Published:Updated:

வீட்டுக்குள் பிரசவம்.. கொல்லையில் மயானம்!

அரியலூரில் ஓர் அதிர்ச்சி சமத்துவபுரம்

வீட்டுக்குள் பிரசவம்.. கொல்லையில் மயானம்!

அரியலூரில் ஓர் அதிர்ச்சி சமத்துவபுரம்

Published:Updated:
வீட்டுக்குள் பிரசவம்.. கொல்லையில் மயானம்!
##~##

'ஊருக்கு ஊர் சமத்துவபுரம் அமைச்சு, அதை சாதனைன்னு சொல்லிக் கறாங்க. ஆனா, 1958-லேயே ஒரு கலெக்டர் உருவாக்கின சமத்துவ புரம்தான் எங்க ஊரு. ஆனா, இப்ப எங்க நிலையை வந்து பாருங்க சார்!' என்று வேதனையோடு ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்கு (044-42890005) அழைப்பு வர... சென்றோம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அரியலூரில் இருந்து திருமானூர் சென்று, ஐந்து கிலோமீட்டர் தூரம் குண்டும் குழியுமான சாலை வழியாக கீழக்கொளத்தூரை அடைந்தோம். அங்கே இருந்து மூன்று கிலோமீட்டர் மண் ரோட்டில் சென்றால், பாட்சா நகர்... அதிக வீடுகள் இல்லாத சின்ன கிராமம்.

பாட்சா காசிநாதன் என்பவர் நம்மிடம் பேசினார். '500 குடும்பங்கள் இருந்த பெரிய ஊர் இது. இன்னிக்கு ஐந்தே குடும்பங்களா குறைஞ்சிடுச்சு. 1958-ல திருச்சி ஒருங்கிணைந்த மாவட்டமா இருந்தப்ப,

வீட்டுக்குள் பிரசவம்.. கொல்லையில் மயானம்!

கலெக்டரா இருந்தவர் குலாம் மொஹைதீன் பாட்சா. இன்னமும் நாங்க கும்பிடற தெய்வமே அவர்தான். பெரிய சீர்திருத்தவாதி. தமிழ்நாட்டுல இருக்கற எல்லா சாதிக்காரங்களும் இருக்கற மாதிரி 500 ஏழைக் குடும்பங்களத் தேர்வு செஞ்சு, ஒவ்வொரு குடும்பத்துக்கும் ஐந்து ஏக்கர் நிலம், 10 சென்ட்ல வீடு, ஒரு வண்டி, ஒரு ஜோடி காளை மாடு, 10,000 பணம் கொடுத்து இந்த ஊரை உருவாக்கினார். 1959-ல உருவான இந்த ஊர் ஒரு மாடல் சமத்துவபுரமா இருந்துச்சு. அந்த கலெக்டர் ஞாபகமாத்தான் ஊருக்கு பாட்சா நகர்னு பேர் வெச்சோம். இப்ப இருக்கற குடும் பங்கள்லகூட ஒவ்வொரு குடும்பமும் ஒவ்வொரு சாதிதாங்க. சமத்துவத்தை இன்னமும் அந்த கலெக்டருக்காகக் கடைப்பிடிக்கிறோம்!'' என்று பெருமூச்சு விட்டவர், '1,500 பேர் வாழ்ந்த ஊர் இப்ப 50 பேர் மட்டுமே வாழற ஒரு தெருவா மாறிப் போனதுக்குக் காரணம், அரசோட அலட்சியம்தான்! குடிக்கிற தண்ணிக்கு மூணு கிலோமீட்டர் தள்ளி கீழக்கொளத்தூர் குளத்துக்குத்தான் போகணும். பல வருஷம் ஆகியும் தண்ணி வசதியோ, ரோடு வசதியோ இல்லாததால கொஞ்சங் கொஞ்சமா ஊர் காலியாயிடுச்சு. ஒரு கட்டத்துல அரசாங்கமே, காலி பண்ணவங்களோட நிலத்தையும் எடுத்துக்கிச்சு. ஆனா, இங்கேயே இருக்கறவங்களுக்கு எந்த அடிப் படை வசதியும் செஞ்சு தரல. பெரிய போராட்டத்துக்கு அப்புறம்தான் தண்ணியும் கரன்ட்டும் கிடைச்சது. ஆனா, ரோட்டுக்கும் மயானத்துக்கும் இன்னும் விடிவு காலம் பொறக்கல. அதிகாரிகள்கிட்ட கேட்டா, '50 பேர்தான் மக்கள் தொகையே. இதுக்குப் பேரு ஊரா?’ன்னு சிரிக்கறாங்க...'' என்றார் வருத்தமாக.

வீட்டுக்குள் பிரசவம்.. கொல்லையில் மயானம்!

ராணி என்பவர், 'எங்க ஊருக்கு மயான வசதியும் ரோடு வசதியும்தான் இப்பக் கேக்கறோம். யாரும் இறந்துட்டா வீட்டுக் கொல்லைப்பக்கம்தான் புதைக்கிறோம். வீட்டுக்கு பொண்ணு, மாப்பிள்ளை பாக்க வர்றவங்ககூட ரோட்டைப் பாத்ததும் ஓடிப் போயிடறாங்க. என் பெரிய பொண்ணுக்கு இரண்டு வருஷம் கஷ்டப்பட்டுப் பேசி, மாப்பிள்ளையை சம்மதிக்க வெச்சோம். அடுத்த பொண்ணு வயசுக்கு வந்து அஞ்சு வருஷம் ஆகியும் மாப்பிள்ளை வர மாட்டேங்கறாங்க. பிரசவம் எல்லாம் வீட்டோடதான். பொட்டிக் கடையில இருந்து ஸ்கூல், ஆஸ்பத்திரி வரைக்கும் எல்லாத்துக்கும் கீழக்கொளத்தூருக்குத்தான் போகணும்...'' என்றார் சோகமாக.

கலெக்டர் காலத்தில் உருவான இந்த ஆதி சமத்துவபுரத்தை 'அம்மா’ அரசாவது கவனிக்குமா?

 - க.ராஜீவ்காந்தி

படங்கள்: எம்.ராமசாமி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism