துணை முதல்வர் ஸ்டாலின் கைகளால் திறந்து வைக்கப்பட்ட சுனாமி குடியிருப்புகள், 'நான்கு மாதங்களில் இடிந்து வருகிறது’ என கிளம்பி வரும் புகாரால், பரபரப்பாகிக் கிடக்கிறது தூத்துக்குடி!

கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி பனிமய மாதா ஆலயத் திருவிழா, மாநகராட்சியின் புதிய கட்டடத் திறப்பு

. விழா, புதிய அனல்மின் நிலையத்துக்கான அடிக்கல் நாட்டுவிழா என அடுக்கடுக்கான விழாக்களில் கலந்துகொண்டார் துணை முதல்வர் ஸ்டாலின். அப்போது அவர் மாப்பிள்ளையூரணி பகுதியில் சுமார் . 27 கோடியே 27 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட 941 சுனாமி குடியிருப்பு வீடுகளையும் திறந்துவைத்தார். தற்போது, நான்கு மாதங்களே கடந்திருக்கும் நிலையில், 'தரமில்லாமல் கட்டப்பட்டதால் வீடுகள் இடிந்து வருகின்றன’ என்றும், 'இரவு நேரங்களில் வீடுகளுக்குள் பாம்புகள் படையெடுத்து வருகின்றன’ என்றும் புகார்கள் வாசிக்கின்றனர் வசிப்பாளர்கள்..
சுனாமி குடியிருப்பில் வசிக்கும் விஜிலின்ஸ் என்பவரைச் சந்தித்தோம். ''எங்களுக்குச் சொந்தமா ஒரு வீடு கிடைச்சிடுச்சுன்னு முதல்ல ரொம்ப சந்தோஷப்பட்டோம். ஆனா, தரமில்லாம கட்டியிருக்கிற இந்த வீடுகள்ல குடியிருக்கவே இப்போ பயந்துகிட்டு இருக்கோம். குடிசையில இருந்தாக்கூட பயமில்லாம இருக்கலாம். திறப்புவிழா நடத்தி நாலு மாசமாகியும், இன்னமும் கரன்ட் சப்ளையோ தண்ணீர் சப்ளையோ செய்து கொடுக்கலை. அதனால கொஞ்சம் பேர்தான் குடியேறினாங்க. மீதி வீடெல்லாம்

சும்மாதான் கிடக்கு. அதோட, ராத்திரியானா அடை யாளம் தெரியாத ஆட்கள் நடமாடுறாங்க. அவங்க சும்மா கிடக்கிற வீட்டோட ஏணிப் படிக்கட்டுக்குக் கீழே ஒளிஞ்சுக்கிறாங்க. அவங்க அங்கே என்ன செய்யுறாங்கன்னு பார்க்கிறதுக்குக்கூட எங்களுக்குத் தைரியம் இல்லை. இதுக்கிடையில ராத்திரி நேரத்துல பாம்புகள் நிறைய வருது. அப்படி வந்த பாம்புகள், என்னையும் என் மகனையும் கடிச்சிட்டுது. உடனே ஆஸ்பத்திரிக்குப் போய் வைத்தியம் பார்த்ததாலதான் இப்ப உங்ககிட்ட பேசிக்கிட்டு இருக்கேன். அரசாங்கம் எங்களுக்கு இதுக்கெல்லாம் தீர்வு செஞ்சு தரணும்...'' என்றார் சலிப்போடு.

இது குறித்து நீதிமன்றத்தில் வழக்கு தொடரத் தயாராகி வரும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தூத்துக்குடி மாவட்டச் செயலாளரான கனகராஜ், ''சுனாமியால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு எங்கி ருந்தோ சில புண்ணியவான்கள் உதவி செய்யுறாங்க. அதை, இந்த மக்கள் பயன்படுத்துகிற வகையில் செய்யவேண்டிய அரசு, அதிலேயும் ஊழல் செய்யுது. 'ரோடு போடுறதிலும் குளம் வெட்டுறதிலும்தான் கமிஷன் வாங்குவாங்க’ன்னு கேள்விப்பட்டு இருக் கோம். ஆனா, இங்கே ஏழைகள் குடியிருக்க வீடு கட்டியதிலும் கமிஷன் பார்த்திருக்காங்க. இதை எப்படிச் சொல்றேன்னா, 235 சதூர அடி கொண்ட

ஒவ்வொரு வீட்டுக்கும்

2 லட்சத்து 10 ஆயிரம் வீதம் ஒதுக்கப்பட்டிருக்கு. அதாவது, கிட்டத்தட்ட ஒரு சதுர அடிக்கு

1,000 வரை நிதி ஒதுக்கப்பட்டிருக்கு. அந்தப் பணத்தில் வீடு கட்டும்போது சிமென்ட், மணல், ஜல்லி எவ்வளவு போடணும்னும் எஸ்டிமேட் தரப்பட்டிருக்கு. இதெல்லாம் போக ஒவ்வொரு வீட்டுக்கும் கட்டடம் அல்லாத அடிப்படைத் தேவைகளுக்காக

40 ஆயிரம் தந்துருக்காங்க. இதெல்லாம் பண்ணியும் இங்கே வீடுகள் வீடுகளாகவே இல்லை. சிமென்ட், மணல், ஜல்லி எல்லாம் குறைச்சுட்டாங்க. அதனால தான் நிறைய வீடுகளில் கால் வைத்தாலே தரை பொலபொலன்னு உள்வாங்குது. சுவர்கள் எல்லாம் விரிசல் ஏற்பட்டிருக்கு. மேல் மாடி வீட்டின் டாய்லெட் தண்ணீர் கீழ்த்தள வீட்டுக்குள் ஒழுகுது. அதுபோல நிறைய வீட்டில் டாய்லெட் பேசின் கீழே சாந்துக் கலவையே போடலை. வெறும் மணலை போட்டு வெச்சிட்டாங்க. தண்ணியை அதுல ஊத்தியதுமே கரைஞ்சு வெளியில வந்துடுது. தண்ணீரைச் சேமித்து வைக்க ஒரு சிறு தொட்டிகூட கட்டிக் கொடுக்கலை. நிறைய சுவர்கள் சாய்ஞ்சுருச்சு. கதவுகள் திறந்தால் மூட முடியலை... மூடியிருந்தால் திறக்க முடியலை. மேலும், தரமில்லாத தள ஓடுகள் பதிக்கப்பட்டதால், மழைத் தண்ணீர் நல்லாவே ஒழுகுது. நிறைய வீடுகள்ல பாத்ரூம்ல பைப் லைனும் போடலை...'' என்று குறைபாடுகளை அடுக்கினார்.

''உடனே உயர்மட்டக் குழு ஒன்றை அமைச்சு இந்தக் கட்டடங்களை அரசு ஆய்வு செய்யணும். விதிகளுக்கு மாறாகக் கட்டிய கட்டட கான்ட் ராக்டர்களின் லைசென்ஸை ரத்து செய்யணும். அவர்கள் இதில் அடித்த தொகையைத் திரும்பப் பெறணும். இதுக்குத் துணை போன அதிகாரிகள் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கணும். இதை எல்லாம் கேட்டு கோர்ட்டில் வழக்குத் தொடுக்கத் தயாராகி வருகிறோம்...'' என்றும் இவர்கள் கோரிக்கை வைக்கிறார்கள்.

இந்த புகார்கள் குறித்து தூத்துக்குடி மாவட்டக் கலெக்டரான மகேசுவரனிடம் பேசினோம். ''எங்கிட்டேயும் இது சம்பந்தமான புகார் வந்துச்சு. இந்த பில்டிங் வேலை நடந்து முடிஞ்சு திறப்புவிழா நடந்தப்போ எல்லாம் நான் இங்கே கிடையாது. இருந்தாலும் புகார் பற்றிய உண்மை நிலையை விசாரிக்கச் சொல்லி ஒரு அதிகாரியை நியமிக்க முடிவெடுத்து இருக்கேன். அவர் பதிலைப் பெற்று, மேற்கொண்டு என்ன செய்ய வேண்டுமோ அதை செய்வோம்!'' என்றார்.

படங்கள்: ஏ.சிதம்பரம்