Published:Updated:

சென்னை மாநகரப் பேருந்தின் லட்சணம் இதுதான்

சென்னை மாநகரப் பேருந்தின் லட்சணம் இதுதான்

சென்னை மாநகரப் பேருந்தின் லட்சணம் இதுதான்

சென்னை மாநகரப் பேருந்தின் லட்சணம் இதுதான்

Published:Updated:
சென்னை மாநகரப் பேருந்தின் லட்சணம் இதுதான்
##~##

க்கத்து வீட்டுக்காரர் பாண் டித்துரையின் சித்தப்பா பையன் சண்முகவேலு, வேலை தேடி கிராமத்தில் இருந்து சென்னைக்கு வந்திருந்தான். மடிப்பாக்கத்தில் இருந்து அண்ணா சாலை அலுவலகத்துக்கு நேர்முகத் தேர்வுக்குப் போக வேண்டும். அதனால், 'மாநகரப் பேருந்தில் எப்படிப் போவது? எங்கே இறங்குவது? என்று, சண்முகவேலுக்கு வகுப்பு எடுத்தார், சித்தப்பா. அதில் காதில் விழுந்த தகவல்கள் இதோ... 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''நம்ம ஊர் மாதிரி பிடிச்சா கவர்ன்​மென்ட் பஸ், பிடிக்கலைன்னா பிரைவேட் பஸ்ஸுன்னு போக முடியாது. அங்க லேடீஸ் ஸீட் வலது பக்கம் இருக்கும். இங்க இடது பக்கம் இருக்கும். ஒயிட் போர்டு பஸ் மினிமம் கட்டணம்

சென்னை மாநகரப் பேருந்தின் லட்சணம் இதுதான்

2, எல்.எஸ்.எஸ். பஸ்ஸில்

சென்னை மாநகரப் பேருந்தின் லட்சணம் இதுதான்

2.50, எக்ஸ்பிரஸ் பஸ்ஸில்

சென்னை மாநகரப் பேருந்தின் லட்சணம் இதுதான்

2.50 (சிலவற்றில்

சென்னை மாநகரப் பேருந்தின் லட்சணம் இதுதான்

3), எம். சர்வீஸ் பஸ்களில்

சென்னை மாநகரப் பேருந்தின் லட்சணம் இதுதான்

3.00, சொகுசு பஸ்களில்

சென்னை மாநகரப் பேருந்தின் லட்சணம் இதுதான்

5.00

சென்னை மாநகரப் பேருந்தின் லட்சணம் இதுதான்

இதுல ஒயிட் போர்டு, எம். சர்வீஸ்... எல்லா நிறுத்தத்திலும் நிற்கும். எல்.எஸ்.எஸ்., எக்ஸ்பிரஸ், சொகுசு பஸ்கள் எல்லா நிறுத்தத்திலும் நிற்காது. (முக்கியக் குறிப்பு: எந்த பஸ்ஸாக இருந்தாலும் நிறுத்தத்தைவிட்டு தள்ளிப்போய்த்தான் நிற்கும்!) அதுவும், டிரைவர் வேண்டா வெறுப்பாகத்தான் நிறுத்துவார். இன்ஜின் நாலுகால் பாய்ச்சலில் உறுமிக்கொண்டே இருக்கும். கைப்பிள்ளை வைத்திருக்கும் பெண், கர்ப்பிணி, வயோதிகர் என்றெல்லாம் எந்தப் பாரபட்சமும் பார்க்க மாட்டார்கள்; யாராக இருந்தாலும் வேகமாக ஓடித்தான் பஸ்ஸில் ஏறிக்கொள்ள வேண்டும். குறுக்கே வந்து நம்மை பஸ்ஸில் ஏறவிடாமல் தடுக்கும் ஆட்டோக்கள் பற்றியோ, ஷேர் ஆட்டோக்கள் பற்றியோ டூ வீலர்கள் பற்றியோ போலீஸாரும் கண்டுகொள்ள மாட்டார்கள். டிரைவரும் கவலைப்பட மாட்டார்.

காலை 10 மணியாக இருந்தாலும் சரி... மாலை 5 மணியாக இருந்தாலும் சரி, இதுதான் மடிப்பாக்கத்துக்கு கடைசி பஸ் என்கிற ரீதியில்தான் பயணிகள் முண்டி அடித்துக்கொண்டு ஏறுவார்கள். அதற்குக் காரணம் இருக்கிறது. தலைநகர் பஸ்களில்... எந்த பஸ்ஸுமே குறிப்பிட்ட நேரத்துக்கு வராது. அதற்கு, 'டிராஃபிக் ஜாம்ல ஒண்ணுமே பண்ண முடியாது...’ என்று ரெடிமேடு பதில் வைத்து இருப்பார்கள். இதையே சாக்காக வைத்துக்கொண்டு டிரைவர்களும், கண்டக்டர்களும் மூன்று நான்கு பஸ்களாக ஒன்றன் பின் ஒன்றாக வருவார்கள். அப்புறம், அடுத்த ஒரு மணி நேரத்துக்கு தேவுடு காக்க வேண்டும். இந்த பயம் காரணமாகத்தான், பயணிகள் முண்டியடித்துக்கொண்டு செல்கிறார்கள்!

சென்னை மாநகரப் பேருந்தின் லட்சணம் இதுதான்

ஃபுட்போர்டு ஜாம்பவான்கள், பிக்பாக்கெட் பேர்வழிகள் ஆகியவர்​களைக் கடந்து உள்ளே போகலாம் என்றால், கண்டக்டரிடம் டிக்கெட் வாங்கும் முன்னே போக மறுப்பார்கள். கண்டக்டரிடம் கேட்டால், 'கொடுத்து அனுப்பு’ என்பார். ஆனால், சக பயணிகளோ, மிகுந்த சமூகப் பிரக்ஞை​யோடு வேறு பக்கம் முகத்தைத் திருப்பிக்கொள்வார்கள். 'பீக் அவர்ஸ்’ என்று கூறப்படும் காலை மற்றும் மாலை நேரங்களில் டிக்கெட்போடுகிறேன் என்று வண்டியை நிறுத்திவிடுவார்கள்.

வியர்வையில் ஊறிச் சலவை செய்த பான்ட்டும், சட்டையும் கசங்கிய நிலையில் பஸ்ஸில் நிற்க வேண்டும். ஏழெட்டு ஆண்டுகளுக்கு முன்பு, பஸ்களில் நிற்பவர்கள் மூன்று வரிசையாக நிற்கும் விதமாக இருக்கைகளுக்கு நடுவே இடைவெளி அதிகம் இருக்கும். இப்போது இருக்கும் சொகுசு பஸ்களிலோ இரண்டு வரிசைகளாகக்கூட நிற்க முடியாது. பஸ்களின் ஜன்னல்களின் வடிவமைப்பு நார்வே சுவீடன் போன்ற குளிர் தேசங்களில் இருக்க வேண்டிய கண்ணாடி ஜன்னல்கள். அந்த ஜன்னல்களை ஏற்றவும் முடியாது, இறக்கவும் முடியாது. அதேபோல், மேலே உள்ள பால்கனி ஜன்னல் (காற்று வரும் திறப்பு) துருப்பிடித்து உடைந்து இருக்கும். மழை பெய்தால் உள்ளே தண்ணீர் கொட்டும். போதாக்குறைக்கு, டிரைவர் ஸீட்டுக்குப் பின்புற நான்கு இருக்கைகளிலும் ஒருவர் உட்கார்ந்து எழுந்தால், 64 யோகாசனங்களையும் செய்ததற்கான பலன் கிடைக்கும்! இதைவிடக் கொடுமை, பஸ் அந்த ரூட்டில் பயணம் தொடங்கிய நாளில் வண்டியை சுத்தம் செய்ததோடு சரி, அடுத்து எஃப்.சி-க்குப் போகும் வரை சுத்தம் செய்யவே மாட்டார்கள்.

இறங்க வேண்டிய நிறுத்தம் என்ன என்று யாரும் கண்டுபிடிக்கவே முடியாது. நாம்தான் கவனமாக, நமக்கான பஸ் நிறுத்தத்தை அடையாளம் கண்டு இறங்க வேண்டும். இத்தனை கஷ்டங்களையும் கடந்து இறங்கலாம் என்றால், திமுதிமுவென ஒரு கும்பல் வேகமாக மேலே ஏறும். அவர்களுடன் சண்டை போட்டுத்தான் இறங்க வேண்டும். ஏறும் வழி, இறங்கும் வழி என்பதை எவரும் கடைப்பிடிக்க மாட்டார்கள். அதை எல்லாம் தாண்டி நாம் பஸ்ஸைவிட்டு இறங்கும்போது கிடைக்கும் சுகம் இருக்கிறதே. அடடா... அது ஆகஸ்ட்-15!'' சித்தப்பா வகுப்பை எடுத்து முடித்ததும், சண்முகவேலு, பவ்யமாகக் கேட்டான், ''நம்மூருக்கு பஸ் கோயம்பேட்ல எத்தனை மணிக்குப் புறப்படுது?''

- உலகதென்னவன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism