Published:Updated:

சொல்லவே கொடூரமான சம்பவம்...

கொந்தளிக்கும் அரியலூர்

சொல்லவே கொடூரமான சம்பவம்...

கொந்தளிக்கும் அரியலூர்

Published:Updated:
##~##
சொல்லவே கொடூரமான சம்பவம்...

'இந்தியாவில் குழந்தைகளுக்குப் பாது​காப்பு இல்லை’ என, சில மாதங்களுக்கு முன் ஐ.நா. மனித உரிமை ஆணையம் அறிக்கை வெளியிட்டு சர்வதேச அரங்கில் இந்தியாவின் மானத்தைப் பறக்கவிட்டது. அதன் பிறகும் இந்தியாவில் குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் குறையவில்லை என்பதுதான் வேதனை. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இதுவரை காமவெறியர்களின் வக்கிரப் புத்திக்கு பெண் குழந்தை​களே அதிகமாக ஆளாகி வந்தனர். சமீபத்தில் இரண்டு வயது ஆண் குழந்தை ஹோமோசெக்ஸ் கொடுமைக்கு அரியலூரில் பலியானது. சிமென்ட் ஆலை ஒன்றின் ஒப்பந்தப் பணியாளரான ஒடிசா மாநிலத்தைச் சேர்ந்த கிருஷ்​ணனின் குழந்தை ராஜுதான் இந்தப் பாதகச் செயலுக்குப் பலியாகியுள்ளான்.

அரியலூர் அருகேயுள்ள கோவிந்தபுரத்தில் இருக்​கிறது கிருஷ்ணன் வேலை செய்யும் சிமென்ட் தொழிற்சாலை. அதன் அருகிலேயே ஏதோ அகதிகள் முகாம்போல வரிசையாக சிமென்ட் ஷீட்டால்

சொல்லவே கொடூரமான சம்பவம்...

கொட்டகைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதில்தான் வெளி மாநிலத்தில் இருந்து வேலைக்கு வந்திருப்பவர்கள் தங்கியிருக்கிறார்கள்.

அப்படி ஒரு கொட்டகையில் இருந்த கிருஷ்​ணனைச் சந்தித்தோம். ''நானும் என் மனைவி  ராவணம்மாவும் இங்கே வேலை செய்றோம். ராஜு பிறந்த பிறகு, என் மனைவி வீட்டில் குழந்தையைக் கவனிச்சுக்கிட்டா.

அன்னைக்கு (17-ம் தேதி) மதியம் வீட்டுக்கு சாப்பிட வந்தப்ப, வாசலில் ராஜு விளையாடிட்டு இருந்தான். அவனுக்கு சாப்பாடு ஊட்டியதோடு, நானும் சாப்பிட்டுட்டு வேலைக்குப் போயிட்டேன். வேலைக்குப் போன கொஞ்ச நேரத்தில், பையனைக் காணோம்னு தகவல் வந்துச்சு. அவன் விளையாடுற எல்லா இடத்திலும் பதற்றத்தோட தேடி அலைஞ்சோம். ராஜு கிடைக்கவே இல்லை. ரொம்ப நேரம் கழிச்சு, சாமான்கள் வெச்சிருக்கிற ஒரு ஷெட்டில் சாக்கு மூட்டை இருந்ததைப் பார்த்தோம்'' என்றவர் தொடர்ந்து பேச முடியாமல் கதறி அழுதார்.

ராஜுவின் தாய் ராவணம்மாள், ''மதியம் வீட்டு வாசலில் ஓடியாடி விளையாடின ராஜுவை, சாக்கு மூட்டையில் பிணமாப் பார்த்தப்பவே நாங்க அதிர்ச்சி அடைஞ்சிட்டோம். அவன் சாவுக்கு என்னென்னவோ காரணம் சொல்றாங்க... அதைக் கேட்கும்போதே நெஞ்சு பதறுதே...'' என்று நெஞ்சில் அடித்துக்கொண்டு அழுதார்.

சொல்லவே கொடூரமான சம்பவம்...

ராஜுவின் மரணத்துக்குக் காரணம் என்று, உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த  இரண்டு டிரைவர்களைக் கைது செய்துள்ளனர் அரியலூர் போலீஸார். இன்ஸ்பெக்டர் செந்தில்குமாரிடம் பேசியபோது, ''தகவல் கிடைத்ததும் சம்பவ இடத்துக்குச் சென்று குழந்தையின் உடலைப் பார்த்தோம். குழந்தையின் வாயிலும் மூக்கிலும் ரத்தமாக இருந்தது. வாய் வழியாகக் கொடூர உறவு கொண்டால் மட்டுமே இதுபோன்ற அறிகுறி இருக்கும்.

குழந்தையின் உடல் கண்டெடுக்கப்பட்ட ஷெட்டுக்குப் பக்கத்தில் உத்தரப் பிரதேசத்தைச் சேர்ந்த பிரமோத் குமார், ஜிஜேந்திர குமார், அம்ரீஸ் குமார், ராஜேஷ் குமார் ஆகிய நான்கு பேர் தங்கியிருந்தனர். அவர்களில் ஜிஜேந்திர குமார் என்பவன், மூட்டை இருந்த இடத்தை எங்களிடம் காட்டியதோடு, தனக்கும் நடந்த சம்பவத்துக்கும் தொடர்பு இல்லை என்பதுபோல் நடந்துகொண்டான். இருப்​பினும் அவன் மீது எங்களுக்கு சந்தேகம் இருந்தது. அவர்களில் யாரோ ஒருவன்தான் இந்தக் கொடூரத்தை செய்திருக்கக்கூடும் என நினைத்தோம். அவர்களிடம் நடத்திய விசா​ரணையில் ஜிஜேந்திர குமாரும் பிரமோத் குமாரும் சேர்ந்து ராஜுவின் வாயில் அவர்களது ஆணுறுப்பைத் திணித்து கொடுமை நிகழ்த்தி இருப்பது தெரியவந்தது. அந்தக் கொடூரச் செயலால், குழந்தை ராஜுவுக்கு மூச்சுத் திண​றல் ஏற்பட்டுள்ளது. இருப்பினும் அவர்கள் அந்தக் கொடூரச் செயலைத் தொடர்ந்ததால், மூச்சுத் திணறி ராஜு இறந்துவிட்டான். நடந்ததை மறைப்பதற்காக குழந்தையின் உடலை மூட்டையில் அடைத்துவைத்திருக்கிறார்கள். விசாரணையில் குற்றத்தை ஒப்புக்கொண்டனர்'' என்றார்.

நாம் வாழ்வது காட்டுமிராண்டிகளின் உலகத்​திலா என்ற அச்சம் எழுகிறது. குழந்தைகளுக்குப் பாதுகாப்பு இல்லாத பயங்கரமான சூழலில் இருக்கிறோமா எனப் பதறுகிறது மனசு.

- சி.ஆனந்தகுமார்

படங்கள்: எம்.ராமசாமி