Published:Updated:

போர்க் குற்றத்தில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள்!

ஆவேச வைகோ!

போர்க் குற்றத்தில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள்!

ஆவேச வைகோ!

Published:Updated:
போர்க் குற்றத்தில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள்!
##~##

டந்த ஜூன் 1-ம் தேதி, பெல்ஜியம் நாட்டில், ஈழத் தமிழர் இனப் படுகொலை தொடர்பான விவாதக் கூட்டத்தில் கலந்துகொண்டு திரும்பிய வைகோ, அதே சூட்டில் திருவாரூர் மாவட்டத்தில் முழங்கி னார்! மன்னார்குடி பந்தலடியில் பெரியார் திராவிடர் கழகம் சார்பாக, 'ராஜபக்ஷே போர்க் குற்றவாளி - ஐ.நா அறிக்கை விளக்க பொதுக் கூட்ட’த்தில் சிறப்புரை ஆற்றிய வைகோ, ''ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் இருந்து ஈழத் தமிழர் இனப் பிரச்னை குறித்துப் பேச அழைப்பு வந்தபோது நான் சற்றுத் தயக்கத்துடன்தான் பெல்ஜியம் சென்று கலந்துகொண்டேன். ஈழக் கொடூரத்தை நாங்கள் சொல்லும்போது, 'மிகைப்படுத்துகிறார்கள்’ என்றார் கள். இப்போது, ஐ.நா. மன்றமே, பக்கம் பக்கமாகத் தமிழர்கள் படுகொலை பற்றிச் சொல்கிறது. கொடியவன் ராஜபக்ஷே போர்க் குற்றவாளிக் கூண்டில் ஏற்றப்பட வேண்டும். 'இலங்கைப் படுகொலையைப்பற்றி தமிழக சட்டமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றுங்கள்!’ என்றபோது, 'அது இந்திய அரசு முடிவு எடுக்க வேண்டும்’ என துரோகம் செய்த காரணத்தால்தான், கருணா நிதியின் அரசு வீழ்த்தப்பட்டது. இப்போது 'கூடா நட்பு கேடாய் முடியும்’ என புலம்புவதால் எந்தப் பலனும் இல்லை. நண்பர்களைத் தேர்ந் தெடுக்கும் முன் யோசிக்க வேண்டும், நீங்கள் செய்யவில்லை. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

போர்க் குற்றத்தில் காங்கிரஸ் மற்றும் கூட்டணிக் கட்சிகள்!

ஐரோப்பிய நாடாளுமன்றத்தில் எனக்கு 15 நிமிடங்கள் மட்டுமே பேசுவதற்கு அனுமதித்தார்கள். அதற்குள் அனைத்தையும் சொல்லிவிட முடியாது. ஆனால், சுருக்கமாகச் சொன்னேன். 'எங்கள் கண்களில் இருந்து வழிந்த கண்ணீர் உங்கள் கண்களுக்குத் தெரியவே இல்லை. எங்களின் அழுகுரல் உங்கள் காதுகளுக்குக் கேட்கவே இல்லை. ஈழத்தில் தமிழர்கள் நல்வாழ்வுக்கு முதல் படியை நீங்கள் அமைத்துக் கொடுப்பீர்கள் என நம்புகிறேன். 3 லட்சத்து 33 ஆயிரம் பேர் பாதுகாப்பு வளையத்தில் அடைத்து வைக்கப்பட்டு, அங்கேயும் குண்டுகள் வீசி கொலை செய்தனர். மருத்துவமனைகளில் மயக்க மருந்துகள் கிடையாது. கசாப்புக் கடைகளில் ஆடு, மாடுகளை வெட்டுவதைப்போல காயம் பட்ட உறுப்புகளை அறுத்து எடுத்தனர். மருத்துவமனைகளின் மீதே குண்டுகள் வீசிய கொடுமையை அரங்கேற்றினர். இவை எல்லாம் இந்திய அரசின் துணையோடு நடத்தப்பட்டது. போர்க் குற்றம் என வரும்போது காங்கிரஸ் கட்சி மட்டும் இல்லாது, அதன் கூட்டணிக் கட்சிகளும் சேர்க்கப்பட வேண்டும். இலங்கையில் பொது வாக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். அதில் புலம் பெயர்ந்த தமிழர்களுக்கும் ஓட்டுரிமை கொடுக்கப்பட வேண்டும். தமிழர்களுக்கு சுய நிர்ணய உரிமை வழங்கப்பட வேண்டும். எந்த நாடும் இலங்கைக்கு ஆயுத உதவி வழங்கக் கூடாது’ என்று விவரித்தேன். மொத்தம் 10 தீர்மானங்கள் அந்தக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. பிரபாகரன் இருக்கிறார். வரவேண்டிய நேரத்தில் கண்டிப்பாக வருவார். நிறைவாக இருக்கும் வரை மறைவாக இருப்பார்...'' என முடித்தார் வைகோ!

- சி.சுரேஷ்

படம்: கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism