ஸ்டாலினே ஒப்புக்கொள்கிறாரா? உளுந்தூர்பேட்டையில் சமீபத்தில் துணை முதல்வர் ஸ்டாலின் கலந்து கொண்ட விழா நடந்தது. மேடையின் கீழ் இருந்து ஒருவர், 'அவசரத்துல கட்டுறதால வீடுகள் தரம் இல்லாம இருக்கு...’ என்று கூவினார். ஸ்டாலினோ, 'அடுத்த முறையும் எங்களை ஆட்சியில் அமர்த்துங்க. அஞ்சு வருஷத்துல தரமான வீடுகளை கட்டித் தர்றோம்...’ என்றார். 'அப்ப தரம் இல்லைன்னு இவரே ஒப்புக் கொள்கிறாரா?’ என்று கேட்கிறார்கள் பொதுமக்கள்!.ராஜா தேசிங்கு சென்டிமென்ட்! சில நாட்களுக்கு முன்பு செஞ்சிக்கோட்டையில் ராஜாதேசிங்கு அரசு விழா நடந்தது. 'இந்த விழாவை நடத்தினால்... ஆட்சி கவிழ்ந்துவிடும் என்ற சென்டிமென்ட் இரு கழகங்களுக்குமே உண்டு. அதனால்தான் ஒவ்வொரு முறையும் ஆட்சி முடியும் காலத்தில் விழாவை நடத்துகிறார்கள்...’ என்று முணுமுணுக்கிறார்கள் செஞ்சி வட்டாரத்தில்!.கேமரா எல்லாம் சும்மானாச்சுக்கும்!  திருவண்ணாமலையில் செயின் பறிப்பு உள்ளிட்ட குற்றங்கள் சகஜமாகிவிட்டது. லோக்கல் காக்கிகளிடம் நிருபர்கள், 'நகர் முழுக்க 16 தானியங்கி கேமராக்கள் இருக்கிறது. அதன் உதவியால் திருடர்களை பிடிக்க முடியாதா?’ என்று கேட்டுள்ளார்கள். காக்கிகளோ, 'அதெல்லாம் ரிப்பேர் ஆகி பல மாசங்கள் ஆச்சு. சும்மானாச்சுக்கும் வெச்சிருக்கோம்...’ என்றார்களாம்!

.பதவிக்கே ஆப்பு வெச்சிடுவோம்! கோட்டை சிறை நகர கல்வித் தந்தைக்கு சமீபத்தில் பிறந்தநாள். அரசியல்வாதிகளை மிஞ்சும் அளவுக்கு போஸ்டர், ஃபிளெக்ஸ் பேனர் வைத்தார்கள். இதைக்கண்டு கடுப்பான மாநகர நிர்வாகம் , 'ஊர் எல்லாம் நாசப்படுத்தி விட்டீர்களே’ என்று கடிந்து கொள்ள... எதிர்த்தரப்போ, 'நாங்க யாரு தெரியும் இல்ல... பதவிக்கே ஆப்பு வெச்சிடுவோம்...’ என்று அன்பாக மிரட்டியதாம்!.கடமையா? கரன்ஸியா? கிருஷ்ணகிரி மாவட்டம், கரைப்பகுதிக்கு சமீபத்தில் பொறுப்பேற்ற உயர் காக்கி, இரவெல்லாம் கண்விழித்து டூட்டி பார்க்கிறார். 'கடமை உணர்ச்சியா?’ என்று கேட்டால், 'இல்லை, கரன்ஸி உணர்ச்சி’ என்கிறார்கள் உள்ளூர் காக்கிகள்! விடிய, விடிய மணல் லாரிகளை மடக்குபவர் மஞ்சள் பை நிறைய கல்லா கட்டிவிட்டுத்தான் வீடு திரும்புகிறாராம்! .ரோந்து மட்டுமே எங்க டூட்டி! கடலூர் நெடுஞ்சாலை காக்கிகளிடம், விபத்தில் சிக்கிய சிலர் உதவி கேட்டு போன் செய்து இருக்கிறார்கள். அவர்களோ, 'ரோந்துப் பணி மட்டுமே எங்கள் டூட்டி. விபத்து எல்லாம் 108 பார்த்துப்பாங்க’ என்று கைவிரித்துவிட்டார்கள். உயர் அதிகாரிகளுக்கு புகார் போயிருக்கிறது!