தி.மு.க-வைக் கழற்றிவிட்டு அ.தி.மு.க-வுடன் காங்கிரஸ் கூட்டணி வைக்குமா என்பதுதான் தமிழக

அரசியலின் தற்போதைய மாபெரும் கேள்வி! தலைமையில் வைக்கிறார்களோ இல்லையோ... திருச்சி மாவட்டம் மணப்பாறை நகராட்சி கவுன்சிலர்கள் அந்தக் கூட்டணியை இப்போதே ஏற்படுத்திவிட்டனர்!

'தி.மு.க-வின் உட்கட்சிப் பூசல் காரணமாக மணப்பாறை நகர சாலை மேம்பாட்டு நிதி

2.50 கோடி பணிகளை செய்யத் தாமதப்படுத்தும் தி.மு.க-வைக் கண்டிக்கிறோம் - இப்படிக்கு அ.தி.மு.க., காங்கிரஸ், கம்யூனிஸ்ட் நிர்வாகிகள்’ என்று நகராட்சி அலுவலக நுழைவாயிலின் ஒரு பக்கம் போர்டு வைக்கப்பட்டு இருக்க...

'சாலை மேம்பாட்டுக்காக ஒதுக்கப்பட்ட

2.50 கோடியை முறைகேடாகப் பயன்படுத்தித் தரமற்ற பணி

களைச் செய்து, கமிஷன் தொகை பெறத் துடிக்கும் சந்தர்ப்பவாதக் கூட்டணியைக் கண்டிக்கிறோம் - இப்படிக்கு நகர் நலன் விரும்பிகள் மற்றும் பொதுமக்கள்’ என்று தி.மு.க-வினர், நகராட்சி அலுவலக நுழைவாயிலின் இன்னொரு பக்கம் பதில் போர்டு வைக்க... பரபரத்துக் கிடக்கிறது மணப்பாறை நகராட்சி!

அ.தி.மு.க - காங்கிரஸ் கூட்டணிக்கு காரணமாக இருக்கும்

2.50 கோடி விவ காரத்தை விசாரித்தோம். ''கடந்த அக்டோபர் இறுதியில் தமிழகத்தில் பல்வேறு நகராட்சிகளுக்கும் சாலை மேம்பாட்டு நிதியாக பல கோடி ரூபாய் நகராட்சிகள் நிர்வாக ஆணையத்தால் ஒதுக்கீடு செய்யப்பட்டது. அந்த வகையில் மணப்பாறை நகராட்சிக்கு

2.5 கோடி ஒதுக்கீடானது. ஒப்பந்தப் பணிகளை எல்லாம் இ-டெண்டர் மூலமாகத்தான் எடுக்க வேண்டும் என்பது உத்தரவு. நவம்பர் 1-ம் தேதி டெண்டர் என்று அறிவிக்கப்பட்டது. ஆனால், மணப்பாறை நகராட்சி கமிஷனராக இருந்த அருணாசலம், நகராட்சியில் பதிவு செய்திருந்த ஒப்பந்ததாரர்களுக்கு நவம்பர் 2-ம் தேதி டெண்டர் என்று தகவல் அனுப்பிவிட்டார். சரியாக 1-ம் தேதி ஆர்.ஏ.ராமசாமி என்ற கான்ட்ராக்டர் டென்டர் விண்ணப்பம் அனுப்ப... அவருக்கு கான்ட்ராக்ட் கிடைத்துவிட்டது.

'2-ம் தேதி என்று நகராட்சி கமிஷனர் தவறான தேதியை சொன்னதால்தான், எங்களால் டெண்டரில் கலந்துகொள்ள முடியவில்லை. அதனால், இந்த டெண்டர் செல்லாது என்று அறிவிக்கவேண்டும்!’ என்று சில கான்ட்ராக்டர்கள் மதுரை உயர் நீதிமன்றத்துக்கு விவகாரத்தைக் கொண்டு செல்ல... வழக்கை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம், நகராட்சி கமிஷனர் அருணா சலத்திடம் விளக்கம் கேட்டது.

'1-ம் தேதி என்பதற்கு பதிலாக, 2-ம் தேதி என்று தவறுதலாகத் தகவல் அனுப்பிவிட்டேன். வருந்துகிறேன்’ என்று கோர்ட்டில் பதில் சொன்ன கமிஷனர், டெண்டரை கேன்சல் செய்து, மறு டெண்டர் வைக்கிறேன்’ என்றார். அதன் பேரில்தான் வழக்கு முடிவுக்கு வந்தது. இந்த விவகாரத்தினால், நகராட்சி கமிஷனராக இருந்த அருணாசலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டார்!'' என்று சொல்கிறார்கள்.

அடுத்து நவம்பர் 29-ம் தேதி மறு டெண்டர் நடப்பதாக அறிவிக்கப்பட்டது. அதையாவது இவர்கள் ஒழுங்காக நடத்தியிருக்க வேண்டும். அதிலும் பிரச்னைதான்!

அந்த விவகாரத்தை அ.தி.மு.க. கவுன்சிலரான ராமமூர்த்தி நம்மிடம் விளக்கினார். ''நவம்பர் 29-ம் தேதி மறு டெண்டர் என்று அறிவிக்கப்பட்டது. ஆர்.ஏ.ராமசாமியும், மாத்தூர் கருப்பையாவும் டெண்டர் எடுக்கத் தயாராகி இருக்காங்க. இதுல ஆர்.ஏ.ராமசாமி, மாவட்ட தி.மு.க. இளைஞரணி துணை அமைப்பாளரா இருக்காரு. அவரை டெண்டர் எடுத்துக்கச் சொல்லி அமைச்சர் நேருவே சொன்னாராம். மாத்தூர் கருப்பையாவும் தி.மு.க-காரர்தான். இவரை டெண்டர் எடுத்துக்கச் சொல்லி அமைச்சர் நேருவோட தம்பி ராமஜெயம் சொன்னாராம். அதனால யாரு எடுத்துக்குறதுன்னு ரெண்டு பேருக்குள்ள பிரச்னை ஆகியிருக்கு. கடைசியில ரெண்டு பேருமே விண்ணப்பம் போட்டாங்க. டெண்டர் ஃபாரத்துல மாத்தூர் கருப்பையா தனக்கான தொகையை பூர்த்தி செய்யல. அதுனால சாலை போட நிதி ஒதுக்கியும் சாலை போட முடியாமக் கிடக்கு. அதனாலதான் தி.மு.க-வோட கோஷ்டிப் பூசலைக் கண்டிச்சு போர்டு வெச்சோம்!'' என்றார்.

காங்கிரஸ் கவுன்சிலரான சங்கர், ''நகராட்சியில பல சாலைகள் ரொம்ப மோசமா இருக்குது. அதையெல்லாம் இந்த நிதியால்தான் சரிசெய்ய முடியும். நகராட் சிக்குக் கொடுக்கப்பட்ட

2.5 கோடி தி.மு.க. உட்கட்சிப் பூசலால திரும்பிப் போயிடக் கூடாது. அதனாலதான் அ.தி.மு.க - காங்கிரஸ் - கம்யூனிஸ்ட் எல்லாரும் ஒண்ணா சேர்ந்து போராடுறோம்...'' என்றார்.

''தி.மு.க. அரசு ஒதுக்கிய நிதியை தி.மு.க-காரங்களே தடுக்குறது நியாயமா? இதைக் கேட்டு நாங்க போர்டு வெச்சா, அதுக்குப் பதில் சொல்றதை விட்டுட்டு, கமிஷன் தொகைக்காகத்தான் நாங்க ஒண்ணு சேர்ந்திருக்கோம்னு பதில் போர்டு வைக்கிறாங்க. தி.மு.க-வுல உட்கட்சிப் பூசலே இல்லைன்னு அவங்க மன சாட்சியைத் தொட்டு சொல்லச் சொல்லுங்க...'' என்றார், இந்திய கம்யூனிஸ்ட் கவுன்சிலரான சவுக்கத் அலி.

''பொதுமக்கள் மற்றும் நகர் நலன் விரும்பிகள் என்ற பெயரில் தி.மு.க. கவுன்சிலர்கள் மூவரை போர்டு வைக்கத் தூண்டுகோலாக இருந்தது முன்னாள் நகர்மன்றத் தலைவரான எல்.எஸ்.கன்னையன்தான்!'' என்று மூன்று கட்சிகளைச் சேர்ந்த கவுன்சிலர்களும் ஒருமித்த குரலில் சொல்ல... அவரை சந்தித்தோம்.

''நகராட்சிக்கு ஒதுக்கப் பட்ட நிதி திரும்பிப் போகவே போகாது. பணி கள் நிச்சயம் நடக்கும். இரண்டு முறை டெண்டர் கேன்சல் ஆனதுக்குக் காரணம், தி.மு.க-வின் உட்கட்சி மோதல் இல்லை. முதல்ல நடந்தது, நகராட்சி கமிஷனரோட தவறு. ரெண்டாவது டெண்டர்ல மாத்தூர் கருப்பையா மட்டும்தான் அதை எடுக்கும் எண்ணத்தில் இருந்தார். அவர் இன்டர்நெட் மூலம் டெண்டருக்கு விண்ணப்பிக்க முயற்சி செஞ்சப்ப... நெட் சரியா வேலை செய்யாததால, முடியல. பெட்டியில போட்டது டம்மி டெண்டர் என்பதால், அதை முழுமையா பூர்த்தி செய்யல. இதுதான் நடந்தது. தேவையில்லாம இதுல அ.தி.மு.க-காரங்க தலையிட்டு, தி.மு.க. உட்கட்சிப் பிரச்னைன்னு தூண்டி விடுறாங்க. அமைச்சர் தலையிட்டார், தம்பி தலையிட்டாருன்னு இஷ்டத்துக்கும் கிளப்பறாங்க. அதுக்கு ஏதாவது ஆதாரம் இருக்குதா? அ.தி.மு.க-வோட பாலிடிக்ஸுக்கு காங்கிரஸ் கவுன்சிலர்களும் துணை போறதுதான் வேதனையா இருக்குது. டெண்டர் தள்ளிப் போறதால, அவங்களுக்கு கமிஷன் கிடைக்குறது தாமதமாகுதேன்னுதான் கிடந்து துடிக்கிறாங்க. மக்கள் மேல எந்த அக் கறையும் இல்லை!'' என்று முடித்தார் அவர்.

படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்