Published:Updated:

திகார் சிறையில் நியாயம் கிடைக்குமா?

ஆ.ராசாவைத் தேடி பெரம்பலூர் உடன்பிறப்புகள்

திகார் சிறையில் நியாயம் கிடைக்குமா?

ஆ.ராசாவைத் தேடி பெரம்பலூர் உடன்பிறப்புகள்

Published:Updated:
திகார் சிறையில் நியாயம் கிடைக்குமா?
##~##

.தி.மு.க. கோட்டையாக இருந்த பெரம்பலூர், ஆ.ராசாவின் கைங்கர்யத்தால் தி.மு.க. வசமானது. சமீபத்தில் நடந்த சட்டப்பேரவைத் தேர்தலில், தனது கோட்டையை அ.தி.மு.க. மீட்டெடுத்து விட்டது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தோல்வி குறித்து ஆலோசிக்க, பெரம்பலூர் மாவட்ட தி.மு.க. அவைத்தலைவர் வெள்ளைச்சாமி தலைமையில் ஆலோசனைக் கூட்டம் நடத்தினர். இதுவரை நடந்த எந்தக் கூட்டமானாலும் ஆ.ராசா முகம் பதித்த பேனர்கள் இடம் பெறும்.ஆனால் இந்தக் கூட்ட மேடையில்  ஆ.ராசா படம் இல்லை. கருணாநிதி, ஸ்டாலின் படங்கள் மட்டுமே  இருந்தது. இது, கட்சி நிர்வாகிகளிடம் சலசலப்பை ஏற்படுத்தியது.

திகார் சிறையில் நியாயம் கிடைக்குமா?

வேப்பூர் ஒன்றியத்தைச் சார்ந்த கல்லம்புதூர் மாணிக்கம், ''ஆ.ராசா இருந்திருந்தால் இந்த அளவுக்கு படுதோல்வி அடைந்திருக்க மாட்டோம். கட்சியின் தலைமைப் பொறுப்பில் உள்ளவர்கள், தங்களது சொத்துகளைத்தான் விரிவாக்கம் செய்தார்கள். கட்சியைக் கண்டுகொள்ளவில்லை. நம்ம எம்.எல்.ஏ-வும் வேண்டா வெறுப்பாகத்தான் வேலை செய்தார்!'' என்று முன்னாள் எம்.எல்.ஏ. ராஜ்குமாரைச் சாடினார்.

அதனால் ஆத்திரம் அடைந்த ராஜ்குமார் ஆதரவாளர்கள், மாணிக்கம் மீது

திகார் சிறையில் நியாயம் கிடைக்குமா?

சேர்களை எடுத்து வீச, மாணிக்கத்துக்கு பலத்த காயம். உயிர் பிழைத்தால் போதும் என்று கூட்ட அரங்கில் இருந்து ஓட்டம் பிடித்தார். அதன்பின்னர் தொடர்ந்த கூட்டத்தில் ராஜ்குமார் பேசும்போது, ''நான் 100 ரூபாய் சம்பாதித்தால் 80 ரூபாயை கட்சிக்காரர்களுக்கு கொடுத்துவிட்டு, 20 ரூபாயைத்தான் என் பங்குக்கு எடுத்துக் கொண்டேன். கட்சிக்கு விரோதமாக எதுவும் செய்யலை. விசுவாசியாகத்தான் இதுவரை இருக்கிறேன். எனக்கு ஸீட் கொடுத்திருந்தால் ஜெயிச்சிருப்பேன்...'' என்று பேசிக்கொண்டிருக்கும் போது, கட்சி நிர்வாகிகள் சிலர் ஆட் சேபனை தெரிவித்தனர்.

''ஆட்சியில் இருந்தப்ப ரோடு கான்ட்ராக்ட்டோ, சாக்கடை கான்ட்ராக்ட்டோ கட்சி நிர்வாகிகளுக்குத் தரவில்லை. அரசு வேலையும் வேண்டியவங்களுக்கு வாங்கித் தரலை. கட்சி நிர்வாகிகளுக்கு நீங்க என்ன செஞ்சீங்க? மாவட்டச் செயலாளரும், எம்.எல்.ஏ-வும்தான் பங்கு போட்டுக்கிட்டீங்க...'' என்று குற்றச் சாட்டுகளை சரமாரியாக வீசினார்கள். ராஜ்குமாரின் ஆதரவாளர்கள் இப்போதும் பதில் சொல்வதற்குப் பதிலாக சேர் களையே வீசினார்கள்.

''ஜெயில்ல இருப்பதால, பேனர்லகூட ராசா படத்தைத் தூக்கிட்டீங்க!'' என ஒரு தொண்டர் கொளுத்திப் போட... ஆ. ராசாவின் அண்ணன் கலியபெருமாள் கோஷ்டியை சேர்ந்த சம்பத்துக்கு ஆவேசம் பீறிட்டது. ''இப்படி எல்லாம் போய்ட்டே இருந்தீங்கன்னா, பெரம்பலூர்ல தி.மு.க-வே இல்லாமப் பண்ணிடுவேன்!'' என்று அவர் பங்குக்கு வார்த்தைகளை அள்ளி வீசினார்.

திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள ஆ.ராசாவை சந்தித்து, பெரம்பலூரில் தி.மு.க. தோல்விக்கான காரணத்தை விளக்கவும், நடந்துவரும் புறக்கணிப்புகளுக்கு நியாயம் கேட்கவும் போகிறதாம் ஒரு கோஷ்டி.

- க.சண்முகவடிவேல்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism