முதல்வருக்குப் போகும் புகார்! கடந்த 8-ம் தேதி இரவு மதுரையில் இருந்து குன்றக்குடிக்கு காரில்

வந்துகொண்டு இருந்தார் குன்றக்குடி அடிகளார். அப்போது எதிர்பாராத விதமாக ஒருவர் அடிபட்டுவிட, 108-க்கு போன் செய்திருக்கிறார் அடிகளார். ஆனால், கேள்வி மேல் கேள்வியாகக் கேட்டு அவர்கள் இழுத்தடிக்க... தன்னுடைய காரிலேயே அடிபட்டவரைத் தூக்கிப் போட்டுக்கொண்டு மதுரை அப்போலோவில் அட்மிட் செய்திருக்கிறார் அடிகளார். 108 குளறுபடிகள் குறித்து முதல்வரிடம் சொல்லும் முடிவில் இருக்கிறாராம் அடிகளார்..அல்லாடும் அதிகாரிகள்! கடந்த 9-ம் தேதி தமிழகம் முழுவதும் கலைஞர் வீடு வழங்கும் திட்டத்துக்கான அடையாள அட்டை வழங்குவதாக அறிவித்து இருந்தார்கள். மதுரை மாவட்டத்தில் இதற்கான விழா ஏற்பாடுகளை பல்வேறு இடங்களில் செய்து இருந்தார்கள். ஆனால், திடீரென சென்னையில் இருந்து வந்த உத்தரவால் விழாக்கள் ரத்து செய்யப்பட்டன. இப்போது, விழாவுக்காகச் செலவு செய்த பணத்தை எந்தக் கணக்கில் எழுதுவது என்று தெரியாமல் திண்டாடி நிற்கிறார்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள்.. இது சூப்பர் ஸ்டைல்!பெரிய வீட்டு திருமணத்துக்காக வெளியூர் வந்திருந்த சூப்பர் நடிகருக்கு கல்யாண வீட்டார் சார்பில் பிரபல ஹோட்டலில் ரூம் போட்டிருந்தார்கள். ஆனால், கல்யாணத்தை முடித்துக்கொண்டு கிளம்புகையில், ஹோட்டல் அறைக்கான பில்லை தானே வலுக்கட்டாயமாய் செலுத்திவிட்டுச் சென்றாராம் சூப்பர். பல நாட்களுக்குப் பிறகு இந்தச் செய்தி வெளிவட்டாரத்தில் கசியத் தொடங்கி இருக்கிறது..எல்லாம் நன்மைக்கே..!தூக்கி அடிக்கப்பட்ட அதிகாரிக்கு மூளையில் ரத்தக் கசிவாம். ஒரு வருடம் தொடர்ந்து சிகிச்சை எடுத்தால்தான் முழுவதுமாகக் குணப்படுத்த முடியுமாம். அதனால், டம்மி பதவிக்கு வந்ததும் ஒருவிதத்தில் நல்லதுதான் என நினைக்கிறாராம் அந்த அதிகாரி!.அடடே நெருக்கம்!வெளியே வந்திருக்கும் சாதியப் புள்ளி சீறும் தலைவருடன் அடிக்கடி போனில் பேசுகிறார். அதைவைத்து அவர் தி.மு.க. பக்கம்தான் போவார் என்கிற பேச்சு அலையடிக்கிறது. அதேநேரம் இலைக்கட்சி ஆட்களின் வலையும் வேகமாகத்தான் சுழல்கிறது!