Published:Updated:

கலெக்டர் ஆபீஸ் வளாகத்திலேயே திருடுறாங்க!

கிருஷ்ணகிரி வேதனை

கலெக்டர் ஆபீஸ் வளாகத்திலேயே திருடுறாங்க!

கிருஷ்ணகிரி வேதனை

Published:Updated:
##~##

மாவட்ட மக்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால், கலெக்டர் அலுவலகத்தைத் தேடிவந்து முறை​யிடுவார்கள். கலெக்டர் அலுவலக ஊழியர்​களுக்கே பிரச்னை என்றால்? 

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலு​வல​கத்தில் ஆறு மாதங்களில் மட்டும் 20-க்கும் மேற்பட்ட இருசக்கர வாகனங்கள் திருடுபோயிருப்பதால், அலறுகிறார்கள் அங்கு பணியாற்றும் ஊழியர்கள்.

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

கிருஷ்ணகிரி மாவட்ட வருவாய்த் துறை அலுவலர்கள் சங்கத் தலைவரான விஜயராகவன், ''கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகம், நகரில் இருந்து மூன்று கிலோ மீட்டர் தூரத்தில், கிருஷ்ணகிரி டு ஓசூர் நெடுஞ்சாலைக்கு அருகில் இருக்கிறது. அலுவலக சுற்றுச்சுவரும் அரைகுறையாகத்தான் இருக்கிறது. அதனால், கடந்த ஆறு மாதங்களில் 20 டூ வீலர்கள் திருடுபோயின. இதில் பெரும்பாலான வண்டிகள் இங்கே பணியாற்றும் ஊழியர்களுக்குச் சொந்தமானவை. கலெக்டர் அலுவலகத்துக்கு வந்த பொதுமக்கள் வண்டிகள் ஒன்றிரண்டும் காணாமல்போயின. மாவட்ட வழங்கல் அலுவலரின் உதவியாளர் ராமகிருஷ்ணன், வருவாய் உதவியாளர் குமரவேல், மாவட்ட வளர்ச்சி முகமைப் பிரிவு கணினி இயக்குனர் பிரேம்குமார் ஆகியோர் சமீபத்தில் வண்டியைப் பறிகொடுத்தவர்கள்.

கலெக்டர் ஆபீஸ் வளாகத்திலேயே திருடுறாங்க!
கலெக்டர் ஆபீஸ் வளாகத்திலேயே திருடுறாங்க!

மொத்த மாவட்டத்தையும் திறம்பட நிர்வகிக்கத் தேவையான பணிகள் நடக்கும் இடம் கலெக்டர் அலுவலகம். அந்த அலுவலகத்​திலேயே வாகனங்களுக்குப் பாதுகாப்பு இல்லைங்கிறது வேதனையா இருக்கு. கலெக்டர் அலுவலகத்துக்கு பக்கத்திலேதான் எஸ்.பி. அலுவலகமும் இருக்கு. அப்படி இருந்தும், கொஞ்சமும் பயம் இல்லாமல் திருடர்கள் நடமாடுறாங்க. கிருஷ்ணகிரி தாலுகா போலீஸ் ஸ்டேஷன் எல்லையில் கலெக்டர் அலுவலகம் அமைந்திருப்பதால், வாகன திருட்டுகள் தொடர்பாக அங்கேதான் புகார் கொடுக்கப் போகணும். வண்டியைப் பறிகொடுத்துட்டு

கலெக்டர் ஆபீஸ் வளாகத்திலேயே திருடுறாங்க!

இப்படி புகார் கொடுக்கப் போன பலரையும் தாலுகா ஸ்டேஷன் போலீஸார் அவமரியாதையாகப் பேசி அலைக்கழிக்கிறாங்க.

கலெக்டரிடமும் மாவட்ட எஸ்.பி-யிடமும்கூட இது தொடர்பாக புகார் சொல்​லி​யாச்சு. அதற்குப் பிறகும் பைக் திருட்டு தொடருது. ஆள் பற்றாக்குறை காரணமாக ராத்திரி எட்டு மணி வரைகூட கலெக்டர் அலுவலகத்தில் பணி நடக்குது. இப்படி இருட்டிய நேரம்தான் திருடர்களுக்கு ரொம்ப வசதியாகிடுது. 'வெளியில் நிறுத்திய வண்டிக்கு என்ன ஆச்சோ?’ என்ற மன உளைச்சலோடதான் இங்குள்ள அலுவலர்களும் ஊழியர்களும் தினமும் நாட்களை நகர்த்துறாங்க. அதுமட்டுமன்றி, திருடப்பட்ட வாகனங்களை திருடர்கள் ஏதாவது குற்றச் செயல்களில் ஈடுபடுத்தினால், அதனாலும் தங்களுக்கு தேவையற்ற சிக்கல்கள் ஏற்படும் என்றும் பயப்படுறாங்க.'' என்றார்.

இதுகுறித்து கிருஷ்ணகிரி எஸ்.பி-யான செந்தில்குமாரிடம் பேசியபோது, ''சுற்றுச்சுவர் இல்லாதது திருடர்களுக்கு வசதியா இருக்கு. சுய உதவிக் குழுக்களின் பராமரிப்பில் ஒரு வாகன ஸ்டாண்ட் அமைக்கும்படி மாவட்ட நிர்வாகத்திடம் பேசியுள்ளோம். அதைச் செய்துவிட்டால், வாகனங்கள் பாதுகாப்பாக இருக்கும்'' என்றார்.

திருட்டைத் தடுக்க உங்கள் துறையின் இரும்புக் கரத்தைப் பயன்படுத்தலாமே எஸ்.பி சார்!

- எஸ்.ராஜாசெல்லம்