.மரியாதையை உயர்த்திய உறவு!.துணையானவர் வந்து திரும்பியதும் ஜவுளி மாவட்டத்து உச்ச பெண்மணிக்கு மரியாதை கூடி இருக்கிறதாம். இருவரும் கலந்துகொண்ட விழாக்களின்போதுதான் து¬ணைக்கு உச்ச பெண்மணி தூரத்து உறவு என்பது அரசியல்வாதிகளுக்கும் அதிகாரிகளுக்கும் தெரிய வந்ததாம். அதனால், அம்மணியிடம் பம்மிப் பதுங்கி மரியாதை காட்டுகிறார்கள் மாவட்ட வி.ஐ.பி-க்கள். ..இப்படியும் ஒரு கலாட்டா! .பெரம்பலூர் பகுதியில் யாரையாவது பழிவாங்க வேண்டும் என்று நினைத்தால், உடனடியாக, 'அவரிடம்தான் ஆ.ராசாவின் ரகசியங்கள் இருக்கின்றன’ என சி.பி.ஐ-க்கு ஃபேக்ஸ் தட்டிவிடுகிறார்கள். இதுவரை நூற்றுக்கும் மேற்பட்டவர்கள் மீது இப்படிப்பட்ட புகார்கள் பறந்திருக்கிறதாம். சமீபத்தில் ஒருவரைப் பற்றி இப்படிப் புகார் வர... சி.பி.ஐ. அதிகாரிகள் தேடிப்போய் இருக்கிறார்கள். அவர் ஒரு டீக்கடைக்காரராம்!..அட்வான்ஸ் ஐஸ்! .இரும்பு நகரின் அதிரடித் தலைவருக்குப் பாராட்டு விழா எடுத்த அரசப் பிரமுகர், மாவட்டத்தின் கடைக்கோடியில் 200 ஏக்கர் நிலம் வாங்கிப்போட்டு இருக்கிறாராம். அதற்கு ஏதும் சிக்கல் வந்துவிடக் கூடாது என்பதால்தான் அதிரடித் தலைவரின் மனதில் முன்கூட்டியே ஐஸ் வைத்தாராம். நிலம் வாங்கிய பணம் நித்திரையைத் தொலைத்து அலையும் இன்னொரு அரசப் பிரமுகருடையதாம்!..டெல்லி ரகசியங்கள்! .டெல்டா மாவட்டத்தில் துணையானவர் விசிட் அடித்தபோது, டெல்லி விஷயங்களை மனம்விட்டுச் சொன்னாராம் ஃபைனான்ஸ் புள்ளி. 'இதை எல்லாம் ஏன் என்னிடம் முன்கூட்டியே சொல்லவில்லை?’ என கடிந்துகொண்ட துணையானவர், அடிக்கடி போனில் பேசச்சொல்லி இருக்கிறாராம்...வாசனை... யோசனை..! .வாசனையானவர் யார் யாருக்கு ஸீட் கொடுக்கலாம் என்கிற பட்டியலை இப்போதே தயாரித்து சொந்த ஊரில் இருக்கும் சித்தப்பாவின் பார்வைக்கு வைத்தாராம். பாரம்பரியக் குடும்பத்தைச் சேர்ந்த கோட்டைப் பிரமுகரின் பெயரை முதல் பெயராக டிக் செய்துகொடுத்தாராம் சித்தப்பா!