கடந்த 75 ஆண்டுகளுக்கும் மேலாகச் சான்றோர்களையும், அறிஞர் பெருமக்களையும் உருவாக்கித்

தரும் பல்கலைக் கழகங்களில், சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகம் முக்கியமானது. அதன் மூலமாக சில திடீர் பணக்காரர்கள் உருவாகி வருவதாக நமது அலுவலகத்துக்குத் தொடர்ந்து கடிதங்கள் வர... அதை வைத்து விசாரிக்க ஆரம்பித்தால், பலே ஆசாமிகள் பலரும் சிதம்பரத்தில் அலைவது நன்றாகவே தெரிந்தது!

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் 'அந்த வேலை வாங்கித் தர்றேன்... இந்த ஸீட் வாங்கித் தர்றேன்...’ என்று அலையும் புரோக்கர்கள் கையில் பல லட்சங்கள் திரண்டிருக்கிறது. கோடிகளைத் தொட்டவர்களும் நிறையவே இருக்கிறார்கள். இந்தப் புதுப்பணக்காரர்களின் கரன்ஸி கதைகளைக் கேட்டு, மலைத்துப் போனோம்.

இப்படி வளர்ந்ததாக ஐந்து நபர்களை அதிகமாகச் சொல் கிறார்கள். இதிலும் இரண்டு பேர் முக்கியமானவர்களாம். அந்த இரண்டு பேரையும் 'தில்லை நண்பர்கள்’ என்கிறார்கள்.

யார் அந்தத் தில்லை நண்பர்கள்?

கோயில் திருவிழாவா? புதிய கடைத் திறப்பா? மரணம் நேர்ந்துவிட்டதா? தேர்தலில் பிரசாரமா? எதுவாக இருந்தாலும் கூப்பிடுவது இவர்களைத்தான். கம்பீரமாக ஒலிக்கும் இவர் களின் காந்தக் குரலால் சம்பந்தப்பட்ட செய்தி, மக்களை நன்றாகவே சென்று சேர்ந்துவிடும். அந்தளவு பிரசாரத் திறமை கொண்ட இவர்கள், ஒரு அகில இந்திய கட்சியில் சேர்ந்து, அதன் மாநிலத் தலைவரான ஒருவர் பெயரால் பேரவையும் நடத்தி வருகிறார்கள். இந்த மாதிரியான பெரிய இடத்து நெருக்கங்களை வைத்து, 'எனக்கு அவரைத் தெரியும், இவரைத் தெரியும் என்றுதான் முதலில் ஆரம்பித்தார்கள். இவர்கள் இருவருக்கும் பல்கலைக்கழகத்தின் மிக முக்கியமான பிரமுகர் ஒருவர் அறிமுகம் ஆனார். அதைத் தொடர்ந்துதான் நிறைய பேர் இவர்களைத் தேடிவர ஆரம்பித்தனர்!

''எங்களுக்குன்னு அஞ்சு ஸீட் உண்டு. அதுக்கு நாங்க ரெக்கமென்ட் பண்ற ஆட்களுக்குத்தான் தருவாங்க...'' என்று இவர்கள் சொல்லி வைத்திருப்பதால் பல லட்சங்களுடன் ஆட்கள் வந்து இவர்களிடம் குவிகிறார்கள். மருத்துவமா, பொறியியலா... எல்லா ஸீட்களையும் இவர்கள் வாங்கித் தருகிறார்கள். அதைவிட கொடுமையான விஷயம், தேர்வுகளில் பாஸ் செய்வதற்காக பலரும் இவர்களிடம் பணம் கொடுக்கிறார்கள் என்பதுதான்.

''இப்படி சம்பாதித்ததால் மட்டுமே கோடிக்கணக் கான பணத்தை இவர்கள் சேர்த்திருக்க முடியாது. நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இவர்களுக்கு ஒரு ஜாக்பாட் அடித்தது... அதைப் பற்றியும் கொஞ்சம் விசாரியுங்கள்...'' என்று நமக்கு வந்த ஒரு தகவலின் பின்னணியில் நமது துழாவலைத் தொடர்ந்தோம்.

''பல்கலையின் முக்கியப் பிரமுகரின் உதவியாளராக இருந்த முருகக் கடவுளின் பெயர் கொண்டவர்தான் பல்கலையின் மிகப்பெரிய சக்தியாக விளங்கினார். அவர் பல்கலையை நிர்வகிக்கும் முக்கிய நபரின் சகோதரரும்கூட. அப்படி பவரோடு இருந்தவரிடம் கைகட்டி காலில் விழுந்து ஒரு ஸீட், ரெண்டு ஸீட் என்று வாங்கிப் பிழைப்பு நடத்திவந்தார்கள் இந்தத் தில்லை நண்பர்கள். காலை, மாலை என்று இரண்டு வேளையும் அவரது வீட்டில் ஆஜராகி, கூழைக் கும்பிடு போட்டுவிட்டுத்தான் வருவார்கள். அதனால் அந்த வீட்டில் எல்லோருக்கும் நன்கு தெரிந்தவர்களாகிவிட்டார்கள். இந்த நிலையில், திடீரென்று ஒரு நாள் மாரடைப் பால் காலமானார் அந்த சக்தி மிக்கவர். அப்போது பதறிக் கொண்டு சக்திமிக்கவரின் வீட்டுக்கு ஓடினார்கள் தில்லை நண்பர்கள்.

அங்கே வீட்டில் யாரும் இல்லை. எல்லோரும் மருத்துவ மனையில் இருந்தார்கள். பழகிய தோதோடு

ஆளில்லாத வீட்டுக் குள் நுழைந்த இந்த நண்பர்கள், சக்திமிக்கவர் தங்களிடம் பணத்தை வாங்கி எங்கே வைப்பாரோ அந்த இடத்துக்குள் தடாலடியாக நுழைந்தார்கள். இவர்களின் அதிர்ஷ்டம்... அங்கே அப்போது பல கோடிகள் இருக்க... சத்தமேயில்லாமல் அள்ளி மூட்டை கட்டிக்கொண்டு எஸ்கேப் ஆனவர்கள், அதை பாது காப்பாக மறைத்து வைத்துவிட்டு, உடனேயே பழைய படி கதறல் குரலோடு எல்லோரையும் போல் வந்து இழவு வீட்டில் கலந்தார்கள். வகைதொகை இல்லாமல் கல்லா கட்டி வைத்திருந்த அந்தப் புள்ளியின் வீட்டில் எவ்வளவு இருந்தது என்பது அவரது குடும்பத் தாருக்கே தெரியாத நிலையில், யாருக்கும் தெரியாமல் லவட்டிக் கொண்டுபோன இவர்களை யார் வந்து என்னவென்று கேட்க? அப்படி அடித்த பணத்தைக் கொண்டுதான் இப்போது மஞ்சள் குளித்துக்கொண்டு இருக்கிறார்கள்...'' என்று நீண்ட நெடிய விளக்கத்தை அளித்தார், இவர்களின் வளர்ச்சி வேகத்தைக் கண்டு வியக்கும் மாற்றுக் கட்சி அரசியல் பிரமுகர் ஒருவர்.

அப்படி அடித்த பணம் மட்டும்

25 கோடி இருக்குமாம். அதை வைத்து இருவரும் இப்போது சிதம்பரத்தில் பல சொத்துகளை வாங்கிப் போட் டுள்ளனர். அதில் மூன்றெழுத்து நிறுவனப் பெயர் கொண்டவர், ஆரம்பத்தில் பத்து ருபாய்க்குத் தவித்து நின்ற அதே தெருவிலேயே மூன்று பெரிய பங்களா டைப் வீடுகளைக் கட்டியிருக்கிறார். அக்கம் பக்கம் இருக்கும் இடங்களை அடித்துப் பிடித்து விலை பேசுகிறார். முக்கிய இரண்டு வீதிகளில் கட்டடங்கள், தனியார் பள்ளி அருகில் மிகப் பெரிய கட்டடம் ஒன்றும் இவரால் உருவாக்கப்பட்டுள்ளது. இவருக்குக் கூட்டாளியானவர், பல இடங்களில் காம்பளெக்ஸ் கட்டிவிட்டார். இருவரும் சேர்ந்து அம்மாபேட்டை பக்கம் பல ஏக்கர் நிலங்களை விலைக்கு வாங்கியுள்ளனராம்.

இவர்களின் இந்த வளர்ச்சி பற்றி வருமானவரித் துறையினருக்குத் தகவல் தெரிவித்துக் காத்திருக்கும் சிலர், ''அவர்கள் வந்து விசாரித் தால்தான் இவர்களின் முழு வண்ட வாளமும் வெளியில் தெரியவரும்...'' என்கிறார்கள் ஒரே குரலில்!