Published:Updated:

பரணிகுமார் இடைத்தேர்தல் பலிகடாவா?

நேரு மீது கிடுகிடு புகார்

பரணிகுமார் இடைத்தேர்தல் பலிகடாவா?

நேரு மீது கிடுகிடு புகார்

Published:Updated:
பரணிகுமார் இடைத்தேர்தல் பலிகடாவா?
##~##

திருச்சி மேற்குத் தொகுதிக்கு வர இருக்கும் இடைத்தேர்தலை மனதில் வைத்து, இப்போதே திருச்சி தி.மு.க. சார்பாக களம் இறங்கி விட்டார் பரணிகுமார். கடந்த 31-ம் தேதி திருச்சி கலைஞர் அறிவாலயத்தில் நடந்த திருச்சி மாநகர் தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் கலந்து கொள்ள முன்னாள் அமைச்சர் நேருவுடன் ஒரே காரில் வந்தார் பரணிகுமார். மேடையிலும், நேருவின் அருகிலேயே உட்கார வைக்கப்பட்டார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த இடத்தில்... வரலாற்றை  சற்று பின்நோக்கிப் பார்த்து விட்டு வருவோம்.

கருணாநிதி, அன்பில் தர்மலிங்கம், பாலகிருஷ்ணன் மூவரும் நெருங்கிய நண்பர்கள். அப்பாக்களைப் போலவே மு.க.ஸ்டாலின், அன்பில் பொய்யாமொழி. பாலகிருஷ்ணன் மகன் பரணிகுமார் மூவரும் உற்ற தோழர்களாக இருந்தனர். மூன்றாவது தலைமுறையில் உதயநிதியும், பொய்யாமொழி மகேஷ் ஆகிய இருவருக் கும் நெருக்கமான நட்பு நிலவுகிறது.

பரணிகுமார் இடைத்தேர்தல் பலிகடாவா?
பரணிகுமார் இடைத்தேர்தல் பலிகடாவா?

நாலாவது தலைமுறையாக... உதயநிதியின் மகன் இன்பாவும், மகேஷின் மகனும் பள்ளித் தோழர்களாக இருக்கின்றனர். இந்த நட்பு வட்டத்தில் இரண்டாவது தலைமுறையோடு பரணிகுமார் வெளியேறி விட்டார்.

இரண்டு முறை எம்.எல்.ஏ-வாகவும், ஸ்டாலினுக்கு நெருங்கிய நண்பராகவும், திருச்சிக்கு ஸ்டாலின் வரும்போதெல்லாம் அவருடைய டிரைவராகவும் விளங்கியவர் பரணிகுமார். ஸ்டாலின் பெயரைச் சொல்லி பல வகைகளில் பலன் பெற்று ஸ்டாலினுக்கும், கட்சிக்கும் அவப்பெயரை ஏற்படுத்தியதாக குற்றம் சாட்டப்பட்டார். அதனால், கட்சியில் இருந்து கட்டம் கட்டப்பட்டார். ப்ளாஷ்பேக் ஓவர். இனி நிகழ்காலத்துக்கு வருவோம்.

இந்தத் தேர்தலுக்கு முன், அன்பில் தர்மலிங்கம் சிலை திறப்பு விழாவுக்காக கருணாநிதி திருச்சி வந்தார். அப்போது முதல், பரணிகுமார் கட்சி நிகழ்ச்சிகளில் மீண்டும் தலைகாட்ட ஆரம்பித்தார். மேடையிலும் பரணிகுமாருக்கு இடம் ஒதுக்கப்பட்டது. பொதுத்தேர்தலில் பரணிகுமார் எப்படியும் ஸீட் வாங்கிவிடுவார் என்று திருச்சி தி.மு.க-வில் பரபரப்பாகப் பேசப்பட்டது.

மணப்பாறையில் கே.என்.நேரு, திருச்சி மேற்கில் பரணிகுமார் போட்டியிடுவார்கள் என்றும் கூட தி.மு.க-வின் மேல்மட்ட நிர்வாகிகள் கூறி வந்தனர். ஆனால் திருச்சி மேற்குத் தொகுதியை நேரு மாற்றிக் கொள்ளவில்லை என்பதால் பரணிகுமார் நிற்கவில்லை. இப்போது, அமைச்சர் மரியம்பிச்சையின் மரணத்தைத் தொடர்ந்து, இன்னும் ஆறு மாதத்துக்குள் இடைத்தேர்தல் நடக்கும். அதில், பரணிகுமாரைக் களமிறக்கி வேண்டிய உதவிகளையும் பின்புலத்தில் இருந்து செய்வதன் மூலம், தொண்டர்களிடமும் தலை மையிடமும் நல்ல பெயரை வாங்கி விடலாம் என நினைக்கிறாராம் நேரு.

ஆனால், நேருவுக்கு எதிரான சிலரோ, ''இடைத் தேர்தலில் வெற்றி பெற்றால் சட்டசபையில் தி.மு.க-வுக்கு எண்ணிக்கை ஒன்று கூடுமே தவிர மந்திரி பதவியா கிடைக்கப் போகிறது? அதனால், பரணிகுமாரை பலிகடா ஆக்கப் பார்க்கிறார் நேரு!'' என்கிறார்கள். என்ன செய்யப்போகிறார் பரணிகுமார்?

- ஆர்.லோகநாதன்

படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism