Published:Updated:

அமாவாசை கேரக்டரா மாறிட்டார் வெங்கடாசலம்!

சேலம் எம்.எல்.ஏ. மீது கிடுகிடு புகார்கள்!

அமாவாசை கேரக்டரா மாறிட்டார் வெங்கடாசலம்!

சேலம் எம்.எல்.ஏ. மீது கிடுகிடு புகார்கள்!

Published:Updated:
அமாவாசை கேரக்டரா மாறிட்டார் வெங்கடாசலம்!
##~##

''சேலம் மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ. வெங்கடாசலத்துக்குப் பதவி கிடைத்து ஒரு மாதம்கூட ஆகலை. அதுக்குள்ள அவரின் அடாவடி, அத்துமீறல்கள், கட்டப்பஞ்சாயத்து, அதிகார துஷ்பிரயோகம் பொறுக்க முடியலை!'' என்று குற்றம் சாட்டுவது தி.மு.க-வினர் இல்லைங்க... அ.தி.மு.க-வின் ரத்தத்தின் ரத்தங்கள்தான்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இது பற்றி அ.தி.மு.க. தொண்டர் ஒருவர் நம்மிடம், ''இந்த வெங்கடாசலம் சோளம்பள்ளத்துல பரோட்டா கடை ஆரம்பிச்சார். அதுல லாபம் கிடைக்கவே, அப்போதைய அ.தி.மு.க. மாவட்டச் செயலாளரா இருந்த அர்ச்சுனனைப் பார்த்து, சரணாகதியா கால்ல விழுந்து காக்கா பிடிச்சு கட்சிக்குள் நுழைஞ்சார். இவர், அப்பல்லாம் ஒரு சின்னப் பையன் அ.தி.மு.க. கரைவேட்டி கட்டி இருந்தாலும் அவங்க காலில் விழுந்துடுவார். இப்படித்தான் கட்சியில் படிப்படியா உயர்ந்தார்!

அமாவாசை கேரக்டரா மாறிட்டார் வெங்கடாசலம்!

2001-ல் உள்ளாட்சித் தேர்தலில் அ.தி.மு.க. சார்பா ஸீட் கொடுக்காததால், இவரது மனைவியை சுயேச்சையா நிறுத்தினார். இதனால் தலைமை, இவரைக் கட்சியின் அடிப்படை உறுப்பினர் பதவியில் இருந்து நீக்குச்சு. பிறகு இவரைக் கட்சியில எப்ப சேர்த்தாங்கன்னு யாருக்கும் தெரியாது. 2006-ல் 21-வது வார்டு கவுன்சிலரா இருந்தார். கட்சிக்காரன் எல்லார் காலிலும் கூச்சப்படாமல் அடிக்கடி விழுந்ததால், அ.தி.மு.க. கவுன்சிலர்கள் இவரையே மாமன்ற எதிர்க்கட்சித் தலைவரா தேர்ந்தெடுத்தாங்க. ஆனா, பொதுப்பிரச்னை எதுவும் பேசாமல் தி.மு.க-வோடு மறைமுக நட்பு வெச்சுக்கிட்டு, கமிஷனை கறாராக வாங்கிப் பல கோடிகளை சேர்த்துட்டார். ராவணனிடம்

அமாவாசை கேரக்டரா மாறிட்டார் வெங்கடாசலம்!

30 லட்சம் பணம் கொடுத்துத்தான் சேலம் மேற்குத் தொகுதி எம்.எல்.ஏ. ஸீட் வாங்கினார்.

தேர்தல் கவுன்ட்டிங் அன்னிக்குக் காலையிலகூட அ.தி.மு.க. நிர்வாகிகள் காலில் விழுந்துட்டுத்தான் ஓட்டு எண்ணுற இடத்துக்குப் போனார். ஆனா, வெற்றி பெற்றதும் செயல்பாடுகள் 'அமைதிப்படை’ அமாவாசை கேரக் டரா மாறிட்டார். எம்.எல்.ஏ. ஆனதும் கார்ப்பரேஷன் அதிகாரிகளை மிரட்டுறது, கட்டப்பஞ்சாயத்து, வசூல் வேட்டை, கனிமப் பொருட்கள் கொள்ளைன்னு ஆரம்பத்திலேயே அராஜகம் செய்ய ஆரம்பிச்சுட்டார். எம்.எல்.ஏ. அலுவலகத்தில் அதிகாரிகளையும், தொழில் அதிபர்களையும் சந்திக்கிறார். ஆனா, அடிப்படைத் தொண்டர்களுக்கு உள்ளே அனுமதி கிடையாது.

தமிழ்நாடு தோட்டக்கலைத் துறை சார்பா சேலத்தில் ஆறு காய்கறிக் கடைகள் தற்போது தி.மு.க-வினர் வசம் இருக்குது. அந்தக் கடைகளை அவர்களே வைத்துக்கொண்டு ஒரு கடைக்கு தினம்

அமாவாசை கேரக்டரா மாறிட்டார் வெங்கடாசலம்!

300 எம்.எல்.ஏ-வுக்குக் கொடுக்கணுமாம். உழவர் சந்தையில் உள்ள சைக்கிள் ஸ்டாண்ட்டையும் பினாமி

அமாவாசை கேரக்டரா மாறிட்டார் வெங்கடாசலம்!

பெயரில் வாங்கியுள்ளார். உழவர் சந்தையில் உள்ள எல்லாக் கடைகளிலும் எம்.எல்.ஏ. வெங்கடாசலத்தின் அக்கா மகன் நடராஜ், பணம் வசூலிக்கிறார். தாளவாய்ப்பட்டி பால்பண்ணையில் லாரி லோடிங், அன்லோடிங் செய்வதும் தி.மு.க. வசம்தான்! அதையும் அவர்களே தொடர, எம்.எல்.ஏ. மருமகன் சங்கரிடம் தினமும்

அமாவாசை கேரக்டரா மாறிட்டார் வெங்கடாசலம்!

2,000 கொடுப்பதாக ஒப்பந்தம் போட்டு இருக்கிறார்கள். தி.மு.க-காரங்க சட்டவிரோதமாக மணல் எடுக்கும் குவாரிகளில், 'எனக்கு கமிஷன் மாதம்

அமாவாசை கேரக்டரா மாறிட்டார் வெங்கடாசலம்!

20 லட்சம் வேணும்’னு சொல்லி இருக்கிறார். உள்ளூர் அமைச்சர் பெயரையும் இதில் இழுத்து விடுகிறார். இவர் போகிற போக்கைப் பார்த்தால், வீரபாண்டியாருக்கே அண்ணனா மாறிவிடுவார் போல இருக்கு. இந்த விஷயங்கள் எல்லாம் முன்னாள் அமைச்சர் செம்மலை காதுக்குப் போகவே, வெங்கடாசலத்தைக் கூப் பிட்டுக் கண்டிச்சி இருக்கார்!'' என்று கொட்டித் தீர்த்தார்கள்.

இது பற்றி செம்மலையிடம் கேட்டபோது, ''தூய்மையான பால் இருக்கும் குடத்தில் களங்கம் விளைவிக்கும் வகையில் சுயநலத்தோடு கட்சியின் கொள்கைக்கு எதிராக, ஆட்சிக்கு அவப்பெயர் ஏற்படுத்தும் வகையில் யார் செயல்பட்டாலும், அம்மா விடமாட்டார்கள். நீங்கள் சொல்கிற அனைத்து விஷயங்களும்எனக்கும் மாவட்ட கழகத்துக்கும் வந்தது. சம்பந்தப்பட்ட வர்களை விசாரித்தோம். ஓரளவுக்கு உண்மை என அறிந்து கொண்டதால் மாவட்டக் கழகம், வெங்கடாசலத்தை கண்டித்து இருக்கிறது. இதுபோன்ற செயல்கள் இனியும் தொடர்ந்தால் அம்மாவின் கவனத் துக்கு இதை நிச்சயம் மாவட்டக் கழகம் கொண்டு செல்லும். இனி எங்கு, யார் தவறு செய்தாலும் அம்மாவின் கவனத் துக்கு எடுத்துச்செல்லப்பட்டு, ஒழுங்கு நடவடிக்கை எடுப்பார்கள் அம்மா!'' என்று சொன்னார்.

இது பற்றி வெங்கடாசலத்திடம் கேட்ட போது, ''இந்த சாதாரண ஏழைக்கு அம்மா ஸீட் கொடுத்து ஜெயிக்க வெச்சிருக்காங்க. அதனால அம்மாதான் எனக்கு முக்கியம். அவுங்க என்ன சொல்றாங்களோ, அதைத்தான் கேட்பேன். நான் எம்.எல்.ஏ. மாதிரி நடந்துகொள்ள மாட்டேன். இன்னும் டூ-வீலரில்தான் எல்லா இடத்துக்கும் போயிட்டு வரேன். நான் மக்களோடு மக்களா இருந்து வேலை செய்வது, எங்க கட்சியில் இருப்பவர்கள் சிலருக்குப் பிடிக்கலை. நான் வளர்ந்துடுவேன்னு பயந்துதான் இப்படி இல்லாததும் பொல்லாததும் சொல்லறாங்க. சத்தியமா நீங்க சொல்லற ஒரு விஷயம்கூட எனக்குத் தெரியாது. இதில் கொஞ்சமும் உண்மை இல்லை. ஒரு ஏழை அதிகாரத்துக்கு வரக்கூடாதா? அம்மா போட்ட பிச்சை, இந்த எம்.எல்.ஏ ஸீட். அதுக்கு துளியும் களங்கம் வர்ற மாதிரி நான் ஒருபோதும் நடந்துக்க மாட்டேன். என்பேரைச் சொல்லிக் கேட்டாலும், எதுவும் செய்ய வேண்டாம்னு எல்லார்கிட்டயும் நோட்டீஸ் கொடுத்திருக்கேன்!'' என்றார் உறுதியாக.

நெருப்பில்லாமல் புகையுமா!

- வீ.கே.ரமேஷ்

படங்கள்: எம்.விஜயகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism