Published:Updated:

''மார்க்கெட் கொள்ளைக்கு விசாரணை வேண்டும்!''

ஆவேசத்தில் மதுரை வியாபாரிகள்

''மார்க்கெட் கொள்ளைக்கு விசாரணை வேண்டும்!''

ஆவேசத்தில் மதுரை வியாபாரிகள்

Published:Updated:
''மார்க்கெட் கொள்ளைக்கு விசாரணை வேண்டும்!''
##~##

'தமிழக முதல்வர் மாண்புமிகு அம்மா அவர்களுக்கு... தாங்கள் அடிக்கல் நாட்டிய இந்த இடத்தில், காய்கறி அங்காடி வளாகம் வருவதற்கு உதவுமாறு வேண்டுகிறோம்!’ - ஆட்சி மாற்றத்தை அடுத்து மதுரை மாட்டுத்தாவணி ஏரியாவில் புதிதாக இப்படியரு ஃபிளெக்ஸ் போர்டு முளைத்து இருக்கிறது! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மதுரை வடக்கு ஆவணி மூல வீதியில் செயல்பட்ட சென்ட்ரல் மார்க்கெட், நூற்றாண்டு பழைமை வாய்ந்தது. இங்கிருந்த காய்கறி வியாபாரிகளில் மெஜாரிட்டியானவர்கள் அ.தி.மு.க-வினர் என்பதால், முதல்வராக இருந்தபோது எம்.ஜி.ஆர். இங்கு வந்து கொடி ஏற்றி இருக் கிறார். மீனாட்சியம்மன் கோயில் பகுதியில் போக்குவரத்து நெரிசலைத் தவிர்ப்பதற்காக இந்த மார்க்கெட்டை நகருக்கு வெளியில் மாற்றத் திட்ட மிட்டது மாநகராட்சி. இதற்காக 1994-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியில் மாட்டுத்தாவணி ஏரியாவில் இடமும் தேர்வு செய்யப்பட்டது. இங்கே

''மார்க்கெட் கொள்ளைக்கு விசாரணை வேண்டும்!''

33 கோடி மதிப்பீட்டில் மார்க்கெட் கட்டுவதற்காக அன்றைய முதல்வர் ஜெயலலிதா அடிக்கல் நாட்டினார். அதோடு கிடப்பில் விழுந்த இந்தத் திட்டத்தை மத்திய அமைச்சர் ஆனதும் கையில் எடுத்தார் அழகிரி.

''மார்க்கெட் கொள்ளைக்கு விசாரணை வேண்டும்!''

மார்க்கெட்டுக்காக மாட்டுத்தாவணி பேருந்து நிலையம் அருகே ஏற்கெனவே தேர்வு செய்யப்பட்ட 27 ஏக்கரை விட்டுவிட்டு, பூ மார்க்கெட்டின் பின் பகுதியில் சென்ட்ரல் மார்க்கெட் கட்டப்பட்டு, கடந்த செப்டம்பரில் திறக்கப்பட்டது. இங்கு கடைகள் ஒதுக்கிய தில் தி.மு.க-வினரின் ஆதிக்கம் தலைவிரித்து ஆடிய நிலையில்... அதிகாரிகளும் இஷ்டத்துக்கு ஆடினார்கள். அடாவடி தி.மு.க-வினருக்கு பயந்து இதுவரை சகித்துக்கொண்ட வியாபாரிகள்தான், இப்போது வெகுண்டு எழுந்துள்ளனர்!

''மார்க்கெட் கொள்ளைக்கு விசாரணை வேண்டும்!''

நம்மிடம் பேசிய மாட்டுத்தாவணி சென்ட்ரல் மார்க்கெட் காய்கறி வியாபாரிகள் சங்கத் தலைவரும்

''மார்க்கெட் கொள்ளைக்கு விசாரணை வேண்டும்!''

அ.தி.மு.க-காரருமான பி.எஸ்.முருகன், ''ஆடு-மாடு அடைக்கிற மாதிரி இந்த ஆஸ்பெஸ்டாஸ் கொட்டகையில் எங்களை அடைச்சுட்டாங்க. 'இப்ப இருக்கிற மார்க்கெட் தற்காலிகம்தான். சீக்கிரம் நிரந்தர மார்க்கெட் கட்டித் தருவோம்’னு அதிகாரிகள் சொன்னதை நம்பித்தான் நாங்க இங்கே வந்தோம். கடை ஒதுக்குனதுல தி.மு.க-காரங்க பினாமிகள் பெயரில் கடைகளை எடுத்து,

''மார்க்கெட் கொள்ளைக்கு விசாரணை வேண்டும்!''

10 லட்சம் வரை பகடி வாங்கிட்டு வியாபாரிகளுக்குக் கடைகளைக் குடுத்தாங்க. தி.மு.க-வினர் பணம் சம்பாதிக்கிறதுக்காகவே தேவைக்கு அதிகமான கடை களைக் கட்டிட்டாங்க. அதனால பல கடைகள் பூட்டிக் கிடக்குது.

இங்குள்ள ஒரு வியாபாரிக்குப் பெரிய கடைகள்ல 15-ம் சின்னக் கடைகளில் 40-ம் இருக்கு. இதுக்காகவே அ.தி.மு.க-வுல இருந்து தி.மு.க-வுக்குப் போனார். இப்போ, கடைகளைக் காப்பாத்துறதுக்காக மறுபடியும் அ.தி.மு.க-வுக்கு வந்துட்டார். 'கடைகளையும் காலி இடங்களையும் கட்சிக்காரங்களுக்குக் கொடுக்காம, வியாபாரிகளுக்கே குடுக்கணும்’னு கோர்ட்ல நான் கேஸ் போட்டேன். அதுக்குப் பழிவாங்க, 'அதிகாரிகளைப் பணி செய்யவிடாமல் தடுத்ததா’ என் மேல பொய் கேஸ் போட்டாங்க. மொத்தத்துல, இந்த மார்க்கெட்டை வெச்சு தி.மு.க-காரங்க கோடிகோடியா கொழிச்சிருக்காங்க. இதுல முறையான விசாரணை நடத்தி, அதிரடி நடவடிக்கை எடுக்க வேண்டும்!'' என்றார் வேகமாக.

தொடர்ந்து பேசிய சங்கச் செயலாளர் எஸ்.ஆர்.முருகன், ''இவ்வளவு பெரிய மார்க்கெட் வளாகத்துல

''மார்க்கெட் கொள்ளைக்கு விசாரணை வேண்டும்!''

பாத்ரூம் வசதிகூட இல்லை. எனவே, இந்த மார்க்கெட்டை நடைபாதை வியாபாரிகளுக்கு ஒதுக்கிக் கொடுத்துட்டு, ஏற்கெனவே அம்மா ஆட்சியில் அறிவித்த இடத்தில் சென்ட்ரல் மார்க்கெட்டை பக்காவா கட்டிக் குடுக்கணும். இதை வலியுறுத்தி அம்மாவுக்கும் உள்ளாட்சித் துறை அமைச்சருக்கும் தந்தி அடிச்சு இருக்கோம்...'' என்றார்.

ஏற்கெனவே ஜெயலலிதா ஆட்சியில் மார்க்கெட் கட்டத் தேர்வான இடம் மெயின் ரோட்டை ஒட்டி இருக்கிறது. இங்கு வேளாண் விற்பனை வாரியத்தின் மூலம் ஒருங்கிணைந்த நவீன காய்கறி மார்க்கெட் வளாகம் கட்ட கடந்த ஆட்சியில்

''மார்க்கெட் கொள்ளைக்கு விசாரணை வேண்டும்!''

68 கோடி நிதி ஒதுக்கியது மத்திய அரசு. அந்தத் திட்டம் என்ன ஆனதென்றே தெரியவில்லை. இது குறித்து நம்மிடம் பேசிய வியாபாரிகள் சிலர், ''இந்த இடத்தில் உலகத் தரத்திலான ஸ்டார் ஹோட்டல் ஒன்றைக் கட்டுவதற்கு தி.மு.க-வுக்கு நெருக்கமான இன்ஷூரன்ஸ் நிறுவனம் முயற்சி செய்தது. இதற்கான பேரங்கள் முடிந்து, அந்த 27 ஏக்கரையும் 99 வருட குத்தகைக்குக் கொடுக்க மாநகராட்சியில் தீர்மானம் கொண்டுவர முயற்சித்தார்கள். இதற்காக லஞ்சமாகக் கைமாறிய கோடிக்கணக்கான பணம், மொரீஷியஸ் தீவில் முதலீடு ஆகி இருக்கிறதாம்...'' என்று அதிர்ச்சித் தகவல்களைச் சொல்கிறார்கள்.

மார்க்கெட் பிரச்னை குறித்து மாநகராட்சி ஆணையர் செபஸ்டியனிடம் பேசினோம். ''கடைகள் ஒதுக்கீடு செய்ததில் எவ்வித முறைகேடும் நடக்கவில்லை. முறையாக ஏலத்தில்தான் ஒதுக்கி இருக்கிறோம். ஒருவர் இத்தனை கடைகள் எடுக்கவேண்டும் என்று வரையறை கிடையாது. எதிர்காலத் தேவைகளைக் கருதியே அதிகமான கடைகள் கட்டப்பட்டன. மொத்தம் 1,090 கடைகள் இருக்கு. அத்தனை கடைகளும் ஏலம் விடப்பட்டு, மாநகராட்சிக்கு வாடகை வருகிறது. கடைகளை எடுத்தவர்கள் பூட்டிப் போட்டால், அதுக்கு நாங்க என்ன செய்யமுடியும்? இங்கு வசதிகளை மேம்படுத்தலாமே தவிர புதிதாக இன்னொரு மார்க்கெட் கட்டும் திட்டம் எதுவும் மாநகராட்சியில் இல்லை...'' என்றார்.

மதுரைக்குள் இன்னும் என்னென்ன பூதங்கள் கிளம்பப் போகிறதோ!

- குள.சண்முகசுந்தரம்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism