Published:Updated:

லட்சுமணனை மிரட்டும் எலும்புக்கூடு!

மதுரை கும்பல் கைவரிசையா?

லட்சுமணனை மிரட்டும் எலும்புக்கூடு!

மதுரை கும்பல் கைவரிசையா?

Published:Updated:
லட்சுமணனை மிரட்டும் எலும்புக்கூடு!
##~##

டந்த ஆட்சியில் போடி எம்.எல்.ஏ-வாக இருந்த லட்சுமணன், தி.மு.க-வின் தென்மண்டல அதிகார மையத்துக்கு மிகவும் நெருக்கமானவராகவும் வலம் வந்தார். இவரது சொந்த ஊரான ராசிங்காபுரத்தில் உள்ள இவருடைய தோட்டத்துக் கிணற்றில், மனித எலும்புக்கூடு ஒன்று பல மாதங்களுக்கு முன் கண்டுபிடிக்கப்பட்டது. அதைக் கைப்பற்றிய போலீ ஸார், 'தற்கொலை மற்றும் சந்தேக மரணம்’ என வழக்குப் பதிவு செய்ததோடு, அந்த விவகாரத்தை மறந்தே போயினர். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

லட்சுமணனை மிரட்டும் எலும்புக்கூடு!

இந்த தேர்தலில் போடி தொகுதியில் அமைச்சர் ஓ.பன்னீர்செல்வத்தை எதிர்த்துப் போட்டியிட்டு தோல்வியைத் தழுவினார் லட்சுமணன். ஆட்சி மாறியதும், 'தி.மு.க-வில் தென்மாவட்ட அதிகார மைய நிழலில் இருப்பவர்களுக்கும் லட்சுமணன் கிணற்றில் கண்டு எடுத்த எலும்புக்கூட்டுக்கும் சம்பந்தம் இருக்கிறது’ என முதல்வர் ஜெயலலிதாவுக்கு,  புகார் அனுப்பினர் போடி அ.தி.மு.க-வினர். இதையடுத்து, 'இந்த வழக்கில் முழுகவனம் செலுத்தி விசாரிக்க வேண்டும்’ என போலீஸுக்கு உள்துறையில் இருந்து அதிரடி உத்தரவு வந்தது.

இந்த எலும்புக்கூடு குறித்து போலீஸில் யாரும் புகார் கொடுக்காத நிலையில், கிராம நிர்வாக அலுவலரிடம் புகார் வாங்கி, வழக்குப் பதிவு செய்து இருந்தது போலீஸ். இந்த வழக்கை விசாரிக்கும்

லட்சுமணனை மிரட்டும் எலும்புக்கூடு!

உத்தமபாளையம் டி.எஸ்.பி. பாண்டியராஜனிடம் பேசினோம் ''எலும்புக்கூடு கிடந்த கிணறு, முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணனின் தாயார் பெயரில் உள்ளது. 120 அடி ஆழம் கொண்ட இந்தக் கிணற்றில் தண்ணீர் இல்லை. கிணற்றுக்குள் ஆழ்குழாய் போட்டு, அதில் மோட்டார் பொருத்தி தண்ணீர் எடுத்து விவசாயம் செய்கின்றனர். ஆழ்குழாய் மோட்டார் பழுதான நிலையில்தான், கிணற்றில் எலும்புக்கூடு கிடந்ததைப் பார்த்து உள் ளார்கள். படுத்திருக்கும் நிலையில் கிடந்தது அந்த மனித எலும்புக்கூடு. எலும்புகள் மற்றும் தலைமுடி ஆகியவற்றை ரசாயன சோதனைக்கு அனுப்பி வைத்தோம். '25 முதல் 35 வயது மதிக்கத்தக்க ஆண். சுமார் எட்டு மாதங்களுக்கு முன் இறந்திருக்கலாம். எலும்புகளில் காயம், முறிவு, சிராய்ப்புகள் இல்லை’ என தடய அறிவியல் துறை அறிக்கை அனுப்பி உள்ளது. சூப்பர் இம்போஸ் ஆய்வுக்காக மண்டை ஓடு அனுப்பி வைக்கப்பட்டு உள்ளது. அந்த முடிவு வந்த பிறகுதான், விசாரணையில் முன்னேற்றம் ஏற்படும்.

இறந்து போனது யார் என்பதைக் கண்டு பிடிப்பதற்காக, தமிழகம் முழுவதும் குறிப்பாக தென் மாவட்டங்களில் காணாமல் போனவர்கள் குறித்த தகவல்களைத் திரட்டி உள்ளோம். இந்த வழக்கு விசாரணைக்காக இரண்டு குழுக்கள் அமைக்கப்பட்டு உள்ளன!'' என்றார்.

''மரணம் எப்படி நிகழ்ந்தது என்பதைக் கண்டு பிடிக்க முடிந்ததா?'' என்று கேட்டோம்.

''எலும்பில் சேதம் இல்லை என்பதால், முகத்தை அழுத்தியோ, விஷம் குடிக்க வைத்தோ கொலை செய்து இருக்கலாம். மனித உடல் அழுகும் போது துர்நாற்றம் வீசும். நாய்கள் மோப்பம் பிடித்து கிணற்றைச் சுற்றி வந்து ஊளையிட்டிருக்கும். காகங்கள் மற்றும் கழுகுகள் அந்தக் கிணற்றை வட்டம் இட்டிருக்கும்.

இவற்றை எல்லாம் தடுக்க, 'பார்மலின் மெர்குரிக் ஆக்ஸைட் அல்லது ரெட் ஆக்ஸைட் கரைசலை

லட்சுமணனை மிரட்டும் எலும்புக்கூடு!

ஊசி மூலம் சடலத்தின் சதைப் பகுதிகளில் செலுத்தி இருக்கலாம். அப்படிச் செலுத்தி இருந் தால், உடல் அழுகும் போது துர்நாற்றம் வீசாது’ என டாக்டர்கள் சொல்கின்றனர். இப்போது வெளியே சொல்லமுடியாத பல கோணங்களிலும் விசாரணை நடந்து வருகிறது!'' என்கிறார்.

வெளியூரில் இருந்த, முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமணனை செல்போனில் தொடர்பு கொண்டோம். ''அந்தக் கிணறு என்னுடைய அம்மா பெயரில் உள்ளது என்பதைத் தவிர, வேறு எந்த சம்பந்தமும் எங்களுக்குக் கிடையாது. எலும்புக் கூட்டை வைத்து எதிர்க் கட்சியினர் அரசியல் செய்யப் பார்க்கின்றனர்!'' என்றார்.

ஜெயலலிதாவுக்கு புகார் அனுப்பிய அ.தி.மு.க- வினர், ''தென் மண்டல தி.மு.க-வின் அதிகார மையத்துக்கு நெருக்கமாக இருந்தவர்கள், பல கொலை களை செய்துள்ளார்கள். அதனால், லட்சுமணன் தோட்டத்துக் கிணற்றில் இருந்த எலும்புக்கூடும், மதுரைக் கும்பல் கொலை செய்து போட்டதாக இருக் கலாம்!'' என்கின்றனர்.

கடந்த 29-ம் தேதி சென்னையில் உள்ள ஏ.டி.ஜி.பி. அலுவலகத்தில் இருந்து தேனி மாவட்ட போலீஸுக்கு வந்த கடிதத்தில், 'கிணற்றில் கண்டுபிடிக்கப்பட்ட எலும்புக் கூடு வழக்கின் விசாரணையின் நிலை என்ன? இதில், முன்னாள் எம்.எல்.ஏ. லட்சுமண னுக்கு சம்பந்தம் உள்ளதா? விசாரணையை ஏன் தீவிரப்படுத்தவில்லை’ என பல கேள்விகள் கேட்கப் பட்டுள்ளன.

லட்சுமணன் தோட்டத்தில் கிடைத்த எலும்புக் கூடு, பலரை பயமுறுத்தப் போகிறது என்பதுமட்டும் உறுதி.

- இரா.முத்துநாகு

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism