Published:Updated:

''ரோட்டை ஆக்கிரமித்து ப்ளாட் போடுறாங்க..''

கொதிக்கும் திருவொற்றியூர் மக்கள்

''ரோட்டை ஆக்கிரமித்து ப்ளாட் போடுறாங்க..''

கொதிக்கும் திருவொற்றியூர் மக்கள்

Published:Updated:
##~##
''ரோட்டை ஆக்கிரமித்து ப்ளாட் போடுறாங்க..''

''சார்... நாங்க திருவொற்றியூர் பக்கத்தில் இருக்கிற ராஜாசண்முகம் நகரில் இருந்து பேசுறோம். எங்க ஏரியாவில் புதுசா பிளாட் போட்டிருக்கிறவங்க, நகருக்கான சாலைகளை ஆக்கிரமிச்சு பொதுமக்களுக்கு இடையூறு செய்ற மாதிரி இரும்பு முள்வேலி போட்டி​ருக்காங்க. அதைத் தட்டிக்கேட்டால், அடியாட்களை வெச்சு மிரட்டுறாங்க. நீங்கதான் அந்தச் சாலையை மீட்டுக் கொடுக்கணும்'' என்று ஜூ.வி ஆக்ஷன் செல்லில் (044-66802929) ஒரு குரல் கதறி இருந்தது.   

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ராஜாசண்முகம் நகரில் வசிக்கும் மக்களைச் சந்தித்தோம். ''எங்களோட பெயரைப் போடாமல் எழுதுங்க... இல்லைன்னா, அடியாட்களைக் கூட்டிட்டு வந்து எங்களை மிரட்டுவாங்க. எங்க ஏரியாவில் ஒரு குளம் இருந்தது. அந்த இடத்தில்தான், இறந்தவங்களுக்கு ஈமச் சடங்கு செய்வாங்க. அந்தக் குளத்தில் மண்ணைக் கொட்டி மூடிட்டாங்க. அஞ்சுகம் என்பவருக்குச் சொந்தமான நிலத்தில்தான் அந்தக் குளம் இருந்தது. மக்கள்

''ரோட்டை ஆக்கிரமித்து ப்ளாட் போடுறாங்க..''

பயன்பாட்டில் குளம் இருந்ததால், அதை அப்படியே பொதுமக்களுக்காக விட்டுட்டாங்க. அந்தக் குளத்தை மூடி, திடீர்னு பிளாட் போட ஆரம்பிச்சாங்க. அந்த பிளாட் போட்டிருக்கிறது ஆனந்த் என்பவர். அவரோட உமர் செரிஃப், அக்னினு ரெண்டு பேர் இருக்காங்க. இப்போகூட இந்த நிலம் அஞ்சுகம் பெயரில்தான் இருக்கு. அந்த நிலத்தை இவங்க எப்படி விக்கிறாங்கன்னே தெரியலை. அது மட்டுமா? அவங்க எங்க ராஜாசண்முகம் நகருக்கான 30 அடி சாலையில் 18 அடியை ஆக்கிரமிச்சு அந்த பிளாட்டைப் போட்டிருக்காங்க. இங்கே 100 வீடுகளுக்கு மேலே இருக்கு. இந்த 100 வீட்டு மக்களும் எங்க ஏரியாவைக் கடந்து மற்ற ஏரியாவுக்குப் போற மக்களும் இந்த வழியாத்தான் போவாங்க. அதனால், ஏரியா மக்களுக்குத்தான் பாதிப்பு. ஆரம்பத்திலேயே அவங்ககிட்டே இதுபற்றி கேட்டப்ப, அடியாட்களை வெச்சு மிரட்டினாங்க. தாசில்தார், ஆர்.டி.ஓ., கலெக்டர்னு எல்லா அதிகாரிங்ககிட்டயும் பலமுறை மனு கொடுத்தாச்சு. ஆனா, இதுவரை யாரும் நடவடிக்கையும் எடுக்கலை'' என்றனர் ஆதங்கத்துடன்.

''ரோட்டை ஆக்கிரமித்து ப்ளாட் போடுறாங்க..''

இதுகுறித்து ஆனந்தனிடம் பேசினோம். ''நாங்க பிளாட் போட்டிருக்கிறது பட்டா நிலம். அதை எங்கே

''ரோட்டை ஆக்கிரமித்து ப்ளாட் போடுறாங்க..''

வேணும்னாலும் வந்து காட்டுவோம். மாநகராட்சி உதவி ஆணை​யரை வெச்சுக்கிட்டுதான் சர்வேயரை அழைச்சு வந்து இந்த நிலத்தை அளந்து பிளாட் போட்டிருக்கோம். சாலையை நாங்க ஆக்கிரமிக்கலை. எங்களோட நிலத்தில்தான் 12 அடி சாலையை பொதுமக்களுக்காக விட்டிருக்கிறோம். இதைப் பார்த்து இந்த நகர் மக்களே எங்களைப் பாராட்டுறாங்க. யாரோ எங்களுக்கு எதிரா செயல்படுறவங்கதான் இந்தப் பிரச்னையைக் கிளப்புறாங்க'' என்றார்.

இதுகுறித்து மாதவரம் வட்டாட்சியர் வரதராவ் என்ன சொல்கிறார்? ''சம்பந்தப்பட்ட நிலம் இருக்கிற ஏரியா சென்னை மாநகராட்சிக்குக் கீழ் வருகிறது. அதை அளக்கக்கூடிய உரிமை அவர்களிடம்தான் இருக்கிறது. நில ஆக்கிரமிப்பு குறித்து எங்களிடம் வந்த மனுவை, சென்னை மாநகராட்சிக்கு அனுப்பிவைத்தோம். அதையடுத்துதான், நில அளவையாளர் அந்த நிலத்தை அளந்திருக்கிறார். சாலை ஆக்கிரமிப்பு குறித்த விரிவான அறிக்கையை எங்களுக்கும் மாநகராட்சிக்கும் சர்வேயர் அனுப்பி​வைத்திருக்கிறார். மாநகராட்சிக்கு உட்பட்டு அந்தச் சாலை பராமரிப்புப் பணி இருப்பதால், டவுன் பிளானிங் அலுவலர்தான் அதன் மீதான நடவடிக்கை எடுக்க வேண்டும்'' என்றார்.

சீக்கிரம்!

- கவிமணி

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி