Published:Updated:

ரங்கசாமியின் குருட்டு நம்பிக்கைகள்!

அஷ்டமி, நவமி, வெண்டைக்காய்

ரங்கசாமியின் குருட்டு நம்பிக்கைகள்!

அஷ்டமி, நவமி, வெண்டைக்காய்

Published:Updated:
ரங்கசாமியின் குருட்டு நம்பிக்கைகள்!
##~##

ல்ல நேரம் பார்ப்பதிலேயே கவனமாக இருப்ப தால், சட்டமன்ற நடவடிக்கைகளை ஜவ்வுபோல இழுத்துக்கொண்டு இருக்கிறார் புதுச்சேரி முதல்வர் ரங்கசாமி. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

நடந்து முடிந்த ஐந்து மாநில சட்டமன்றத் தேர்தல் களில், புதுச்சேரி யூனியன் பிரதேசத்தைத் தவிர, மற்ற நான்கு மாநிலங்களிலும் புதிய அரசு பதவியேற்று, பணி களைத் தொடங்கி விட்டது. ஆனால், புதுச்சேரியில் முதல்வர் ரங்கசாமி மட்டுமே பதவியை ஏற்றார்.  நீண்ட இழுபறிக்குப் பிறகே எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்றனர். மந்திரி சபை அமைத்தல், சபாநாயகர் தேர்வு என எதுவுமே இன்னும் நடக்கவில்லை. அதற்குக் காரணம், தேய்பிறையாம்!

திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கும், சேலம் அப்பா பைத்தியம் சமாதிக்கும் நடையாக நடந்த முதல்வர் ரங்கசாமி, ஒரு வழியாகப் புதுச்சேரிக்கு வந்து சேரவும், கடந்த 3-ம் தேதி எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்றுக் கொண்டனர். அடுத்து, 'மந்திரி சபை அறிவிப்பார்’ என்று காத்திருந்த கவர்னர் பொறுமை இழந்து, 'அமைச்சர்கள் பதவி ஏற்புத் தேதியை எனக்குத் தெரியப்படுத்துங்கள். உடனே வருகிறேன்’ என்று கூறிவிட்டு, விடுமுறையில் சொந்த ஊருக்குக் கிளம்பிவிட்டார்.

ரங்கசாமியின் குருட்டு நம்பிக்கைகள்!

இந்தக் கால தாமதத்துக்குக் காரணமான முதல்வர் ரங்கசாமியின் 'தெய்வீக’ப் போக்கை மார்க்சிஸ்ட் கட்சி கண்டித்து உள்ளது. புதுச்சேரி மாநில மார்க்சிஸ்ட் செய லாளர் பெருமாளிடம் பேசினோம். ''புதுச்சேரியை ஆண்ட காங்கிரஸ் கட்சியின் மக்கள் விரோதப் போக்கால், மாற்று அணியான அ.தி.மு.க. - என்.ஆர். காங்கிரஸ் கூட்டணிக்கு மக்கள் ஆதரவு அளித்து உள்ளனர். ஆனால், மக்களின் நம்பிக்கைக்கு மாறாக அஷ்டமி, நவமி, தேய்பிறை என நேரம் காலம் பார்த்துக்கொண்டு சட்டமன்றத்தைக் கூட்டுவதில், தேவையில்லாத தாமதத்தை ஏற்படுத்துகிறார் ரங்கசாமி. ஆனால், புதுச்சேரி மக்கள் இவருக்கு நேரம், காலம் பார்த்து எல்லாம் ஓட்டுப் போட வில்லை என்பதை இவர் புரிந்துகொள்ள வேண்டும். இனிமேலும் தாமதிக்காமல் அமைச்சரவையை உடனே அவர் அமைத்து, மக்கள் பணிகளை விரைவாகத் தொடங்க வேண்டும்!'' என்று சொன்னார் ஆவேச மாக. இத்தனைக்கும் இந்தத் தேர்தலில் என்.ஆர்.காங்கிரஸுக்கு ஆதரவாகத்தான் மார்க்ஸிஸ்ட் கட்சி இருந்தது!

ரங்கசாமியின் குருட்டு நம்பிக்கைகள்!

எம்.எல்.ஏ-க்கள் பதவியேற்பு விழா முடிந்து, வெளியே வந்த ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ., ''அப்பாடா!

ரங்கசாமியின் குருட்டு நம்பிக்கைகள்!

இப்பத்தான் மனது நிம்மதியாக இருக்கிறது. மக்கள் வாக்களித்தும்கூட எங்கே எம்.எல்.ஏ-வாகவே பதவி ஏற்காமலேயே ஐந்து ஆண்டுகள் முடிந்துவிடுமோ என பயந்துபோய் இருந்தேன். 'நேரம் நல்லா இருக்கு!’ என்று ரங்கசாமியிடம் எந்த சாமி வந்து சொன்னதோ... எம்.எல்.ஏ. பதவியேற்பு நிகழ்ச்சியாவது நல்லபடியாக முடிந்தது. நான் இப்போ பதவியேற்ற எம்.எல்.ஏ. ஆயிட்டேன்!'' என்று ஒருவரிடம் ஏகத்துக்கும் கிண்டல் அடித்ததைப் பார்க்க முடிந்தது.

''இந்த மாதத்துக்குள் சட்டமன்றத்தைக் கூட்டி பட்ஜெட் தாக்கல் செய்ய வேண்டும். புதுச்சேரியில் உள்ள எட்டு தனியார் மற்றும் அரசு மருத்துவக் கல்லூரிகளில், மாணவர் சேர்க்கை தொடர்பாகப் பேச்சுவார்த்தை நடத்த வேண்டும். இப்படி உடனே செய்யவேண்டிய அத்தியாவசியப் பணிகள் இன்னும் எவ்வளவோ உள்ளன. இதை எல்லாம் மறந்துவிட்டு, சேலமே கதி என்று சரணடைந்து கிடக்கிறார் ரங்கசாமி. போகிற போக்கைப் பார்த்தால், புதுச்சேரியின் தலைமை இடமாக 'சேலம் அப்பா பைத்தியம் சமாதி’யை ஆக்கினாலும், ஆக்கிவிடுவார் போல!'' என்றும் நொந்துபோய் கூறினார் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ.!

மற்ற எம்.எல்.ஏ-க்களும்கூட, ''அஷ்டமி, நவமி, பாட்டிமை, பௌர்ணமி, ஓரை, தேய்பிறை, வெண்டைக்காய், வெள்ளைப் பூண்டு என மாதத்தின் பாதி நாட்களைக் கழித்து விடுகிறார் எங்கள் முதல்வர்!'' என தலையில் அடித்துக் கொள்கின்றனர்.

ஆனால், ரங்கசாமியோ எப்போதும் போல் மௌனம் காக்கிறார். ஒவ்வொரு முறையும் அவர் செல்லும் இடங்களில் பத்திரிகையாளர்கள் அவரைச் சூழ்ந்து கொண்டு ''அமைச்சரவைப் பட்டியல் எப்போது வெளியிடுவீர்கள்? சட்டமன்றம் எப்போது கூடும்?'' என்று கேட்கும்போதெல்லாம், ''நேரம் வரும்போது... வெளியிடுவேன், கூடும்போது தெரியும்...'' என்று சொல்கிறார்.

ரங்கசாமிக்கு நெருக்கமானவர்களிடம் விசாரித்தோம். ''எங்கள் தலைவர் தெய்வபக்தி அதிகம் உள்ளவர். அவர் பதவியேற்றவுடன் தேய்பிறை ஆரம்பித்து விட்டது. எனவேதான் இந்தத் தாமதம். 8 அல்லது 9-ம் தேதி, நாள் நன்றாக இருக்கிறது. அநேகமாக, அமைச்சர்கள் பதவியேற்பு அந்த நாட்களில் நடக்க வாய்ப்பு உள்ளது...'' என்றனர்.

ஆன்மிக ஈடுபாடு என்பது ஒருவரின் தனிப்பட்ட விஷயம். ஆனால், பொது வாழ்க்கை என்று வந்த பிறகு, தனது தனிப்பட்ட விருப்பங்களை எல்லாம் ஆட்சியில் திணித்து காலதாமதம் செய்வது சரியா? ரங்கசாமி யோசிக்க வேண்டும்!

- டி.கலைச்செல்வன்

படங்கள்: ஜெ. முருகன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism