டாக்டர் சுப்பராயன் முதல மைச்சராகப் பதவியேற்று 84 ஆண்டுகள் நிறைவு பெற்றதற்கான ஆண்டு

விழா, திருச்செங்கோட்டில் நடை பெற்றது. இவர்தான் முன்னாள் மத்திய அமைச்சர் ரங்கராஜன் குமாரமங்கலத்தின் கொள்ளுத் தாத்தா.

சுதந்திரம் பெறுவதற்கு முன்பு சென்னை மாகாணத்தின் முதல்வராக இருந்தவர் இந்தசுப்ப ராயன். இந்த விழாவுக்கு ரங்க ராஜன் குமாரமங்கலத்தின் வாரி சான மோகன் குமாரமங்கலம் அமெரிக்காவில் இருந்து வந்திருந் தார். மைக்ரோ சாஃப்ட் நிறுவனத் தில் சாஃப்ட்வேர் இன்ஜினீயராக இருக்கிறார் அவர்.

மோகன் குமாரமங்கலம் பேசும்போது தன்னுடைய அரசியல் ஆசையை மெள்ள வெளிப்படுத்தினார். ''அரசியலிலும் பொது வாழ்க்கையிலும் நான்காவது தலைமுறையாக எங்கள் குடும்பம் சேவை செய்கிறது. சுதந்திரப் போராட்டத்திலும் எங்கள் குடும்பத்தினர் பங்கு பெற்றவர்கள் என்பதை

நினைக்கும்போது, எனக்குப் பெருமையாக உள்ளது. இந்த குடும்பத்தின் பேரைக் காப்பாற்ற நான்காவது தலைமுறையாக நானும் பொது வாழ்க்கையில் ஈடுபடும் முடிவுக்கு வந்துவிட்டேன். அதுக்காகத்தான் அமெரிக்காவில் இருந்து கிளம்பி வந்துள்ளேன். இனி தமிழ்நாட்டு மக்களுக்காகத் தொடர்ந்து பாடுபடுவேன்!'' என்று பேசினார். தமிழ் தெரியாததால்... ஆங்கிலத்தில் எழுதி வைத்துக்கொண்டு அதைத் தமிழில் பேசினார்.

''மோகன் ஸ்கூல்ல படிச்சதெல்லாம் டெல்லியிலதான். அதுக்குப் பிறகு அமெரிக்கா போனவரு அங்கேயே செட்டிலாகிட்டாரு. அமெரிக்காவுல இருக்கும்போதுதான் ராகுல் காந்தியோட அறிமுகம் கிடைச்சிருக்கு. இந்திய அரசியலைப் பத்தி ராகுல் மூலமா விசாரிச்சுத் தெரிஞ்சிருக்காரு. 'பாரம்பரியம் மிக்க அரசியல் குடும்பத்துல பொறந்துட்டு நீ எதுக்கு அமெரிக்காவுல இருக்கே? இந்தியாவுக்கு வந்துடு... உன்னைப் போல துடிப்பானவங்கதான் அரசியலுக்கு வேணும்’னு மோகனை ராகுல்தான் கூப்பிட்டிருக்காரு.

மாசம் பல லட்சம் சம்பாதிக்கிறதை விட்டுட்டு இவரும் கிளம்பி வந்துட்டாரு. வந்த கையோடு அரசியல் கட்சியில சேர மோகனுக்கு உடன்பாடு இல்ல. முதல் கட்டமா தமிழ்நாடு முழுக்க கிராமம் கிராமமா போகப் போறாரு. மக்களோட அடிப்படைப் பிரச்னைகளை பத்தி ஒரு சர்வே பண்ணப் போறாரு. அதுக்குப் பிறகு அந்தப் பிரச்னைகளை எப்படித் தீர்க்கறதுன்னு ஒரு புராஜெக்ட் ரிப்போர்ட் ரெடி பண்ணி, அதை ராகுல்கிட்ட காட்டிட்டுத்தான் காங்கிரஸ்ல இணையப் போறாரு. கண்டிப்பா காங்கிரஸ்ல மோகனுக்கு நல்ல எதிர்காலம் இருக்கு. அடுத்து வர்ற நாடாளுமன்றத் தேர்தல்லயும் போட்டியிடப் போறாரு...'' என்று மோகன் குமாரமங்கலத்தின் நண்பர்கள் சொல்கிறார்கள்.

மோகன் குமாரமங்கலத்திடம் பேசினோம். ''தமிழ்நாட்டு அரசியலைப் பத்தி எனக்குப் பெருசா எதுவும் தெரியாது. எங்க அப்பா, தாத்தா வாழ்ந்த இந்த மண்ணுக்கும் மக்களுக்கும் ஏதாவது செய்யணும். அதான் என் முதல் வேலை. அதற்கான பணிகள்லதான் இப்போ ஈடுபட்டிருக்கேன். அரசியலுக்கு எப்போ வரப் போறேன், என்ன செய்யப் போறேன்னு இன்னும் எதுவும் பிளான் பண்ணல. ஆனா, கண்டிப்பா வருவேன். அதுல எந்த சந்தேகமும் இல்ல...'' என்றார் உறுதியாக.

வெல்கம்!

படங்கள்: எம்.விஜயகுமார்