மீண்டும் மாவட்டச் செயலாளர் பதவி மகுடத்தை என்.கே.கே.பி.ராஜாவுக்கு தி.மு.க. தலைமை

கொடுத்ததும், மனிதர் தலைகால் புரியாமல் பல காரியங்களைச் செய்து வருவதாக பல்வேறு தரப்பில் இருந்தும் புகார் மழைகள் பெய்ய ஆரம்பித்திருக்கின்றன ஈரோடு வட்டாரத்தில்! 'ராஜா தனது தொகுதியை மறந்துவிட்டு மற்ற தொகுதிகளில்... நலத்திட்ட உதவிகள், அடிக்கல் நாட்டுவிழா, ரேஷன் கடை திறப்புவிழா என அகலக் கால் வைக்கிறார்...’ என்று சிலர் முணுமுணுக்க... சாம்பிளாக பெருந்துறை அ.தி.மு.க. எம்.எல்.ஏ-வான பொன்னுதுரையைச் சந்தித்தோம்!

''ராஜாவுக்கு திடீர் என்று எப்படி பெருந்துறை மீது இவ்வளவு பற்று வந்தது என்று தெரியவில்லை. இங்குதான் நில அபகரிப்பு செய்தே இவருக்குப் பதவி போனது. ஒருவேளை, இங்கு இருக்கும் மக்களை

திசைதிருப்ப நடிக்கிறார் போலிருக்கிறது... ஆனால், பெருந்துறை எங்க கோட்டை. அதை ராஜாவாலும் மட்டுமின்றி அவர் அப்பா பெரியசாமியாலும் அசைக்க முடியாது...'' என்று அனலாகச் சீறியவர்,

''பெருந்துறையில் தி.மு.க. பொதுக்கூட்டமோ, தெருமுனைப் பிரசாரமோ எதையும் அவர் செய்யட்டும். அது அவரது ஜனநாயக உரிமை... ஆனால், இவரது தொகுதிக்குட்பட்ட ஈரோடு மாநகராட்சியின் ஊழியருக்கே பன்றிக் காய்ச்சல் வந்து இறந்துவிட்டார். இதில் இருந்தே ஈரோடு எப்படி இருக்கும் என்று நீங்களே கணித்துக்கொள்ளுங்கள். ஈரோட்டின் மெயின் பகுதியான பன்னீர்செல்வம் பார்க் அருகில், பாலம் கட்டுவதாகச் சொல்லி குழிகளைத் தோண்டிவிட்டு... இன்னும் பாலம் கட்டவும் இல்லை... குழிகளை மூடவும் இல்லை. இதனால், பொதுமக்கள் கடும் அவதிப்படுகிறார்கள்.

பெருந்துறை சுற்றி விவசாயிகள் அதிகம். இவர்கள் பயிரிடும் மஞ்சளைச் சேமிக்க முடியவில்லை. 'கிடங்குகளோடு கூடிய மஞ்சள் வணிக வளாகம் அமைத்துத் தர வேண்டும்!’ என்று பல முறை சட்டசபையில் போராடினோம். தி.மு.க., காது கொடுக்கவே இல்லை. கடந்த மாதம் ஸ்டாலின் ஈரோடு வந்தபோது, 'பெருந்துறையில் மஞ்சள் வணிக வளாகம் கட்டிக் கொடுப்பதாக’ச் சொன்னார். அதற் காகக் கடந்த வாரத்தில் பூமி பூஜையும் போட்டார் ராஜா. அரசு விழாவை கட்சி விழாபோல செய்கிறார். முறைப்படி பத்திரிகை எதுவும் அடிக்கவில்லை. தொகுதி எம்.எல்.ஏ. என்ற முறையில் என்னிடம் ஒரு வார்த்தைகூட சொல்லவில்லை. இவரே, என் தொகுதியில் ரேஷன் கடை திறக்கிறார். இவர் தி.மு.க. கட்சியில் ராஜாவாக இருக்கலாம். ஆனால், இப்படி தன்னிச்சையாகச் செய்வது அநாகரிகமானது...

இதைவிட்டு, பெருந்துறை ஐ.ஆர்.டி. மருத்துவமனையில் ரிப்பேராக இருக்கும் சி.டி. ஸ்கேனை அவர் சரி செய்து தரலாம். கடும் தண்ணீர் பிரச்னையைத் தீர்க்கலாம். ரொம்ப காலத்துக்கு முன் ஆரம்பிக்கப்பட்ட புறவழிச் சாலைத் திட்டம் நொண்டிக்கொண்டு இருக்கிறதே, இதை முடிக்கலாமே... இதை எல்லாம்

செய்தால் நான் சபாஷ் போடுவேன்! கடந்த சட்டமன்றத் தேர்தலில், 'நான் அமைச்சரானால் உடனே பெருந்துறையில் விசைத்தறி பூங்கா அமைப் பேன்’ என்று வாக்குறுதி கொடுத்தார். அது வெத்து வாக்குறுதியாக இருக்கிறது...

ஆனால், பெருந்துறையை குப்பைத் துறையாக மாற்ற முயற்சித்த தி.மு.க. அரசு... ஈரோடு, சேலம், தர்மபுரி, நாமக்கல், கரூர், திண்டுக்கல், கோவை, நீலகிரி என ஒன்பது மாவட்டங்களில் இருந்து குப்பைகளைக் கொண்டுவந்து, 'திடக் கழிவு மேலாண்மை’ என்ற பெயரில் 28,900 மெட்ரிக் டன் நச்சுக் கழிவுகளைக் கொட்டி இருக்கிறது. நாங்கள் பெரிய அளவில் போராட்டம் செய்ததால் தற்காலிகமாக அதை நிறுத்திவைத்து இருக்கிறார்கள். நான்கு ஆண்டுகளாக சட்டமன்றத்தில் பல திட்டங்களுக்காகக் கோரிக்கை வைத்தேன். ஆனால் கோபியும், பெருந்துறையும் அ.தி.மு.க. தொகுதி என்பதால், எந்தத் திட்டங்களையும் கொடுக்கவே இல்லை...'' என்று கொதித்தார் பொன்னு துரை.

என்.கே.கே.பி.ராஜாவிடம் விளக்கம் கேட்டோம். ''பொன்னுதுரை தன் தொகுதியில் நடக்கும் எந்த அரசு நிகழ்ச்சியிலும் கலந்துகொள்ள மாட்டார். பத்திரிகையில் அவர் பெயரைப் போட்டாலும் விழாவுக்கு வர மாட்டார். அதனால், அவர் சொல்லுவதை விட்டுத் தள்ளுங்கள். தி.மு.க. ஆட்சியில் பெருந்துறை தொகுதிக்கு எல்லா வேலைகளும் செய்து முடித்துவிட்டோம். சாலை போடுவதில் இருந்து கூட்டுக் குடிநீர் திட்டம், பேருந்து நிலையம் என பலதையும் கொடுத்திருக்கிறோம். ஆனால், அவர்கள் அம்மா ஆட்சியில் பெருந்துறைக்கு ஒரு திட்டமாவது செய்தார்கள் என்று சொல்லுங்கள் பார்க்கலாம்... எங்களுடைய முயற்சியால்தான் திடக் கழிவு மேலாண்மை திட்டத்தை நிறுத்திவைத்து இருக்கிறோம். விசைத்தறி தொழில்நுட்பப் பூங்காவை குமாரபாளையம் முதல்கொண்டு அனைத்துப் பகுதிகளிலும் செய்துவிட்டோம். பெருந்துறையிலும் இடம் பார்த்து பூமி பூஜை போட்டுவிட்டோம். அதை விரைவில் கட்டி முடிப்போம்!'' என்றார்.

படம்: க.தனசேகரன்