Published:Updated:

ரவுடி சகோதரர்கள் பிடியில் ஒரு கிராமம்!

குலை நடுங்கும் குன்றத்தூர் ஏரியா!

ரவுடி சகோதரர்கள் பிடியில் ஒரு கிராமம்!

குலை நடுங்கும் குன்றத்தூர் ஏரியா!

Published:Updated:
ரவுடி சகோதரர்கள் பிடியில் ஒரு கிராமம்!
##~##

குன்றத்தூர் அருகே உள்ள கெலடிப்பேட்டை கிராமத்தைச் சேர்ந்தவர் மதன்ராஜ். அந்தப் பகுதியின் எம்.ஜி.ஆர். மன்ற இளைஞர் அணி செயலாளராக இருந்தார். கடந்த 11-ம் தேதி அவர் மீது, ஒரு கும்பல் வெடிகுண்டுகளை வீசியதோடு, அரிவாளால் சரமாரியாக வெட்டியது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'கூலிப்படை உதவியுடன் இந்த சம்பவத்தை அரங்கேற்றியது, சிறுகளத்துர் ஊராட்சித் தலைவர் ஹரி கிருஷ்ணன் மற்றும் அவரது சகோதரர்கள் கிருபாகரன், வைரம் என்ற வைரமுத்து ஆகியோர்தான்!’ என்று ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டது போலீஸ். இதைத் தெரிந்து கொண்ட வைரமுத்து, போலீஸிடம் சரண் அடைந்து விட்டார். கிருபாகரன் கைது செய்யப் பட்டுள்ளார். ஹரிகிருஷ்ணன் தலைமறைவாக உள்ளார். குன்றத்தூர் சென்று இவர்களைப் பற்றிக் கேட்டால் குலையே நடுங்குகிறது!

ரவுடி சகோதரர்கள் பிடியில் ஒரு கிராமம்!

இப்போது கொலை செய்யப்பட்டு இருக்கும் மதன் ராஜின் தந்தை அன்பு, கடந்த 2003-ம் ஆண்டு,

ரவுடி சகோதரர்கள் பிடியில் ஒரு கிராமம்!

இதேபோலக் கொலை செய்யப்பட்டு இருக்கிறார். மதனுடைய அம்மா ரஞ்சிதம், 96-ம் ஆண்டில் இருந்து 2006-ம் ஆண்டு வரை சிறுகளத்தூர் ஊராட்சித் தலைவராக இருந்தார். அந்த நேரத்தில், அவர் கணவர் அன்புவுக்கு அரசியலில் ஏறுமுகமாக இருந்தது. இதைப் பொறுக்க முடியாமல்தான் அவரைக் கொலை செய்து இருக்கிறார்கள். ''அரசியல் ரீதியாக அவர்கள் குடும்பம் வளர்வது தங்களுக்கு சாதகமானது அல்ல என்பதால், ஹரிகிருஷ்ணன் சகோ தரர்கள் அவரை தீர்த்துக் கட்டினார்கள்...'' என்று குன்றத்தூர் வட்டாரத்தில் பேச்சு இருக்கிறது. இந்த நிலை யில்தான் மதன் கொலை நடந்துள்ளது. இந்தத் தொடர் கொலைகள் அந்த வட்டார மக்களை பீதியில் உறைய வைத்துள்ளது.

கடந்த வாரம் மகளிர் சுயஉதவிக் குழுவைச் சேர்ந்த 500-க்கும் மேற்பட்ட பெண்கள், சிறுகளத்தூரில் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தி, காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தை முற்றுகை யிட்டனர்.

முழுவிவரம் அறிய அந்த கிராமத்துக்கே போனோம்! ''2003-ம் ஆண்டு வரை மிகவும் சாதாரணமாக வாழ்ந்து கொண்டிருந்த ஹரிகிருஷ்ணன் சகோதரர்களுக்கு, இன்று கோடிக்கணக்கில் சொத்துகள் உள்ளன. சென்னை உட்பட பல இடங்களில் வீடுகளும் இருக்கின்றன. இவை எல்லாமே கட்டப்பஞ்சாயத்து, அடியாட்கள் சப்ளை மற்றும் அடாவடி வசூல் ஆகியவற்றால் வந்தவை!'' என் கிறார்கள் அந்தக் கிராம மக்கள்.

''மதனுடைய அப்பாவைக் கொலை செய்தவர்கள், அவருடைய பையனையும் இப்போ தீர்த்துக் கட்டிட் டாங்க. அவனுங்க பண்ணுன அநியாயங்களை போலீ ஸுக்கு சொல்லுவோம். விசாரணைக்கு கூட்டிட்டு போவாங்க. ஆனா, நடவடிக்கை இருக்காது. ஏன்னு கேட்டா, தி.மு.க. அமைச்சர் ஒருத்தர்ட்ட இருந்து போன் வரும். போலீஸ் அமைதியா ஆயிடும். அப்புறம்... அவங்க அத்தனை பேரும் காலரைத் தூக்கி விட்டுட்டு போலீஸ் ஸ்டேஷன்ல இருந்து வெளியே வருவாங்க. ஊரிலேயே அவங்க வீடுதான்

ரவுடி சகோதரர்கள் பிடியில் ஒரு கிராமம்!

பெரியது. எந்நேரமும் அடியாட்கள் அந்த தெருவுல சுத்திக்கிட்டு இருப் பாங்க. கலெக்டர் கிட்ட மனு கொடுத்திருக்கோம்...'' என்கிறார் கெலடிப்பேட்டை கிராம சங்க தலைவர் லதா.

மதன்ராஜின் உறவினர் ஒருவர் பேசும்போது, ''எங்க வீட்டுப் பெண்களை தனிமரம் ஆக்கிட்டாங்க. நாங்க புகார் தந்தபோதே நடவடிக்கை எடுத்திருந்தா, இரண்டு உசுரை இழந்திருக்க மாட்டோம். எங்களோட விவசாய நிலம் 60 ஏக்கர், அவங்க வீட்டுப் பக்கம் இருக்கிறதால இன்னிக்கு வரை எங்களால அங்க போக முடியலை. பெருமாள் கோயில் திருவிழா ரொம்ப சிறப்பா நடக்கும். ஹரிகிருஷ்ணன் ஊராட்சித் தலைவர் பதவிக்கு வந்ததும், கோயிலைப் பூட்டிச் சாவியை எடுத்திட்டுப் போயிட்டார். எங்க கிராமமே நிம்மதி இல்லாம தவிக்குது. இதுக்கு முழுக் காரணம், தி.மு.க. அமைச்சரா இருந்தவரும் அவருக்கு ஜால்ரா போட்ட போலீஸும்தான்!'' என்றார் வேதனையுடன்.

தங்கள் பகுதி வழியாகப் பிணம் தூக்கிச் செல்ல வும்கூட கெலடிப்பேட்டை மக்களை இவர்கள் அனுமதிப்பது இல்லையாம். மீறிச் செல்பவர்களை தங்கள் ஆட்களைக் கொண்டு வேண்டுமென்றே வம்பு இழுத்துப் பிரச்னை செய்வார்களாம். இதை மீறியவர்களை ஒரு முறை இந்த நபர்கள் தடுத்துள்ளார்கள். இந்தத் தகராறில் பிணத்தை அப்படியே போட்டு விட்டு ஓடி வந்தார்களாம். அது மட்டுமன்றி சில சமயங்களில் அவர்கள் வேடிக்கையாகவும் நடந்து கொள்வது உண்டாம். பிணத்தை நடுரோட்டில் வைக்கச் சொல்லி, மாலை அணிவிப்பார்களாம்.

''கொலை, கொள்ளை என அராஜகம் செய்து வரும் இந்த சகோதரர்களின் கொட் டத்தை, புதிய அரசாவது அடக்கினால்தான், நாங்கள் நிம்மதியாக வாழ முடியும்!'' என்றனர்.

இந்த வழக்கை விசாரித்து வரும் அம்பத்தூர் போலீஸ் துணை கமிஷனர் ஜான் செல்லையா, ''இரண்டு தரப்புமே ஒருவரை ஒருவர் கொலை செய்ய நேரம் பார்த்துக் கொண்டிருந் தனர். இதில், ஊராட்சி தலைவர் ஹரிகிருஷ்ணன் சகோதரர்கள் முந்தி விட்டனர். ஹரிகிருஷ்ணனைத் தவிர மற்ற இரண்டு பேரும் சிக்கி விட்டனர். அவரையும் விரைவில் பிடித்து விடுவோம். கிராம மக்கள் இனி பயம் இல்லாமல் நடமாடலாம்''என்றார்.

கெலடிப்பேட்டை மக்கள் இன்னும் பீதியுடன் தான் இருக்கின்றனர். சில குடும்பங்கள், தம் குழந்தைகளின் எதிர்காலம் கருதி கிராமத்தை விட்டே வெளியேறி விட்டதாம். அரசியல் வாதிகளும் அரசு இயந்திரமும் ஒன்றுக்கொன்று துணை போனால், இப்படித்தான் விபரீதங்கள் நிகழும். இனிமேலும் இப்படிப்பட்ட சம்பவங் கள் நிகழாமல் தடுக்க, போர்க்கால நடவடிக்கை எடுக்க வேண்டும் போலீஸ்.

- கிருபாகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism