Published:Updated:

'அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'

கறார் காட்டிய வேலூர் போலீஸ்!

'அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'

கறார் காட்டிய வேலூர் போலீஸ்!

Published:Updated:
'அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'
##~##

'அ.தி.மு.க. ஆட்சிக்கு வந்தால் சட்டம்​-ஒழுங்கு பாதுகாக்கப்படும்’ என ஜெய​லலிதா அறிவித்தபோதே அனைத்து மாவட்டங்​களிலும் போலீஸார் உஷார் நிலைக்கு வந்தனர். மாவட்டங்களில் உள்ள ரவுடிகள் பட்டியலைக் கையில் எடுத்து, களை எடுக்கும் வேலைக்கு ஆயத்தமானார்கள். இம்மாதம் 1-ம் தேதி வேலூர் மாவட்டத்தில் எடுக்கப்பட்ட அதிரடி நடவடிக்கையைப் பார்த்து, ஆளும் வட்​டார​மே அதிர்ந்து போனது. காரணம், கைது செய்யப்​பட்டவர்கள் அத்தனை பேரும் அ.தி.மு.க-வினர்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

வேலூர் மாவட்டத்தில் அ.தி.மு.க. பிரமுகர்களான ஜி.ஜி.ரவி (மாநகராட்சி 10-வது வார்டு கவுன்சிலர்), துளசிராமன், சுரேந்திரன், பாட்சி ரவி, நிச்சயகுமார், டால்ஃபின் பிரபு, ஜெய்சங்கர் (சத்துவாச்சாரி 21-வது

'அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'

வார்டு கவுன்சிலர்) ஆகிய ஆறு பேரையும் பல்வேறு வழக்குகளில் கைது செய்து இருக்கிறது, வேலூர் காவல் துறை.

இது குறித்து அ.தி.மு.க. நிர்வாகிகளிடம் பேசியபோது, ''ஜி.ஜி.ரவி உட்பட ஆறு பேரையும் தி.மு.க. ஆட்சியிலேயே கைது செய்து இருக்க வேன்டும். அவர்கள் மீது போடப்பட்ட வழக்குகள் எல்லாம் உண்மையானவை. வேலூரில் மட்டும் இல்லாமல், திருப்பத்தூர் நீதிமன்றத்திலும் அவர்கள் மீது சந்தன மரக் கடத்தல், கள்ளச் சாராய விற்பனை சம்பந்தப்பட வழக்குகள் இன்னும் நிலுவையில் உள்ளன. ரவி ஆரம்பத்தில் ஆட்டோ ஓட்டியவர். அப்பவே சந்தன மரக் கடத்தல், கள்ளச்சாரயம், அடிதடி, கட்டப்பஞ்சாயத்துகளும் செய்தார். பணம் சேரவும், காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். 2006 தேர்தலில் காங்கிரஸ் கட்சியில் நிற்க ஸீட் கேட்டுக் கிடைக்கவில்லை. அதனால் காங்கிரஸ் வேட்பாளர் ஞானசேகரனை எதிர்த்துப் போட்டியிட்டு 1,300 வாக்குகள் வாங்கினார். இதனால் காங்கிரஸ் கட்சி அவரை நீக்கியது. பிறகு, பகுஜன் சமாஜ் கட்சியில் சேர்ந்து, அதை விட்டு விலகி... அப்புறம்தான் அ.தி.மு.க-வில் சேர வந்தார். நாங்க அப்பவே, தலைமைக்கு, 'இவரை சேர்த்துக்கொண்டால் கட்சியின் பெயரைக் கெடுத்து விடுவார்’ என்று எடுத்துச் சொன்னோம். ஆனால், அதையும் மீறிக் கட்சியில் சேர்ந்து மாநகராட்சி கவுன்சிலர் ஆனார். இன்று வரை அவர் எங்க பகுதிக்கு எந்த ஒரு நன்மையும் செய்யவில்லை. சந்தனக் கட்டை, கள்ளசாராயம் விவகாரம் தவிர, வேலூரில் யாராவது

'அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'

5 கோடிக்கு மேல் நிலம் வாங்கினால் கமிஷன் கேட்டு இவருடைய கூட்டாளிகள் போவார்கள். முந்தைய தி.மு.க. ஆட்சியிலேயே இந்த காரியங்களை அப்பட்டமாக செய்துவந்தனர். ஆனால் காவல் துறை, இதைக் கண்டுகொள்ளவில்லை.

'அ.தி.மு.க-ன்னாலும் கைதுதான்..'

கவுன்சிலர் ஆன பிறகு இவருடைய ஆசை, கட்சிப் பதவிக்​குப் போனது. மாவட்டச் செயலாளர் பதவிக்கு இவர் மனு அனுப்பி இருந்தார். இவருடைய நடவடிக்கைகளை அம்மா அறிந்திருந்​ததால் அதைக் கொடுக்கவில்லை. சட்டமன்றப் பொதுத் தேர்தலுக்கு விருப்ப மனு அளிக்க தலைமை சொன்னபோது இவரும் மனு கொடுத்தார். இவருக்கு ஸீட் கொடுக்கவில்லை. அப்போது இருந்தே ஜி.ஜி.ரவி தனது வேலைகளைக் காட்ட ஆரம்பித்து விட்டார். தேர்தல் பிரசாரத்தின்போது டாக்டர் விஜய்க்கு எதிராக நின்ற காங்கிரஸ் போட்டி வேட்பாளர் வாலாஜா அசேனுக்காகப் பிரசாரம் செய்தார்.

ஆனால், டாக்டர் விஜய் ஜெயித்ததும் மீண்டும் அவரோடு நெருக்கம் காட்டினார். மேலும் அமைச்சர் பதவி கொடுத்ததும், ஜி.ஜி.ரவி அவரது பெயரைச் சொல்லிக் கட்டப்பஞ்சாயத்து செய்ய ஆரம்பித்து விட்டார். இவருக்கு பல கோடிமதிப்புள்ள ஜி.ஜி.ஆர். பொறியியல் கல்லூரி இருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால், இவரது கைது நடவடிக்கை, தி.மு.க-வினரை விட எங்களுக்குத்தான் சந்தோஷம்!'' என்றனர் மகிழ்ச்சியாக.

ஜி.ஜி.ரவி ஆதாரவாளர்களிடம் பேசியபோது, ''எங்கள் அண்ணன் வேலூரில் அ.தி.மு.க-வை துடிப்பாக வளர்த்து வருவது, எங்க கட்சிக்காரங்களுக்கே பிடிக்கல! அவரை எப்படியாவது அமைதியாக்கத்தான் இப்படி பொய்ப் புகார் சொல்றாங்க. ஆனா, நாங்க கண்டிப்பா நல்லவங்கன்னு நிரூபிப்போம்!'' என்றனர் சீறலாக.

வேலூர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளரான சிவசங்கரனிடம் பேசியபோது, ''தவறு செய்பவர்கள் யாராக இருந்தாலும் கட்சி பாகுபாடு ஏதும் இல்​லாமல் சரியான நடவடிக்கை எடுக்கவேண்டும் என்பதுதான் நமது முதல்வரின் கருத்து. அதனால்தான் தவறு செய்தவர்கள் அ.தி.மு.க-வினர் என்றாலும்கூட கைது செய்யப்படுகின்றனர். தவறுசெய்தவர்கள், தண்டனை பெறுவார்கள். இதில் என்ன இருக்கிறது!'' என்றதோடு நிறுத்திக் கொண்டார்.

வேலூர் காவல் துறையி​னரிடம் விசாரித்தபோது, ''ஜி.ஜி.ரவி உள்ளிட்ட ஆறு பேர் மீதும் சட்டப்படியான நடவடிக்கை எடுத்து இருக்கிறோம். அவர்களைத் தகுந்த ஆதாரங்களோடு, புகார்களின் அடிப்படையில்தான் கைது செய்துள்ளோம். அனைவர் மீதும் தக்க நடவடிக்கை எடுக்கப்படும்!'' என்றனர்.

தப்பு செய்தவர் யாராக இருந்தாலும், கட்சிப் பாகுபாடு பார்க்காமல் காவல் துறை நடவடிக்கை எடுப்பது நல்ல ஆரம்பம்.

- கே.ஏ.சசிகுமார்

படங்கள் : ச.வெங்கடேசன்  

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism