Published:Updated:

மண் அள்ளுவதில் முறைகேடு!

கொள்ளிட விவசாயிகள் கொந்தளிப்பு

மண் அள்ளுவதில் முறைகேடு!

கொள்ளிட விவசாயிகள் கொந்தளிப்பு

Published:Updated:
மண் அள்ளுவதில் முறைகேடு!
##~##

ழைக் காலமாக இருந்தாலும், வறட்சிக் காலம் ஆனாலும்... கடலூர் மாவட் டத்தில் அதிகம் பாதிக்கப்படுவது, டெல்டா பகுதிகளான சிதம்பரம் வட்டம், காட்டுமன்னார்கோவில் மற்றும் அதன் சுற்று வட்டாரப் பகுதி விவசாயிகள்தான்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மழைக் காலங்களில் கொள்ளிடம் ஆற்றின் வெள்ளப் பெருக்கால் டெல்டா பகுதியில் சுமார் 1 லட்சத்து 50 ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் நீரில் மூழ்கி, பாதிக்கப்படுகின்றன. இந்த இயற்கைப் பேரழிவில் இருந்து விவசாயி களைக் காப்பாற்றுவதற்காக போர்க்கால அடிப்ப டையில் கொள்ளிட ஆற்றின் கரையைப் பலப் படுத்த

மண் அள்ளுவதில் முறைகேடு!

108 கோடி மதிப்பில் டெண்டர் விட்டது அரசு. ஆனால், ''அந்தப் பணியை முறைப்படி முழுமையாகச் செய்யாமல், அரசு அதிகாரிகள் முறைகேடு செய்துள்ளனர்!'' என்று, விவசாய சங்கங்கள் போராட்டத்துக்குத் தயாராகின்றன.

மண் அள்ளுவதில் முறைகேடு!

கொள்ளிட கீழணை பாசன விவசாயச் சங்கத் தலைவர் விநாயகமூர்த்தியிடம் கேட்டபோது, ''அணைக் கரையில் இருந்து சின்னக்கரை மேடு கடல் முகத்துவாரம் வரை கொள்ளிட ஆற்றின் கரை மொத்தம் 66 கிலோமீட்டர் நீளம். கரையைப் பலப்படுத்த 7 பிரிவுகளாக

மண் அள்ளுவதில் முறைகேடு!

108 கோடி டெண்டர் விட்டனர். வீராணம் ஏரியில் 21 லட்சம் கன அடியும், நாரைக்கால் ஏரியில் 13 லட்சம் கன அடியும் மண் எடுத்து, கொள்ளிடக் கரையைப் பலப்படுத்த வேண்டும். ஆனால் அதிகாரிகள் அங்கே பெயர் அளவுக்கே மண் எடுத்துவிட்டு, மீதி மண்ணைத் தனியார் நிலங்களில் எடுத்துக் குளம் வெட்டிவிட்டு மீன்குஞ்சுகள் வளர்க்க வழிவகை செய்கிறார்களே தவிர, விவசாயிகளைப் பற்றிக் கவலைப்படவில்லை.

4-வது பிரிவில் உள்ள வெல்லூர், மாஅரசூர் கிராமங்களில் மட்டும் 8 குளங்கள் உள்ளன. வீராணம் ஏரி,

மண் அள்ளுவதில் முறைகேடு!

நாரைக்கால் ஏரிகளில் தனியார் தொழில்நுட்ப வல்லுநர்களை வைத்து எவ்வளவு மண் எடுக்கப்பட்டுள்ளது என்று மதிப்பீடு செய்ய வேண்டும். அதன் பிறகே ஒப்பந்தக்காரர்களுக்கு பணம் கொடுக்க வேண்டும். ஜூன் மாதம் தண்ணீர் திறக்கப்படுவதால், கீழணை மற்றும் வடக்குராஜன் கால்வாய்களில் நடக்கும் கட்டுமானப் பணிகளும் பாதிக்கப்படும். அதனால் அந்தப் பணியையும் விரைந்து முடிக்க வேண்டும். தனியார் நிலங்களில் மண் எடுப்பதைத் தவிர்த்து, ஏரிகளில் மண் எடுத்தால்தான் ஏரியின் கொள்ளளவு அதிகமாகும். வறட்சிக் காலங் களில் நீரைத் தேக்கிவைக்க முடியும். அதோடு, சென்னைக்கும் குடிநீரைக் கணிசமாகத் தரமுடியும். கொள்ளிட ஆற்றின் கரையை பலப்படுத்துவதால் உபரியாக வெளியேறும் 3.25 லட்சம் கன அடி நீர் ஆற்றின் வழியாக கடலில் கலந்துவிடும். அதனால் விவசாயி களுக்கு வெள்ளக் காலத்தில் எந்த பாதிப்பும் ஏற்படாது!'' என்று சொன்னார்.

இது குறித்து செயற்பொறியாளர் செல்வராஜிடம் கேட்டோம். ''இது பொய்யான குற்றச்சாட்டு. வீராணம் ஏரியில் 46 லாரியும், நாரைக்கால் ஏரியில் 26 லாரியும் வைத்து மண் எடுக்கப்பட்டு வருகிறது. மேலும், சிதம்பரம் பொன்னேரியிலும் மண் எடுத்து வருகிறோம். தனியார் நிலங்களில் மண் எடுக்கவில்லை. யாரோ வேண்டாதவர்கள் இப்படி வதந்தியைக் கிளப்பிவிடுகின்றனர்!'' என்று சொன்னார்.

உண்மை எப்போது வெளிவரும்?

- க.பூபாலன், படங்கள்: ஜெ.முருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism