Published:Updated:

அரசியல்வாதிகளுக்கு செக்!

நெய்வேலியில் புதிய புகைச்சல்!

அரசியல்வாதிகளுக்கு செக்!

நெய்வேலியில் புதிய புகைச்சல்!

Published:Updated:
அரசியல்வாதிகளுக்கு செக்!
##~##

நெய்வேலி நிலக்கரி நிறுவனம் என்றாலே போராட்டத்துக்கும் தொழிலாளர்களின் சலசலப்புக்கும் பஞ்சம் இருக்காது! இப்போது மீண்டும் ஒரு பரபரப்பு! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'என்.எல்.சி. நிறுவனத்தில் பணிபுரியும் நிரந்தரத் தொழிலாளர்கள், எந்த அரசியல் கட்சியின் பொறுப்பில் இருந்தாலும் அல்லது தொழிற்சங்கம் சார்ந்து இருந்தா லும் சரி... அவர்கள் மற்ற தொழிலாளர்கள் போல் கண்டிப்பாக நிறுவனத்தில் தங்களது பணியைச் செய்தாக வேண்டும்!’ என ஒரு சுற்றறிக்கை வந்திருப்பதுதான் லேட்டஸ்ட் ஹாட்!

இந்த சுற்றறிக்கை, நிறுவனத்தில் பணிபுரியும் அரசியல்வாதிகள் பலரது வயிற்றிலும் புளியைக் கரைத்துள்ள நிலையில், நெய்வேலி தி.மு.க. நகரச் செயலாளர் புகழேந்தியிடம் பேசினோம்.

அரசியல்வாதிகளுக்கு செக்!

''இந்த சுற்றறிக்கை, வரவேற்கத்தக்க விஷயம்தான். இது, அரசியல் கட்சிப் பொறுப்புகளில் இருந்து கொண்டு தங்கள் கட்சியின் செல்வாக்கைப் பயன்படுத்தி வேலைக்கு செல்லாதவர்களுக்குப் போடவேண்டிய கடிவாளம். இருந்தாலும், அதிகார பூர்வமாக தொழிலாளர்களால் தேர்தல் நடத்தித் தேர்ந்து எடுக்கப்பட்ட தொழிற்சங்கத்தைச் சேர்ந்த தலைவர்களுக்கும் அல்லது தொழிற்சங்கப் பொறுப்

அரசியல்வாதிகளுக்கு செக்!

பில் உள்ளவர்களுக்கும்கூட இதை அனுப்பி இருப்பது தான் கண்டிக்கத்தக்கது. காரணம், அரசியல் கட்சிப் பொறுப்பில் உள்ளவர்கள் கட்சிக்காகத்தான் பாடுபடுவார்கள்... ஆனால், எந்த ஒரு தொழிற்சங்கத்தைச் சேர்ந்தவர் ஆயினும் அவர்கள் தொழிலாளர்களின் நலனுக்காகத்தான் பாடுபடுவார்கள். தொழிலாளர்கள் பிரச்னையை அவர்கள்தான் நிர்வாகத்திடம் எடுத்துக் கூறுவார்கள். அவர்களுக்கு எல்லாம் இப்போது பிரச்னைதான்!'' என்றார்.

என்.எல்.சி. தொழிலாளர்களின் அ.தி.மு.க. பொறுப் பாளர் ரவிச்சந்திரனிடம் இதுபற்றிக் கேட்டோம். ''அரசியல் வேறு, தொழிற்சங்கம் வேறு! அதையும் இதையும் இங்கே உள்ளவர்கள் ஒன்று சேர்த்தா செயல்படுகிறார்கள்? இங்கே அரசியல் கட்சியில் பொறுப்பில் உள்ளவர்கள் இதுவரை தினமும் வேலை செய்யவில்லையா என்ன? இது தேவை இல்லாத விஷயம்தான்!'' என்றார் காட்டமாக.

என்.எல்.சி. நிர்வாகத் தரப்பில் பேசியபோது, ''சுமார் 30 தொழிலாளர் கள் ஏதோ ஒரு கட்சியின் பொறுப்பில் இருக்கிறார்கள். அவர்கள் வேலை நேரத்தில் தங்களின் கார்டை இன் அவுட் செய்வதுகூட இல்லை. ஆனால், சம்பளம் மட்டும் ஒழுங்காக  கைக்கு வந்துவிடவேண்டும் என்று நினைக்கிறார்கள். இவர்கள் ஒவ்வொரு மாதமும்

அரசியல்வாதிகளுக்கு செக்!

30 ஆயிரத்தில் இருந்து

அரசியல்வாதிகளுக்கு செக்!

50 ஆயிரம் வரை வாங்குகின்றனர். இவர்களால் மாதம் பல லட்சங்கள் நிறுவனத்துக்கு நஷ்டம். கூட்டிப் பார்த்தால், வருடத்தில் பல கோடிகளைத் தாண்டும். இதனால் எங்கள் மேலிடம், இந்த சர்க்குலரை அனுப்பி அவர்களுக்கு எச்சரிக்கை மணி அடித்துள்ளது. இதையும் மீறி செயல்பட்டால், அவர்களின் வேலைக்குக்  முற்றுப்புள்ளி வைக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும்!'' என்றனர் நம்மிடம்.

புது ரூட்டில் கிளம்பியுள்ள இந்தப் புகைச்சல் தீயாக மாறுமா அல்லது 'புஸ்’ ஆகுமா என்பது போகப்போகத்தான் தெரியும்.

- க.பூபாலன்

படங்கள்: ஜெ.முருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism