Published:Updated:

அதிர்ச்சி புகாரில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி!

சிவலிங்காபுரம் கோயில் பிரச்னை...

அதிர்ச்சி புகாரில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி!

சிவலிங்காபுரம் கோயில் பிரச்னை...

Published:Updated:
##~##
அதிர்ச்சி புகாரில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி!

சாராயம் நுழையாத கிராமத்தில் சாதி நுழைந்து மக்களுக்கிடையே பிரி​வினையை ஏற்படுத்திவிட்டது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில் இருந்து 20 கி.மீ. தூரத்தில் இருக்கிறது சிவலிங்​காபுரம் கிராமம். அரசியல் கட்சிகளின் கொடிக் கம்பம் இல்லாத கிராமம், டாஸ்மாக் மதுபானக் கடையை ஊருக்குள் வராமல் தடுத்த கிராமம் என்று சுற்றுவட்டாரத்தில் சிவலிங்காபுரத்துக்கு நல்ல பெயர் உண்டு. யார் கண் பட்டதோ... இப்போது, சாதிப் பிரச்னையால் சிவலிங்காபுரம் இரண்டுபட்டுக் கிடக்கிறது.

சிவலிங்காபுரத்தில் நாயக்கர், ஆசாரி (விஸ்வ​கர்மா), நாடார் என்று பல்வேறு சமுதாயங்களைச் சேர்ந்த 2,000 குடும்பத்தினர் வசிக்கின்றனர். 500 ஆண்டுகள் பழமைவாய்ந்த காளியம்மன் கோயில்தான் ஊருக்குப் பொதுவான கோயில். நாயக்கர் சமுதாயத்தினர்தான் கோயிலைப் பராமரித்திருக்கின்றனர். கோயிலின் கூரை கடந்த 2008-ம் ஆண்டு சிதிலமடைந்து விழுந்து விட, எல்லா சமுதாயத்தினரும் கலந்து பேசி கோயிலைப் புதுப்பிக்க முடிவுசெய்தனர். அதற்கு பிறகுதான் பிரச்னை ஆரம்பம்.  

அதிர்ச்சி புகாரில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி!

'நாங்களே குடும்பத்துக்கு 5,000 ரூபாய் வரி வசூலித்து கோயிலைப் புதுப்​பித்துக்​கொள்கிறோம். பிற

அதிர்ச்சி புகாரில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி!

சமுதாயத்தினர் சாமி கும்பிட்​டால் போதும்’ என்று நாயக்கர் சமுதாயத்தினர் சொல்ல... 'கோயில் எல்லோருக்கும் பொதுவானது. எனவே, எங்​களால் முடிந்ததை வரியாகக் கொடுக்கிறோம். எங்களுக்கும் கோயிலில் உரிமையுள்ளது’ என்று ஆசாரிமார் தரப்பில் எதிர்ப்புக் குரல் கிளம்பியது. இதனால், கடந்த ஐந்து ஆண்டுகளாக சிவலிங்காபுரத்தில் இருதரப்புக்கும் இடையே அடிக்கடி மோதல். பலமுறை சமாதானக் கூட்டங்கள் நடத்தியும் பிரச்னை தீரவில்லை. இதற்கிடையில், மூன்று மாதங்களுக்கு முன், 'சர்ச்சைக்குரிய காளியம்மன் கோயில் நிலம் அரசுக்கு சொந்தமானது. எனவே, அந்த நிலத்தில் நுழைய தற்காலிகமாகத் தடை விதிக்கப்பட்டுள்ளது’ என்று அந்த இடத்தைச் சுற்றி அதிகாரிகள் சீல் வைத்துவிட்டனர்.

இந்த நிலையில்... மே 18-ம் தேதி இரவில் சிவலிங்காபுரத்தில் இரு தரப்புக்கும் இடையே மோதல், வீடுகள் மீது கல்வீச்சு என்று பதற்றம் தொற்றிக்கொண்டது. சிவலிங்காபுரம் சென்று விசாரணையில் இறங்கினோம். நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்த பெரியவர் வெங்கிடசாமி, ''நாங்கள்தான் இங்கு மெஜாரிட்டியாக இருக்கிறோம். பள்ளிகளுக்கு புதிய கட்டடங்கள் கட்டுவது, கோயிலைப் பராமரிப்பது என்று எல்லா பணிகளையும் எங்களுக்குள் பணம் வசூலித்துச் செய்துவருகிறோம். காளியம்மன் கோயிலைப் பல ஆண்டுகள் நாங்கள்தான் பராமரித்துவந்தோம். இப்போது திடீரென்று எங்களுக்கும் அதில் உரிமை இருக்கிறது என்று வேண்டும் என்றே ஆசாரிமார் தரப்பினர் பிரச்னை செய்கின்றனர். இதனால், 'காளியம்மன் கோயில் அமைந்துள்ள இடம், அரசு புறம்போக்கு நிலம். எனவே, இரு தரப்பினருமே தனித்தனியாக வேறு இடத்​தில் புதிதாக கோயிலைக் கட்டிக்கொள்ளுங்கள்’என்று வருவாய்த் துறையினர் கூறிவிட்​டனர். காளியம்மன் கோயிலில் சாமி கும்பிடக் கூடாது என்றும் தடை உத்தரவு பிறப்பித்துவிட்டனர்.

கடந்த 18-ம் தேதி ஆசாரிமார் தரப்பைச் சேர்ந்த கருப்பையா தடையை மீறி தனது குடும்பத்தினருடன் காளியம்மன் கோயிலில் சாமி கும்பிடச் சென்றார். இதை நாங்கள் தடுத்தோம். அதனால், இரு

அதிர்ச்சி புகாரில் அமைச்சர் ராஜேந்திரபாலாஜி!

தரப்புக்கும் மோதல் ஏற்பட்டது. ஆனால், இந்தப் பிரச்னையில் சட்ட விரோதமாகக் கூடுதல், வன்முறையில் ஈடுபடுதல் போன்ற ஜாமினில் வெளிவர முடியாத பிரிவுகளின் கீழ் 20-க்கும் மேற்பட்டோர் மீது போலீஸார் வழக்குப் பதிவுசெய்து 10 பேரைக் கைது செய்திருக்கின்றனர். ஆசாரிமார் தரப்பில் 20 பேர் மீது வழக்குப் பதிவுசெய்துள்ளனர். ஆனால், அவர்கள் யாரையும் கைதுசெய்யவில்லை. இதற்குக் காரணம் அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி. விஸ்வகர்ம சமுதாயத்தைச் சேர்ந்த அவர், தன் சாதிக்காரர்களைக் கைதுசெய்ய வேண்டாம் என்று போலீஸாருக்கு உத்தரவிட்டுள்ளார். அதனால்தான் அதிகாரிகள் அந்தச் சாதியினருக்கு சாதகமாக நடக்கின்றனர். சிவலிங்காபுரத்தில் சாதிப் பிரச்னையை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி து£ண்டிவிடுகிறார்'' என்றார் ஆவேசமாக.

தலைமறைவாக உள்ள ஆசாரி (விஸ்வகர்மா) சமுதாயத்தைச் சேர்ந்த கருப்பை யாவைத் தொடர்புகொண்டு பேசி​னோம். ''எல்லோருக்கும் பொதுவான கோயிலைத் தங்களுக்கு மட்டுமே சொந்தம் என்று நாயக்கர் சமுதாயத்தினர் உரிமை கொண்டாடுவதால்தான் பிரச்னை. கடந்த 18-ம் தேதி எனது மகள் வயிற்றுப் பேரன் விஜய்க்கு இருக்கன்குடி கோயிலில் மொட்டை போடுவதற்காக உறவினர்கள் மற்றும் குடும்பத்தினருடன் கிளம்பிக் கொண்டிருந்தோம். ஏதோ நாங்கள் காளியம்மன் கோயிலில் சாமி கும்பிடப்போவதாக நினைத்துக்கொண்டு அவர்கள் எங்கள் மீது கல் வீசித் தாக்கினர். பெண்கள், குழந்தைகள் என்று யாரையும் அவர்கள் விட்டுவைக்கவில்லை'' என்றவரிடம், அமைச்சர் சப்போர்ட் செய்வதாக சொல்லப்படும் குற்றச்சாட்டு குறித்து கேட்டோம். ''அமைச்சர் எங்கள் சமு தாயத்தைச் சேர்ந்தவர் என்பதால், திட்டமிட்டு அவரது பெயரை இதில் இழுக்கின்றனர்'' என்றார்.

அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி​யிடம் பேசினோம். ''சிவலிங்காபுரம் கோயில் பிரச்னைக்கும் எனக்கும் எந்த சம்பந்தமும் இல்லை. எனது உதவியாளர் மற்றும் என்னைச் சுற்றியிருப்பவர்கள் எல்லாருமே நாயக்கர் சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள்தான். நான் எப்போதும் சாதி வித்தியாசம் பார்ப்பது இல்லை. என் வளர்ச்சி பிடிக்காத ராஜபாளையத்தைச் சேர்ந்த அ.தி.மு.க-வின் முக்கியப் புள்ளி ஒருவரின் து£ண்டுதலின் பேரில்தான், வேண்டும் என்றே இந்தப் பிரச்னையில் என் பெயரை இழுக்கின்றனர்'' என்றார் வருத்தத்துடன்.

சிவலிங்காபுரத்தில் அமைதி திரும்ப அதிகாரி​கள் விரைந்து நடவடிக்கை எடுக்கட்டும்.

- எம்.கார்த்தி

படங்கள்: ஆர்.எம்.முத்துராஜ்