'காதல் ஹீரோ என்றால் சாதி வில்லன்...’ - நமது சமூகம்கல்லில் செதுக்கி வைத்திருக்கும் பு(பொன்)

ண்மொழி, இதுதான்! இதை வற்புறுத்தியே தன் காதலைத் தியாகம் செய்துவிட்டு, ''உங்க சாதி வெறிக்கு, நான் பலியானது கடைசியாக இருக்கட்டும். வேற யாரையும் பலியாக்க வேண்டாம்..!'' என மனதை நெக்குருக்கும் கடிதம் எழுதிவிட்டு மரணித்துவிட்டான் முத்துமணி என்ற காதலன்!

தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை - அறந்தாங்கி சாலையில் வசிப்பவர்கள் சங்கர் - அமுதா தம்பதி. இவர்களது இரண்டாவது மகன் முத்துமணி. இவர் பட்டுக்கோட்டையில் கூல்டிரிங்ஸ் கடை நடத்தி வந்தார். திடீரென்று, பாப்பாநாடு என்கிற ஊரில் உள்ள தன் நண்பர் வீட்டுக்குச் சென்ற முத்துமணி, பட்டென்று விஷம் குடித்து சுருண்டு சடலமாகிவிட்டார். இறப்பதற்கு முன்பு இவர் எழுதிய உருக்கமான கடிதம் நமக்குக் கிடைத்தது. (இதை முத்துமணியின் அண்ணன் பாண்டியராஜனிடம் காண்பித்து முத்துமணியின் கையெழுத்துதான் என உறுதிப்படுத்திக்கொண்டோம்).

அந்தக் கடிதத்தில்,

''எல்லோரும் நல்லா இருங்க. என்னையும் அந்தப் பெண்ணையும் பிரிச் சுட்டாங்க. காசுக்காக அவளை நான் லவ் பண்ணலை.

லோகு, (முத்துமணி காதலித்த பெண்ணின் தந்தை லோகநாதன்) உங்க பெண் நினைத்ததை எல்லாம் உங்களால் வாங்கித்தர முடிந்தது. ஆனால், உங்க பொண்ணு ஆசைப்பட்ட வாழ்க்கையை அமைத்துத் தர முடியலையே...

நம் உடலில் எப்போதும் ஓடுவது ரத்தம்தான். எல்லோருக்கும் அதுதான் ஓடும். உங்க சாதி வெறிக்கு நான் பலியானது கடைசியாக இருக்கட்டும்... வேற யாரையும் பலியாக்க வேண்டாம்...

காதலி! யாரும் எதையும் சொல்வார்கள். ஆனால், என்னுடைய காதல் உண்மை தான்.

அப்பா சொல்றதைக் கேள். நான் இறந்துட்டேன்னு நீ கவலைப்படாதே! அடுத்த பிறவியில் நாம் ஒன்று சேருவோம். நான் உன்னை லவ் பண்ணினது காசுக்காக இல்லை. உண்மையாக! இதை நீ புரிந்துகொண்டால் போதும்.

இதோட முடிச்சுடுங்க! என் குடும்பத்தையும் பலியாக்கி விடாதீங்க.

நான் அன்னிக்கும் இன்னிக்கும் ஒரே மாதிரிதான். என்னைப் பற்றி உனக்குத் தெரியும். நான் உன் பக்கத்துலதான் இருப்பேன். நீ எதையும் செஞ்சுக்காத... உங்களுடன் நான் எப்போதும் இருப்பேன். என்னை யாரும் பிழைக்க வைக்காதீங்க. ப்ளீஸ்...' என தொடர்கிறது அந்தக் கடிதம்.

இதைப் படித்துப் பார்த்துவிட்டுக் கதறி அழுத முத்துமணியின் அண்ணன் பாண்டியராஜன், 'அந்தப்

பொண்ணும் நாங்களும் ஒரே தெருவில்தான் இருக்கோம். இரண்டு பேருமே லவ் பண்ணினாங்க. அந்தப் பெண்ணோட அப்பா லோகுவுக்கு ரவுடிகள் தொடர்பு உண்டு. அதனால, என் தம்பியை துரத்துனாரு. என்னை அடிச்சு இழுத்துட்டுப்போய் 'முத்துமணியை ஒழுங்கா இருக்கச் சொல்லு’ன்னு மிரட்டுனாங்க. என் தம்பி இவங்களுக்குப் பயந்து திருப்பூர் போனான். இப்ப கொஞ்ச நாளைக்கு முன்னாடி பட்டுக்கோட்டை வந்தவன், ரவுடிகளின் மிரட்டலுக்காக பாப்பாநாட்டில் நண்பர் வீட்டில் தங்கினான். போன்ல மிரட்டவும், அந்தப் பெண்ணை அடக்கிவைப்பது தெரிந்ததும் இப்படி விஷம் குடிச்சுட்டான். பட்டுக்கோட்டை கவர்மென்ட் ஹாஸ்பிட்டல்ல உடனே அட்மிட் செஞ்சோம். அவன்கிட்ட மரண வாக்குமூலம் வாங்க முடியாதபடி டாக்டர்களும், போலீஸும் செஞ்சுட்டாங்க. உள்ளூர் எஸ்.ஐ. அந்த ரவுடிகளோட நெருங்கின சொந்தம். தினமும் ரவுடிகள் கூடத்தான் இருப்பார். பாப்பாநாடு போலீஸ் ஸ்டேஷன்ல புகார் கொடுத்து இருக்கிறோம். துணை முதல்வர் ஸ்டாலின்கிட்டயும் இந்த லெட்டரோட புகார் கொடுத்திருக்கோம். ஆனா, எந்த நடவடிக்கையும் இல்லை...' என்றார், வேதனையோடு.

பாப்பாநாடு காவல் நிலைய இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், 'முத்துமணி இறந்தவுடனே சம்பந்தப்பட்டவர்கள் தலைமறைவு ஆயிட்டாங்க. லோகநாதன் உள்ளிட்ட ஐந்து பேர் மீது வழக்குப் பதிவு செய்து இருக்கிறோம். விரைவில் அவர்களைப் பிடித்துவிடுவோம்!' என்றார்.

முத்துமணியின் காதல் தற்கொலையும்கூட கொடூரமான ஒரு கௌரவக் கொலைதான்!

படங்கள்: கே.குணசீலன்