Published:Updated:

'வேஸ்ட்' மேன்!

அதிர்ச்சியில் புதுக்கோட்டை!

'வேஸ்ட்' மேன்!

அதிர்ச்சியில் புதுக்கோட்டை!

Published:Updated:
'வேஸ்ட்' மேன்!
##~##

'கிராம மக்களுக்கு வந்த கடிதங்களை, கடந்த மூன்று ஆண்டுகளாகவே பட்டுவாடா செய்யாமல், குப்பையில் தூக்கிப்போட்டு இருக்கிறார் ஒரு போஸ்ட்மேன்’ என்று ஜூ.வி. ஆக்ஷன் செல் எண்ணுக்கு (044-42890005) தகவல் வரவே, அதிர்ந்து கிளம்பினோம்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

புதுக்கோட்டை மாவட்டம், வடகாட்டில் இருந்து நான்கு கிலோமீட்டர் தூரத்தில் இருக்கிறது, கொத்தமங்க லம் கிராமம். இங்கு சுமார் 20,000 மக்கள் வசிக்கிறார்கள். இந்த கிராமத்தின் அஞ்சலகத்தில்தான் அந்த கொடுமை நடந்துள்ளது.

நம்மிடம் பேசிய சிவசாமி, ''வியாழக்கிழமை காலையில் நான் எங்க போஸ்ட் ஆபீஸ் பின்னே இருக்குற செல்வம் என்பவர் வீட்டு வழியா போயிட்டு இருந்தேன். வீட்டு வாசல்ல இருந்த குப்பைத் தொட்டியில் ஒரு சாக்குப் பை கிடந்தது. பெரிய மூட்டையா இருந்ததால, நானே பிரிச்சிப் பார்த்தேன். உள்ளே கட்டுக் கட்டாக தபால்கள். எல்லாத் தையும் எடுத்துப் பார்த்தா, மூணு வருஷத்துக்கு முந்தி வந்த கடிதங்கள், ஆயிரத்துக்கும் மேற்பட்ட டெலிபோன் பில்கள், ரெண்டு பாஸ்போர்ட் என ஏகமாய் இருந்தது.

'வேஸ்ட்' மேன்!

அதுக்கு அப்புறம் கிராமத்தைச் சேர்ந்த எல்லாரையும் கூப்பிட்டு விஷயத்தைச் சொன்னேன். உடனே, கடித மூட்டையைக் கொண்டு போய் கடைத்தெருவில் வைத்துக்கொண்டு, அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்தோம். அதிகாரிங்கள் வந்து போஸ்ட்மேன் பவானந்தத்தை கூப்பிட்டு விசாரிக்கும்போதே, 'பவானந் தத்தின் கூட்டாளி செல்வம் வீட்டையும் சோதனை செய்யணும்’னு சொன்னோம். கிராம மக்கள் ஒண்ணு சேர்ந்து செல்வம் வீட்டுக்குள் போய்ப் பார்த்தோம். அங்கே இன்னும் ரெண்டு சாக்கு மூட்டை நிறையக் கடிதங்களை கட்டிப்போட்டு இருந்தாங்க. அதையும் கொண்டுவந்து குடுத்தோம்...'' என்றார்.

'வேஸ்ட்' மேன்!

சி.பி.ஐ-யின் ஒன்றியச் செயலாளரான செங்கோடன், ''இந்த ஊருக்குள்ள பெரும்பாலானவங்க, 'கடுதாசி

'வேஸ்ட்' மேன்!

எதுவுமே வர்றதில்ல’ன்னு அடிக்கடி குறை சொல்வாங்க. ரெண்டு மாசத்துக்கு முன்னகூட இந்த ஊரைச் சேர்ந்த ராஜேந்திரன் என்பவர், தனக்கு வரவேண்டிய டெண்டர் தொடர்பான கடிதம் வரலைன்னு புகார் கொடுத்தார். அப்பக்கூட போஸ்ட்மேன் பவானந்தம் கண்டுக்கவே இல்லை. அவர், இதே ஊரைச் சேர்ந்தவர் என்பதால், அவரு தப்பு பண்ணி யிருக்க மாட்டார்னு எல்லாரும் நம்பிட்டாங்க. இதுக்கெல்லாம் காரணமே அவர், எந்நேரமும் போதையில் இருக்குறதுதான்.

இங்க இருக்குறவங்களுக்கு வர்ற கடிதங்கள வீட்டுக்கு வீடு போய்க்கூட கொடுக்க வேண்டியது இல்லை. பெரும்பாலானவங்க இந்தக் கடைத் தெருவுலயே இருப்பாங்க. அதனால இங்கயே தபால்களை கொடுத்துவிடலாம். இவரால், பலரோட வாழ்க்கை கேள்விக் குறியாயிடுச்சி. இங்க மட்டும் இல்லை. பெரும்பாலான கிராம அஞ்சலகங்களிலும் இப்படித் தவறுகள் நடக்கும்னு நாங்க சந்தேகப்படுறோம்...'' என்றார்.

தனம் என்பவர், ''நான் கல்லூரியில் வேலைக்கு விண்ணப்பம் அனுப்பி இருந்தேன். அவங்க போன 18-ம் தேதி எனக்கு இன்டர்வியூ கடிதம் அனுப்பி இருக்காங்க. எங்க போஸ்ட்மேன் 26-ம் தேதிதான் அந்த லெட்டரை எனக்குக் கொடுத்தார். ஆனா, கடிதத்துல 20-ம் தேதியிட்ட கொத்தமங்கலம் போஸ்ட் ஆபீஸ் முத்திரை இருக்கு. அந்த கடிதத்தை எடுத்துக்கிட்டு அந்த காலேஜுக்குப் போனேன். '23-ம் தேதியே இன்டர்வியூ முடிஞ்சு போச்சு. இனிமே ஒண்ணும் பண்ண முடியாது’ன்னு சொல்லிட்டாங்க. அதே மாதிரி குரூப் 1 தேர்வுக்கு விண்ணப்பித்து இருந்தேன். அதுக்கும் ஹால் டிக்கெட் வரலை. இவங்களால என் வாழ்க்கையே போச்சு...'' என்று நொந்துகொண்டார்.

'வேஸ்ட்' மேன்!

சுமதி என்பவரோ, ''நான் வி.ஏ.ஓ. வேலைக்கு தேர்வு எழுத விண்ணப்பம் அனுப்பி இருந்தேன். அதுக்கான ஹால் டிக்கெட்டே எனக்கு வந்து சேரலை. என்னோட தம்பிக்கு எம்ப்ளாய்மென்ட் கார்டை புதுப்பிச்சு அனுப்பி இருக்காங்க... அதுவும் வந்து சேரல. 'நாமதான் ஏதோ தப்பு பண்ணிட்டோம்... அதனாலதான் ஹால் டிக்கெட் வரலை’னு நினைச்சிக்கிட்டு இருந்துட்டேன். ஆனா, இப்பத்தானே உண்மை தெரியுது'' என்றார் ஆத்திரத்துடன்!

ஏற்கெனவே, இந்த தபால் நிலையத்தில் போஸ்ட் மாஸ்டராக இருக்கும் மாணிக்கம் என்பவர், சில வருடங்களுக்கு முன்பு மணியார்டர் பணத்தில் தில்லுமுல்லு செய்ததாக இடை நீக்கம் செய்யப்பட்டு இருக்கிறார். அதோடு போஸ்ட்மேன் பவானந்தம் முதியோர் உதவித்தொகை வாங்குபவர்களிடம் தலைக்கு

'வேஸ்ட்' மேன்!

20 கமிஷனாக எடுத்துக் கொண்டுதான் மீதிப் பணத்தை கொடுப்பாராம். இவரும் அதே ஊரைச் சேர்ந்த செல்வமும் நெருங்கிய நண்பர்களாம். குடித்துவிட்டு ஊர் சுற்றுவதுதான் இவர்களின் முழு நேரப் பொழுதுபோக்கு. தற்போது பவானந்தமும், மாணிக்கமும் தலை மறைவாகி விட்டனர்.

தபால் துறை கண்காணிப்பாளர் செல்வராணியிடம் பேசினோம். ''கடந்த மூணு வருடங்களாகவே, பவானந்தம் தபால்களை சரிவரக் கொடுக்கவில்லை. இப்போது அவரை இடைநீக்கம் செய்திருக்கிறோம். அடுத்தகட்ட நடவ டிக்கை விசாரணையின் முடிவில்தான் தெரியும். கொடுக்கப் படாமல் கிடந்த கடிதங்களை இப்போது கொடுத்து வருகிறோம்...'' என்றார்.

ஒரு கிராமத்தையே சோகத்தில் தவிக்க விட்டிருக்கும் பவானந்தத்துக்கு துறை ரீதியான விசாரணை மட்டும் போதாது, கடுமையான தண்டனை வேண்டும் என்பதுதான் மக்களின் கோரிக்கை. இதுபோன்ற தவறுகள் வேறு எங்கும் நடக்காமல் இருக்கட்டும்!

- வீ.மாணிக்கவாசகம்

படங்கள்:   பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism