நில மோசடி குற்றச்சாட்டில் கர்நாடக மாநில உயர்நீதிமன்ற நீதிபதி தினகரன் பெயர் அடிபட்டபோது,

அது அனைத்துத் தரப்பையும் முகம் சுளிக்கவைத்தது. இந்த விவகாரம் அடங்கிய சில மாதங்களில், தேனி மாவட்டத்தைச் சேர்ந்த நடுவர் மன்ற நீதிபதிகள் மீது நில ஆக்கிரமிப்பு புகார் கிளம்பியிருப்பது தென்மாவட்ட நீதித் துறையில் பரபரப் பாகப் பேசப்படுகிறது!

ஆக்கிரமிப்பு - 1

மதுரை ஜே.எம். நீதிமன்ற நீதிபதி பார்த்தீபனுக்கு சொந்த ஊர் கம்பம். இவர் சுருளி அருவி அருகில் சுமார் 120 ஏக்கர் தோப்பைத் தனது மாமனார் மோகனராம் பெயரில் வாங்கி இருக்கிறார் என்ற தகவல் நமக்கு முதலில் கிடைத்தது. அது குறித்து விசாரித்தபோது, ''பார்த்தீபன் வாங்கியுள்ள தோப்பின்

ஓரத்தில் உள்ள ஓடையை ஆக்கிரமித்துக் கம்பி வேலி போட்டுள்ளார். இந்தப் பகுதி மக்களுக்கு இதுவரை வண்டிப்பாதையாக இருந்தது இந்த ஓடைதான். இவர் அதை வேலி போட்டு ஆக்கிரமித்ததால் வண்டி ஓட்ட வழி இல்லாமல் கஷ்டப்படுகிறோம். இதனால் விவசாய விளைபொருட்களை சந்தைக்குக் கொண்டுவர முடியாமல் தவிக்கிறோம். இதுபற்றி கலெக்டர், எஸ்.பி., அமைச்சரிடம் மனு கொடுத்தும் நிவாரணம் கிடைக்கவில்லை!'' என்று சொன்னார்கள்.

இதைத் தொடர்ந்து பார்த்தீபனது தோப்பை நாம் நேரில் பார்வையிட்டோம். ஓடையைச் சுற்றிக் கம்பி வேலி, பூட்டுடன் கேட் என கம்பீரமாகக் காட்சி அளித்தது அது. பாதிக்கப்பட்ட விவசாயி கருணன், ''20 ஏக்கரில் திராட்சை விவசாயம் செய்துள்ளேன். பார்த்தீபன், பாதையை வேலி போட்டு மறித்ததால், விளைந்த திராட்சைகளை எடுத்துச் செல்ல முடியாமல் அழுகிவிட்டன. இதனால் எனக்கு

1 லட்சம் வரை நஷ்டம்!'' என சொல்லித் தனது திராட்சைத் தோட்டத்தையும் சுற்றிக் காட்டினார். ''அரசு புறம்போக்கில் ஓடை இருப்பதற்கான நில வரைபடம், அடங்கல் இதை எல்லாம் காட்டி 'நீதிபதியான நீங்களே இப்படி சம்சாரிகள் வயிற்றில் அடிக்கிறீங்களே? நாங்கள் யாரிடம் நியாயம் கேட்பது?’ என தோப்புக்கு வந்தபோது, பார்த்தீபனிடம் முறையிட்டோம். எங்களை உட்காரவைத்து காபி கொடுக்கச் சொன்னவர், தோப்பு பங்களாவைவிட்டு வெளியே சென்று, 'நாங்கள் அவரை அடிக்க வந்ததாக’ தேனி எஸ்.பி-யான பாலகிருஷ்ணனுக்கு போன் போட்டார். உடனே போலீஸும் வந்துவிட்டது. கூடலூர் இன்ஸ்பெக்டர் ஜெயச்சந்திரன், 'நீதிபதியாக இருக்கும் நீங்களே... ஏன் சார் இப்படி பண்றீங்க’ என்று பார்த்தீபனைப் பார்த்துக் கேட்டார். அதுக்கு அவர், 'இது சிவில் மேட்டர். நீங்க தலையிட வேணாம்...’ எனச் சொல்ல, வேறு வழியில்லாமல் இன்ஸ்பெக்டர் கிளம்பிட்டார். அப்புறமா எங்ககிட்ட, 'நாங்க வெச்சதுதான் போலீஸ். பாதை கொடுக்க முடியாது. நீங்க என்ன வேணாலும் செஞ்சுக்கங்க...’ என தடாலடி யாகச் சொன்னார்.

பாதிக்கப்பட்டவர்கள் எல்லாரும் ஒன்றாக சேர்ந்து கலெக்டர் முத்துவீரன், எஸ்.பி. ஆகியோரிடம் மனு கொடுத்தோம். விசாரணை எதுவும் நடக்கலை. மூணு மாசத்துக்கு முன்னால் சாரல் விழாவுக்கு வந்த வருவாய்த் துறை அமைச்சர், டெல்லி பிரநிதி செல்வேந்திரன்கிட்டயும் மனு கொடுத்தோம். 'உடனடியா விசாரிக்கச் சொல்றேன்’னாங்க. எந்த நடவடிக்கையும் இல்லை. பார்த்தீபன் நீதிபதியாக இருப்பதால் போலீஸும், வருவாய்த் துறையும் அவருக்கு சாதகமாவே இருக்கு... பாதையில் இருக்கும் வேலியை எடுத்தா, எங்க மேல் வழக்குப் போட்டு உள்ளே தள்ளிடுவாங்கன்னு பயந்து கிடக்கிறோம்...'' என்று கருணன் விவரித்தார்.

அதையடுத்து நல்லதம்பி, பாண்டியம்மாள் ஆகியோர் நம்மிடம் பேசினர். ''பாதையை மறித்ததால், நடவு செய்துள்ள வாழைக்கு உரம் கொண்டுபோகக்கூட முடியலை. விளைந்த தேங்காய் இறக்கினால், ஒரு கிலோமீட்டர் தூரத்துக்கு தலைச் சுமையாகக் கொண்டுபோக வேண்டும். கூலி ஆள் கிடைக்காம, தேங்காய் முற்றி, மரத்திலேயே முளைவிட்டு அழுகுது. பார்த்தீபனிடம் நிலைமையை எடுத்துச் சொன்னா, 'நிலத்தை எங்களுக்குக் கொடுத்துருங்க’ன்னு நா கூசாமக் கேட்கிறார்!'' என்றனர் இயலாமையோடு.

ஆக்கிரமிப்பு - 2

கூடலூரில் இருந்து சுருளி ஆண்டவர் கோயிலுக்கு, காரங்குழி கரடு வழியாக மெட்டல் ரோடு உள்ளது. கூடலூர் சுற்றி உள்ள பதினெட்டுப் பட்டி கிராமத் தினரும் இந்த ரோட்டைத்தான் பயன்படுத்தி வந்தனர்.

இந்த ரோட்டை, ஒட்டன்சத்திரத்தில் நடுவர் மன்ற நீதிபதியாக உள்ள சரண் மற்றும் அவரது அண்ணன் வேலு ஆகியோர் ஆக்கிரமித்துத் தோப்பாக்கி விட்டதாக அடுத்த தகவல் கிடைத்து அங்கும் சென்றோம்.

வீரணத்தேவர் என்பவர், ''சுருளி மலையைச்சுற்றியுள்ள விவசாயிகள் இந்த ரோட்டின் வழியாகத்தான் விளைபொருட் களைக் கொண்டுவருவோம். சுருளி ஆறு அருகே தோப்பு வாங்கிய நீதிபதி சரண், ரோட்டை மறித்து மாட்டுக் கொட்டகை போட்டு தென்னந் தோப்பாக்கி விட்டார். இவரை எதிர்த்து ஜெயிக்க முடியாமல், 20 கிலோமீட்டர் சுற்றித்தான் தோட்டம், காடுகளுக்குப் போய்வருகிறோம். ஆக்கிரமிப்பு குறித்து மனு கொடுத்தோம். விசாரணைக்கு வந்த தாசில்தார் மனோகரன், 'நீதிபதி மேலயே புகார் கொடுக்குறீங்களே... போலீஸ் அவர் சொல்லுறதத்தான் கேக்கும்யா... ஏதாவது வழக்குப் போட்டு உள்ள தள்ளிடப் போறாங்க’ என்று சொல்லிட்டுப் போனார். வலுத்தவன் வெச்சதுதான் சட்டம்... குடிகள், யார்கிட்ட தஞ்சம் போகுறது?'' என்று வருத்தத்தைக் கொட்டினார்.

இந்த இரு ஆக்கிரமிப்புகள் குறித்தும் டி.ஆர்.ஓ-வான பிருந்தாதேவியிடம் பேசினோம். ''ஆக்கிரமிப்புகள் குறித்து சர்வே செய்துள்ளோம். விரைவில் ஆக்கிர மிப்பு வேலிகளை அகற்ற உத்தரவு வழங்குவோம்...'' என்றார்.

நீதிபதி பார்த்தீபனை சந்திக்க முயன்றோம். கடந்த 7-ம் தேதி காலை அவரது அலுவலகத்தில், நம் விசிட்டிங் கார்டை வாங்கிய அவரது உதவியாளர், 'அய்யா, உங்களை கூப்பிடுவாரு, காத் திருங்க...’ என்றார். மூன்று மணி நேரம் காத்திருந்தோம். அழைக்கவில்லை. மீண்டும் உதவியாளரிடம் நினைவுபடுத்த... அப்படியும் அழைப்பில்லை. விடாமல், மறு நாள் நீதிபதிகள் குடியிருப்புக்குச் சென்று, அவரைச் சந்திக்க அனுமதி கேட்டோம். நமது செல்போனில் பேசுவ தாகக் காவலாளி மூலமாகச் சொல்லி அனுப்பினார் பார்த்தீபன். இந்தக் கட்டுரை அச்சேறும் வரை அழைக்கவில்லை அவர்.

இன்னொரு நீதிபதியான சரணை தொடர்பு கொண்டபோது, ''நான் ஒரு நீதிபதியாக இருப்பதால், பேட்டி எதுவும் தர இயலவில்லை. இந்த விஷயத்தில், நீங்கள் விசாரித்தை எழுதிக்கொள்ளுங்கள்...'' என்றார்.

எழுதிவிட்டோம்..!