Published:Updated:

சுட்டிக் காட்டிய ஜூ.வி.. துயர் துடைத்த அரசு!

Follow-up

சுட்டிக் காட்டிய ஜூ.வி.. துயர் துடைத்த அரசு!

Follow-up

Published:Updated:
சுட்டிக் காட்டிய ஜூ.வி.. துயர் துடைத்த அரசு!
##~##

'மேட்டூர் அணை நிரம்பி வழிந்தா லும், தூர்வாராத காரணத்தால் டெல்டா பகுதி விவசாயிகளுக்கு முழுமையான பயன் கிடைக்க வாய்ப்பு இல்லை’ என்பதைக் கடந்த 29.5.2011 ஜூ.வி. இதழில் எழுதி இருந்தோம். நமது இதழ் வெளியான மறுநாளே, அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது, தமிழக அரசு. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

பொதுவாக ஜூன் மாதத்தில் மேட்டூர் அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்படும் என்பதால், மார்ச் மாத இறுதியில் டெல்டா பகுதிகளில் உள்ள ஆறு, குளங்கள் மற்றும் வாய்க்கால்களில் தூர்வாரப்படும். இந்த ஆண்டு தேர்தல் ஆணையத்தின் கட்டுப்பாடு காரணமாக, நீர்நிலைகளில் முழுமையாக தூர்வாராமல் கிடப்பில் போடப்பட்டது. அதனால், 'மேட்டூர் அணை நிரம்பி வழியும் நிலையிலும், விவசாயம் செய்ய முடியாத நிலைக்கு விவசாயிகள் தள்ளப்பட்டு உள்ளனர். எனவே, கடைமடைப் பகுதிகளுக்கு தண்ணீர் வந்து சேரும் முன்பே, தூர்வாரும் பணியை வேகமாக முடித்தால், விவசாயிகள் வயிற்றில் பால் வார்க்கலாம்’ என்று நம்முடைய கட்டுரையில் குறிப்பிட்டு இருந்தோம்.

சுட்டிக் காட்டிய ஜூ.வி.. துயர் துடைத்த அரசு!

இந்நிலையில்தான், ஜூ.வி-யில் கட்டுரை வெளியான மறுநாளே, காவிரி டெல்டா மாவட்டங்களில் தூர்வாரும் பணிக்காக,

சுட்டிக் காட்டிய ஜூ.வி.. துயர் துடைத்த அரசு!

16.3 கோடி நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்துள்ளது.

இதுகுறித்துப் பேசிய பொதுப்பணித்துறை அதிகாரிகள், ''காவிரி டெல்டா பாசனத்துக்காக மேட்டூர் அணை ஜூன் 6 அன்று திறக்கப்பட உள்ளது. தஞ்சை மாவட்டத்தில் மட்டும் 1.20 லட்சம் ஹெக்டேரில் சாகுபடி நடைபெறும். விவசாயம் செய்வதற்கு வசதியாக இப்போது வாய்க்கால், ஆறுகளில் தூர்வாரும் பணி நடக்கிறது. கல்லணையில் இருந்து 10-ம் தேதி திறந்து விடப்படும் தண்ணீர், 20-ம் தேதிக்குள் கடைமடைப் பகுதிகளுக்குப் போய்சேரும் என எதிர்பார்க்கிறோம். அதனால், தூர்வாரும் பணிகளை 18-ம் தேதிக்குள் முழுமையாக முடிக்கத் திட்டமிட்டு உள்ளோம். குறுகிய காலமே இருப்பதால் அதிகாரிகள் வேகமாக செயல்படுகிறார்கள்!'' என்று சொல்கிறார்கள்.

தஞ்சை விவசாய சங்க பிரதிநிதியான வக்கீல் ஜீவக்குமார், '' தூர்வாராத காரணத்தால், எங்களால் இந்த முறை விவசாயம் முழுமையாக செய்யமுடியாதே என்ற கவலையில் இருந்தோம். நீங்களும் எங்கள் சோகத்தை சொல்லி இருந்தீர்கள். உடனே, அரசு தீவிர நடவடிக்கை எடுத்துள்ளது. தஞ்சை விவசாயிகள் சார்பாக அரசுக்கும், உங்களுக்கும் நன்றி!''  என்று நெகிழ்ந்தார்.

- சி.சுரேஷ்

படங்கள்: கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism