்தப் புள்ளைய அசிங்கமா வீடியோ எடுத்துவெச்சிருக்கிற தகவல் கிடைச்சது. அந்தப் பையனும் அவனோட ஃப்ரெண்ட்ஸும் புவனா ஊருக்கு வந்தபோதெல்லாம் அவளை மிரட்டியிருக்காங்க. வேற ஒருத்தர்

''படம் எடுத்து வெச்சுக்கிட்டு மிரட்டுறான்!''

மூலமா எங்களுக்கு இப்பத்தான் இந்த விஷயம் தெரியவந்தது. எடுத்த வீடியோவைக் கொடுடான்னு கேட்டா, 'உன்னால என்ன பண்ண முடியுமோ பண்ணிக்கோ’னு மிரட்டுறான். எங்க புள்ளைக்கு நியாயம் கிடைக்​கணும்'' என்றார் குமுறலாக.

புதுச்சேரியில் இதுபோன்ற கொடுமை​களை சட்டரீதியாக எதிர்கொள்ள, ஓய்வுபெற்ற உயர் நீதிமன்ற நீதிபதி தலைமையில் கடந்த ஆண்டு சிறுவர் நலக்

''படம் எடுத்து வெச்சுக்கிட்டு மிரட்டுறான்!''

குழுமங்களை உருவாக்கியது சமூக நலத் துறை. அதில் 15 உறுப்பினர்கள்  நியமிக்கப்பட்டனர். இப்போது அந்தக் குழு செயல்படுகிறதா? என்று சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர்.

இதுகுறித்து, திராவிடர் விடுதலைக் கழகத்தின் புதுவை மாநில தலைவர் லோகு.அய்யப்பன், ''சமூக நலத் துறை அதிகாரிகள் தங்களுடைய கடமையிலிருந்து தவறிவிட்டதன் விளைவுதான் இது. பிள்ளைகளுக்கு நல்லது, கெட்டதை எடுத்துச் சொல்லி விழிப்புஉணர்வை ஏற்படுத்த வேண்டிய கல்வித் துறையும் சமூக நலத் துறையும் தூங்கிக்கொண்டிருக்கின்றன. போதிய விழிப்புஉணர்வு இல்லாமல் பிள்ளைகள் கயவர்களிடம் சிக்கி சின்னாபின்னமாகின்றனர். பெற்றோர்களும் கவனமாக இருக்க வேண்டும். இதுபோன்ற வழக்குகளில்

''படம் எடுத்து வெச்சுக்கிட்டு மிரட்டுறான்!''

காவல் துறையினர் மனிதநேயத்தோடு அணுக வேண்டியது அவசியம். தவறு செய்பவர்கள் மீது கடுமையான வழக்குகள் பதியப்பட்டால்தான், மற்ற சமூக விரோதிகளுக்கும் இது பாடமாக அமையும்'' என்றார்.

சமூக நலத் துறை இயக்குனர் உத்தமனிடம் இதுகுறித்துப் பேசினோம். ''சமூக நலத் துறை செயல்படவில்லை என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. இதுபோன்ற பிரச்னைகளில் முதலில் எங்களை வந்து அணுகினால், நாங்கள் புகார்தாரருக்குப் பாதிப்பில்லாத வகையில் பிரச்னையை முன்னெடுத்துச் செல்வோம். நாங்களாக பிரச்னைகளில் நேரடியாக நுழைய முடியாது'' என்றார்.

2013 வரை துறையின் இப்போதைய செயல்பாடுகளும் தகவல்களும் இடம் பெற்றிருக்க வேண்டிய சமூக நலத் துறையின் இணையதளம் 2011-ம் ஆண்டோடு முடங்கிவிட்டது.

இந்த விவகாரம் தொடர்பாக அரியாங்குப்பம் காவல் நிலைய உதவி ஆய்வாளர் பாபுஜியிடம் பேசினோம். ''ஆனந்தைக் கைதுசெய்து விசாரித்து வருகிறோம். குற்றம் நிரூபிக்கப்பட்டால், பாலியல் வன்கொடுமைச் சட்டம் அவர் மீது பாயும்'' என்றார்.

கொடூரன்கள் கடுமையாகத் தண்டிக்கப்பட்டால்தான் கொடூரங்கள் குறையும்!

- நா.இள அறவாழி

படங்கள்: ஜெ.முருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism