Published:Updated:

பெண்கள் ஹாஸ்டலில் திகில் சித்ரவதை!

நெல்லை மருத்துவ கல்லூரி பயங்கரம்...

பெண்கள் ஹாஸ்டலில் திகில் சித்ரவதை!

நெல்லை மருத்துவ கல்லூரி பயங்கரம்...

Published:Updated:
பெண்கள் ஹாஸ்டலில் திகில் சித்ரவதை!
##~##

''நெல்லை மெடிக்கல் காலேஜ் லேடீஸ் ஹாஸ்டலுக்குள் புகுந்த காலேஜ் பசங்க, அங்கே இருந்த மாணவிகளைக் கொடுமைப் படுத்தி இருக்காங்க. அதுல பாதிக்கப்பட்ட என் பொண்ணு, பித்துப் பிடிச்சதுபோல வீட்டுல இருக்கா. ஆனா, கல்லூரி நிர்வாகம் இதுவரைக்கும் எந்த நடவடிக்கையும் எடுக்கலை...'' - இப்படி ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்கு (044-42890005) உடைந்த குரலில் பேசி இருந்தார் பாதிக்கப்பட்ட ஒரு மாணவியின் தந்தை! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

உடனடியாக நாம் விசாரணையில் இறங்கி னோம்...

மருத்துவக் கல்லூரி யில் படிக்கும் வெளியூர் மாணவ- மாணவிகளுக் காக தனித்தனியே ஹாஸ் டல் வசதி இருக்கிறது. அதில் சுமார் 500 பேர் தங்கி இருக்கிறார்கள். கடந்த ஏப்ரல் 23-ம் தேதி 'ஹாஸ்டல் டே’ கொண்டாட்டம் நடந்து இருக்கிறது. இசை, நடனம், நாடகம் என கலகலப் பாக நடந்த இந்த நிகழ்ச்சிக்குப் பின்னர் நடந்த சம்பவம்தான் பெரும் சர்ச்சையாகி இருக்கிறது.

பெண்கள் ஹாஸ்டலில் திகில் சித்ரவதை!

பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தையை நேரில் சந்தித்தோம். அந்த வீடே துக்க வீடு போல காட்சி

பெண்கள் ஹாஸ்டலில் திகில் சித்ரவதை!

அளித்தது. கண்ணீருடன், ''எங்களைப் பத்தி எந்த விவரத்தையும் போட்டுடாதீங்க. குடும்ப மானம் போயிடும். பிள்ளையோட வாழ்க்கையும் வீணாகிப் போகும்...'' என்றபடியே பேசத் தொடங்கினார். ''அன்னிக்கு 'ஹாஸ்டல் டே’ நிகழ்ச்சி வழக்கம் போல நடந்திருக்கு. அந்த விழாவில் சுமார் 30 பேர் கொண்ட மாணவர்கள் கும்பல் உச்சகட்ட போதையில இருந்தாங்க. மேடையில் நிகழ்ச்சி நடக்கும் போதே விசில் அடிக்கிறது, பொண்ணுங்க மேல ராக்கெட் விடுறது, அசிங்கமா கமென்ட்ஸ் அடிக்குறதுன்னு அநாகரிகமாக நடந்துக்கிட்டாங்க. அங்கே இருந்த பேராசிரியர்களிடம் மாணவிகள் சிலர் அப்பவே போய் புகார் பண்ணாங்க. ஆனா, அவங்க எதையும் கண்டுக்காம தள்ளிப் போய் நின்னுட்டாங்க. காலேஜ் விழாவோட அவங்க அராஜகம் முடிஞ்சிருந்தால்... ஏதோ காலேஜ் பசங்க ஜாலிக்காக பண்றாங்கன்னு நினைக்கலாம். ஆனா...'' என்று உடைந்து அழ ஆரம்பித்தவரை சமாதானப்படுத்தி பேச வைத்தோம்.

''நிகழ்ச்சி முடிஞ்ச பிறகு எல்லோரும் கலைஞ்சு போயிட் டாங்க. அதுக்குப் பிறகு அந்த கும்பல்

பெண்கள் ஹாஸ்டலில் திகில் சித்ரவதை!

மறுபடியும் குடிச்சு இருக்காங்க. அப்புறம் மொத்தமா எல்லோரும் சுவர் ஏறிக் குதிச்சு, லேடீஸ் ஹாஸ்டலுக்கு உள்ளே புகுந்துட்டாங்க. கேட்டையும் உடனே உள்பக்கமா பூட்டிட்டாங்க. ஒவ்வொரு ரூமையும் தட்டுனவங்க சில மாணவிகளை மட்டும் மிரட்டி தனியா ஒரு ரூமுக்குள்ள இழுத்துட்டுப் போயிட்டாங்க. மத்த பொண்ணுங்க ரூமை வெளிப்பக்கமா தாழ்ப்பாள் போட்டுட்டாங்க. தனி ரூமுக்குள்ள அழைச்சுட்டு போன மாணவிகளை மிரட்டி, அவங்களோட துணியை அவிழ்த்து நிர்வாணமாக்கி... டான்ஸ் ஆடச் சொல்லி வற்புறுத்தி இருக் காங்க. இதுக்கு மறுத்த சிலரை கண்ட இடத்துல கையை வெச்சு, கட்டிப் பிடிச்சு அசிங்கமா நடந்துக் கிட்டாங்க...'' என்றவரால் அதற்கு மேல் பேச முடியவில்லை.

பாதிக்கப்பட்ட மாணவி நம்மி டம், ''நிர்வாண கோலத்தில் இருந்த எங்ககிட்ட அந்த பசங்க, 'இதைத்

பெண்கள் ஹாஸ்டலில் திகில் சித்ரவதை!

தானே காலேஜுல படிக்கு றோம். இதுக்கு போயி எதுக்கு கத்துறீங்க...’னு அசிங்கமா பேசுனானுங்க. நாங்க பயத்துல அலறினோம். ஆனா, அதை அவங்க கண்டுக் கிடவே இல்லை. அவனுங்ககிட்ட செல்போன் இருந்தது. எங்களை அதுல வீடியோ எடுத்து இருப்பாங்களோன்னு பயமா இருக்கு. இந்த விவகாரத்தை வெளியில் சொல்லவோ கல்லூரி நிர்வாகத்திடம் புகார் தெரிவிக்கவோ பயமா இருந்தது. நடந்த சம்பவம் பற்றி எங்களுக் குள்ள பேசவே கூச்சப்பட்டோம்.  ஆனாலும் தைரியமான சில மாணவிகள் அவங்க பெற்றோர்கிட்ட விஷயத்தைச் சொல்லிட்டாங்க. அதிர்ச்சி அடைஞ்ச பெற்றோர்கள், கல்லூரி நிர்வாகத் திடம் புகார் செஞ்சாங்க. சீனியர் பேராசிரியர் ஒருவர் தலைமையில ஒன்பது பேர் கொண்ட குழுவை அமைச்சு ரகசிய விசாரணை நடந்துச்சு. ஆனாலும், இதுவரைக்கும் தவறு செய்த மாணவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கலைங்க. இந்த மாநிலத்தை இப்ப ஆள்றது ஒரு பெண்தான். அவங்ககிட்ட இந்த விஷயத்தை எடுத்துட்டுப் போக இருக்கோம். எங்களை அசிங்கம் பண்ண அந்த மிருகங்களுக்கு தண்டனை வாங்கிக் கொடுக்குற வரைக்கும் ஓய மாட்டோம். அதே சமயம் எங்களுக்குத் தகுந்த பாதுகாப்பு கொடுக்காத கல்லூரி நிர்வாகம் மீதும் நடவடிக்கை எடுக்கணும்...'' என்று குமுறினார்.

இதுகுறித்து நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி டீன் மனோகரனிடம் கேட்டோம். ''இந்தப் புகார் குறித்து தீவிரமாக விசாரித்து வருகிறோம். தற்போது எம்.பி.பி.எஸ். மற்றும் பி.டி.எஸ். மாணவர்களுக்கான விண்ணப்பங்கள் கொடுக்கப்படுவதால், அதில் கொஞ்சம் பிஸியாகி விட்டோம். விசாரணைக் குழுவினர் விரைவில் தங்கள் அறிக்கையைக் கொடுக்க இருக்கிறார்கள். அதன் அடிப்படையில் எங்களுடைய அடுத்த கட்ட நடவடிக்கை இருக்கும். தவறு நடந்திருப்பது உறுதி செய்யப்பட்டால், கடுமையான தண்டனை கொடுக்கத் தயங்க மாட்டோம்...'' என்றார் திட்டவட்டமாக!

எங்கே செல்கிறது இளைய சமுதாயம்... என்னதான் செய்கிறது இளைய தலைமுறையை உருவாக்க வேண்டிய கல்லூரி நிர்வாகம்? இதில் காவல் துறையாவது தானாக விசாரித்து, உடனே நடவடிக்கை எடுக்கட்டும்!

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism