Published:Updated:

எர்ணாவூர் சிறுமிக்கு நடந்தது என்ன?

''போலீஸ் மேல தப்பு இல்லேன்னா அவசரமா எதுக்கு அடக்கம் பண்ணனும்?''

எர்ணாவூர் சிறுமிக்கு நடந்தது என்ன?

''போலீஸ் மேல தப்பு இல்லேன்னா அவசரமா எதுக்கு அடக்கம் பண்ணனும்?''

Published:Updated:
எர்ணாவூர் சிறுமிக்கு நடந்தது என்ன?
##~##

சென்னை, எர்ணாவூரைச் சேர்ந்த ரோசையா - மரியம்மா தம்பதிகள் கட்டட வேலை செய்பவர்கள். இவர்களுக்கு ரேவதி, தீப்தி, பிரணதி என மூன்று பெண் வாரிசுகள். இதில் 13 வயதான பிரணதி, வள்ளலார் நகர் காவலர் குடியிருப்பில் வசிக்கும் உலகநாதன் வீட்டில், வேலை பார்த்து வந்திருக்கிறார். உலகநாதன் அவர் மனைவி துர்காபிரியா இருவருமே ஆயுதப் படைப் பிரிவில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

எர்ணாவூர் சிறுமிக்கு நடந்தது என்ன?

காவலர்களாகப் பணியாற்றுபவர்கள். கடந்த மார்ச் 12-ம் தேதி, உலகநாதன் வீட்டில் பிரணதி தூக்கில் தொங்கி இறந்து போயிருக்கிறார். அன்றைய தேர்தல் பரபரப்பில் பிரணதி விவகாரம் அப்படியே அமுங்கி விட்டது. இந்த மர்ம மரணத்தை உண்மை அறியும் குழு கையில் எடுக்கவே... விவகாரம் இப்போது வெடித்துக் கிளம்பி இருக்கிறது. 

பிரணதியின் அப்பா ரோசையாவை சந்தித்தோம். ''எங்களுக்குச் சொந்த ஊரு ஆந்திராவுல இருக்குங்க. வேலைக்காக சென்னைக்கு வந்து 10 வருஷமாச்சு. குடும்பக் கஷ்டத்தாலதான் புள்ளையை போலீஸ்காரங்க வீட்டுக்கு வேலை செய்ய அனுப்பினேன். திடீர்னு ஒரு நாள் போலீஸ் காரர் எனக்குப் போன்

எர்ணாவூர் சிறுமிக்கு நடந்தது என்ன?

போட்டு, 'உடனே வீட்டுக்கு வாங்க’ன்னு சொன்னாரு. போனா வீட்டுல யாருமில்ல. அடுத்து வண்ணாரப்பேட்டை துணை கமிஷனர் ஆபீஸுக்கு வரச் சொன்னாங்க. அங்கே போனா, 'உங்க பொண்ணு வயித்து வலி தாங்காம தூக்குப் போட்டு செத்து போயிட்டாள்’னு சொன்னாங்க. எனக்கு மூச்சே நின்ன மாதிரி ஆயிடுச்சி. என்னை எதுவுமே பேசவே விடாம ஒரு பேப்பர்ல கைரேகை மட்டும் வாங்கிட்டு, போஸ்ட்மார்ட்டம் செஞ்சி துணியில சுத்தி வெச்சிருந்த என் பிரணதி உடம்பை கொடுத்தாங்க. என்கூடவே ரெண்டு போலீஸ்காரங்களை அனுப்பி பிரணதி உடலை வீட்டுக்குக்கூட கொண்டு போகவிடாம, இந்துக்கள் அடக்கம் பண்ற காசிமேடு சுடுகாட்டுக்கு நேரா கொண்டு போய் அடக்கம் பண்ணிட்டாங்க. நாங்க கிறிஸ்துவ முறைப்படி அடக்கம் பண்ணச் சொன்னதுக்கு, 'மரியாதையா வாயை மூடிட்டு இருக்கியா.. இல்லை ஒட்டு மொத்தக் குடும்பத்தையும் கேஸ் போட்டு உள்ளே வெக்கவா’ன்னு போலீஸ்காரங்க மிரட்டினாங்க. என் புள்ளைக்கு வயித்து வலி வந்ததே இல்லைங்க. அதுவும் இல்லாம வயித்து வலிக்காக தூக்கு போட்டு சாகும் அளவுக்கு அவ கோழையும் இல்லை. ஏதோ நடந்திருக்குங்க. அதை எல்லோருமா சேர்ந்து மூடி மறைக்கிறாங்க...'' என்று மகளின் போட்டோவைப் பார்த்துப் பார்த்து அழுதார்.

பிரணதி மரணம் குறித்து உண்மை அறியும் குழு விசாரணை செய்து முடித்துள்ளது. விசாரணைக் குழுவை சேர்ந்த பேராசிரியர் சரஸ்வதியையும், எழுத்தாளர் மதிமாறனையும் சந்தித்துப் பேசினோம். ''பெற்றோருக்குத் தெரியாமல் அவசர அவசரமா போஸ்ட்மார்ட்டம் செய்து இருக்கிறார்கள். போலீஸ்காரர்கள் கூடவே சென்று உடலை புதைத்து இருக்கிறார்கள். வண்ணாரப்பேட்டை டி.சி.

எர்ணாவூர் சிறுமிக்கு நடந்தது என்ன?

செந்தில்குமரன், உலகநாதன் சொன்னதை மட்டும் கேட்டு, வழக்குப் பதிவு செய்து கேஸை முடித்துவிட்டார். நாங்கள் அவரிடம் விசாரித்தபோதும், 'எனக்கு எதுவும் தெரியாது!’ என்கிறார். போலீஸ்காரர் குடும்பத்தைக் காப்பாற்ற ஒரு சிறுமியின் மரணத்தை எல்லோரும் சேர்ந்து மூடி மறைக்கிறார்கள். இது கொலை இல்லை என்று போலீஸ் எந்த அளவுக்குச் சொல்கிறதோ... அதே அளவுக்குக் கொலையாக இருக்கவும் வாய்ப்புகள் உண்டு. எனவே, வழக்கை உடனடி யாக சி.பி.சி.ஐ.டி-க்கு மாற்றம் செய்ய வேண்டும். பிரணதி உடலைத் தோண்டி எடுத்து மீண்டும் பரிசோதனை செய்ய வேண்டும்!'' என்றார்கள்.

பிரணதி வேலை செய்த வீட்டு உரிமையாளரும் ஆயுதப்படைக் காவலருமான துர்காபிரியாவிடம் பேசினோம். ''பிரணதியை என்னுடைய சொந்தப் பொண்ணு மாதிரிதாங்க பார்த்துக் கிட்டேன். அந்தப் பொண்ணு அடிக்கடி வயிறு வலிக்குதுன்னு

எர்ணாவூர் சிறுமிக்கு நடந்தது என்ன?

சொல்லிக்கிட்டு இருக்கும். சம்பவம் நடந்த அன்னிக்கு நாங்க ரெண்டு பேருமே டூட்டிக்குப் போயிட்டோம். எங்கப்பா மதியம் வீட்டுக்கு வந்திருக்கார். வீடு திறந்திருந்திருக்கு. உள்ளே போய் பார்த்திருக்கார். அந்தப் பொண்ணு தூக்குல தொங்கி இருக்கா. பதறியடிச்சிட்டு எங்களுக்குப் போன் பண்ணினார். நாங்க கிளம்பிவந்து பார்த்துட்டுதான் அவுங்க அப்பாவுக்குத் தகவல் சொன்னோம். மத்தபடி எங்க வீட்டுல அந்தப் பொண்ணுக்கு எந்தத் தொந்தரவும் கிடையாது. அவுங்க வீட்டுக்குப் போனா ஒரு நாள்கூட தங்க மாட்டா... அந்த அளவுக்கு எங்ககூட அட்டாச்மென்ட்டா இருந்தாள். அவ யார் கூடவோ அடிக்கடி போன்ல பேசிக்கிட்டு இருந்தாள். அது யாருன்னு தெரியலை. ஒரு வேளை, யாரையாவது லவ் பண்ணினாளோ என்னவோ... தெரியலை. எங்க மேல எந்தத் தப்பும் இல்லைங்க!'' என்று வருத்தத்தோடு சொன்னார்.

போலீஸ் தரப்பில் விசாரித்தபோது, ''பிரணதி, வயிற்று வலியால்தான் தூக்குப் போட்டு இறந்து போயிருக்கிறார். எங்களுக்கு அதில் எந்த சந்தேகமும் இல்லை. பிள்ளை இறந்து போன சோகத்தில் பெத்தவங்க ஏதேதோ பேசுறாங்க. புதைக்க வேண்டும் என்ற அவசரம் காரணமாகவே, இந்து சுடுகாட்டில் புதைத்தோமே தவிர வேறு காரணம் எதுவும் இல்லை. வழக்கை எங்கே வேண்டுமானாலும் மாத்தட்டும். யாரு வேண்டுமானாலும் விசாரிக்கட்டும். எங்களுக்குக் கவலை இல்லை...'' என்கிறார்கள்.

தவறு செய்யவில்லை என்றால், எதற்காக காவல் துறையினரே அவசரப்பட்டு பிரணதியை புதைக்க ஏற்பாடு செய்ய வேண்டும்? விசாரணையில் விடிவு பிறக்கட்டும்!

- கே.ராஜாதிருவேங்கடம்

படங்கள்: வி.செந்தில்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism