Published:Updated:

இளைஞர் காங்கிரஸார் ராகுல்ஜியை ஏமாத்திட்டாங்க..

யுவராஜுக்கு எதிர்ப்புக் குரல்

இளைஞர் காங்கிரஸார் ராகுல்ஜியை ஏமாத்திட்டாங்க..

யுவராஜுக்கு எதிர்ப்புக் குரல்

Published:Updated:
இளைஞர் காங்கிரஸார் ராகுல்ஜியை ஏமாத்திட்டாங்க..
##~##

'லட்சக்கணக்கில் உறுப்பினர்களைச் சேர்த்து இருப்பதாக இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் அளந்துவிட்டது எல்லாமே பச்சைப் பொய்! இவர்களது தகுதியும்,திறமை யும் நடந்து முடிந்த தேர்தலில் பட்டவர்த்தனமாகத் தெரிந்து விட்டதே! அதனால், நமது கட்சி வளரவேண்டுமானால், அதிரடியாக தமிழக இளைஞர் காங்கிரஸை கலைப்பதுதான் நல்ல முடிவு!’ - இப்படியான நெத்தியடி வார்த்தைகளுடன் காங்கிரஸ் கட்சிக்குள் இருந்தே ராகுல் காந்திக்கு ஒரு கடிதம் செல்ல, டென்ஷனாகி நிற்கிறது இளைஞர் காங்கிரஸ். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காங்கிரஸ் கட்சியின் தேசிய ஒருமைப்பாட்டு கமிட்டியின் ஈரோடு மாவட்டத் தலைவரான வெங்கடாசலம்தான் அந்தக் கடிதத்தை எழுதி, ராகுலுக்கு அனுப்பி இருப்பவர். அவரிடம் பேசினோம்.

இளைஞர் காங்கிரஸார் ராகுல்ஜியை ஏமாத்திட்டாங்க..

''பொத்தாம் பொது வாக இளைஞர் சக்தியை நான் விமர்சனம் செய்யவில்லை. இன் னிக்கு அ.தி.மு.க. ஆட்சியை பிடிச்சதுக்கு மிக முக்கியக் காரணம், இளைஞர்களது வாக் குகள்தான். அதனால், தமிழக இளைஞர் காங்கிரஸை நான் கடுமையாக எதிர்க்கிறேன். தலைவரா இருக்கிற யுவராஜ் தொடங்கி பல நிர்வாகிகளுக்கு அரசியல்னா என்னான்னே தெரியலை... தேர்தல்னா என்னான்னு தெரியலை. சீரியஸா செயல்படக்கூடிய எல்லா விஷயங்களிலும் விளையாட்டுத்தனமா, தான்தோன்றித்தனமா நடந்துட்டு, அறிக்கைவிட்டு கட்சியைக் காலி பண்ணிட்டாங்க. இளைஞர் காங்கிரஸ் ஆளுங்க தொடக்கத்துல இருந்தே சரியில்லை சார். தமிழ்நாடு முழுக்க நடைபயணம் போறதா ஒரு ஃபிலிம் காட்டுனாங்களே! அதுல அஞ்சு பைசாவுக்காச்சும் பிரயோஜனம் இருந் துச்சா? அந்த நடைபயண மேப்புல

இளைஞர் காங்கிரஸார் ராகுல்ஜியை ஏமாத்திட்டாங்க..

ஆரம்பிச்சு அத்தனையிலும் கோஷ்டிப் பூசல்தான் வெடிச்சது. தங்களுக்கு வேண்டப்பட்டவங்க தலைவரா இருக்கிற மாவட்டங்களை மட்டுமே நடைபயண மேப்புல கொண்டு வந்தப்பவே இவங்க லட்சணம் புரிஞ்சு போச்சு. இளைஞர் காங்கிரஸ்ல தமிழ்நாடு முழுக்கப் பட்டிதொட்டியெல்லாம் சேர்த்து அத்தனை லட்சம் உறுப்பினர்களைச் சேர்த்துட்டோம்... இத்தனை லட்சத்தை சேர்த்துட்டோம்னு கதை கதையா அளந்துவிட்டு பாவம் ராகுல்ஜியை நம்பவைச்சாங்க. அந்த உறுப்பினர்கள் ஓட்டு போட்டிருந்தாக்கூட கடந்த காங்கிரஸ் வேட்பாளர்கள் மரியாதையான எண்ணிக்கையில் ஓட்டு வாங்கியிருக்கணுமே!

கிடைச்ச 63 ஸீட்ல இளைஞர் காங்கிரஸுக்கு மட்டும் 10 இடங்கள் ஒதுக்குனாங்க. ஆனா 10 பேருமே தோத்தாங்க. தோல்வின்னா...

படுமோசமான தோல்வி. யுவராஜுக்கு அவரோட சொந்த ஊர்லேயே சொல்லிக்கிற மாதிரி ஓட்டு விழலையே? அந்தப் பொண்ணு ஜோதிமணியைத் தவிர மத்தவங்களுக்கு தேர்தலைப் பத்தின அடிப்படை விஷயங்களாச்சும் தெரிஞ்சு இருக்குமாங்கிறதே சந்தேகம்தான். இந்தக் கேவலம் தேவையா காங்கிரஸுக்கு? இளைஞர் காங்கிரஸுக்கு 10 இடங்கள் ஒதுக்கினதுக்கு பதிலா, தி.மு.க-வே கூடுதலான இடங்களில் போட்டியிட்டு இருக்கலாம். கூடுதலா ரெண்டு மூணு இடங்களைக் கைப்பற்றி எதிர்க்கட்சியாவாச்சும் உட்கார்ந்திருக்கும்.

இளைஞர் காங்கிரஸுக்கு வெட்டி பந்தா பண்ணக்கூடிய ஆளுங்க தேவையில்ல. ரோட்டுலேயும்,

இளைஞர் காங்கிரஸார் ராகுல்ஜியை ஏமாத்திட்டாங்க..

சேத்துலேயும் இறங்கி உழைச்சு மக்கள் பிரச்னையைத் தெரிஞ்சுக்கக்கூடிய களப்பணியாளர்கள்தான் தேவை. அதனால உடனடியா தமிழக இளைஞர் காங்கிரஸை கலைச்சுட்டு, புதுசா தேர்தல் நடத்தணும். உண்மையான இளைஞர்களை, நிர்வாகிகள் ஆக்கணும். இல்லேன்னா யூத் காங்கிரஸோட செயல்பாடுகளால காங்கிரஸ் கட்சியே இருக்கிற இடம் தெரியாம சிதைஞ்சுடும்...'' என்று எச்சரித்தார்.

இவரது குற்றச்சாட்டுகளை, தமிழக இளைஞர் காங்கிரஸ் தலைவரான யுவராஜிடம் தெரிவித்தபோது, ''தேர்தலில் கிடைத்த தோல்விக்குக் காரணம் ஆளும் கட்சி மேலிருந்த வெறுப்பும், அதிருப்தியும்தான். இதுல இளைஞர் காங்கிரஸோட தலையை ஏன் உருட்டணும்? துவங்கப்பட்ட குறுகிய காலத்துலேயே எழுச்சியோட தேர்தலை சந்தித்த யூத் காங்கிரஸை விமர்சனம் பண்றதுக்கு யாருக்கும் தகுதியில்லை. எத்தனை லட்சம் பேரை உறுப்பினரா சேர்த்து இருக்கிறோம் என்பதற்கு ஆதாரம் இருக்குது.

இடையில யார் இந்த வெங்கடாசலம்? இவர் குரல் கொடுத்துட்டா உலகம் தலைகீழா சுற்ற ஆரம்பிச்சுடுமா? ராகுல் காந்தியையே விமர்சனம் பண்ணக்கூடிய நபர் பேசுற பேச்சை, ஒரு பொருட்டாவே எடுக்கக் கூடாதுங்க. யூத் காங்கிரஸ் சொன்ன மாதிரி தேர்தலை சந்திச்சிருந்தா, பிரமாண்டமான எதிர்க்கட்சியா சட்டசபையில காங்கிரஸ் உட்கார்ந்து இருக்கும். கட்சி ஆரம்பிச்சு இத்தனை வருஷம் கழிச்சு ஸ்டெடியான இடத்துல போயி விஜயகாந்த் உட்காரலையா? அதே மாதிரி தமிழக அரசியலில் இளைஞர் காங்கிரஸும் கூடிய விரைவில் இரும்புக் கோட்டையா மாறும். எங்களை பரிகாசம் பண்ணினவங்க அன்னிக்கு ஓடி ஒளிஞ்சுக்குவாங்க. இளைஞர் காங்கிரஸையும், என்னையும் குறி வைத்துத் தாக்குதல் நடத்தும் வெங்கடாசலம் உடனே தன்னைத் திருத்திக்கொள்ளவில்லை என்றால், சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன்!'' என்றார்.

இளைஞர் காங்கிரஸார் ராகுல்ஜியை ஏமாத்திட்டாங்க..

இந்தப் பரபரப்பு போதாது என்று சமீபத்தில் கோவை நாடாளு மன்றத் தொகுதி இளைஞர் காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்தில், 'அ.தி.மு.க-வுடன் கூட்டணி சேர வேண்டும் என்ற கோரிக்கையை வலியுறுத்துவோம்’ என்றும் கணிசமான குரல்கள் ஒலிக்கவே, கட்சி கலகலத்து நிற்கிறது. இது கோவை இளைஞர் காங்கிரஸ் எடுத்த முடிவு மட்டும் அல்ல, தமிழகமெங்குமே இளைஞர் காங்கிரஸார் மத்தியில் அ.தி.மு.க. ஆதரவு மோகம் ஆட்டிப்படைக்கிறது என்கிறார்கள். இது காங்கிரஸ் கட்சியில் உள்ள தி.மு.க. ஆதரவுத் தலைகளை அதிர வைத்திருக்கிறது.

காங்கிரஸ் என்றாலே கலாட்டா தானோ!

- எஸ்.ஷக்தி

படங்கள்: தி.விஜய்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism