Published:Updated:

தமிழுக்கு ஆசிரியர்கள் வேண்டாம்.. நோட்ஸ் போதும்

அதிர்ச்சி கிளப்பும் காஞ்சி பள்ளிகள்

தமிழுக்கு ஆசிரியர்கள் வேண்டாம்.. நோட்ஸ் போதும்

அதிர்ச்சி கிளப்பும் காஞ்சி பள்ளிகள்

Published:Updated:
தமிழுக்கு ஆசிரியர்கள் வேண்டாம்.. நோட்ஸ் போதும்
##~##

மிழ்ப் பாடத்தில் நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் பெற்று வரலாற்றுச் சாதனை படைத்த 10-ம் வகுப்பு மாணவனையும், மாணவியையும் பற்றி ஜூ.வி-யில் படித்து இருப்பீர்கள். அந்த மாணவச் செல்வங்களுக்கு வாழ்த்து தெரிவித்து, ஏராளமான வாசகர்கள் கடிதங்களைக் குவித்து இருந்தனர். அந்தக் குவியலில் ஒரு கடிதம் மட்டும் அதிர்ச்சி ஏற்படுத்தியது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'கல்லூரி மற்றும் பல்கலைக்கழகங்களில் தமிழை முதன்மைப் பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவர்களின் சதவிகிதம் கணிசமாக குறைந்து போயிருக்கிறது...’ என்று ஆரம்பிக்கப்பட்டு இருந்த கடிதம், மேலும் பல அதிர்ச்சித் தகவல்களைக் கொட்டி இருந்தது.

அந்தக் கடிதத்தில் கூறப்பட்டு இருந்த சில விஷயங்கள் குறித்து விசாரிக்கத் தொடங்கினோம்.

தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாநிலத்தலைவர்

தமிழுக்கு ஆசிரியர்கள் வேண்டாம்.. நோட்ஸ் போதும்

மணிவாசகம், ''தமிழகம் முழுக்க 3,800 மேல்நிலைப் பள்ளிகள் உள்ளன. இவற்றில், அரசுப் பள்ளிகள் 2,800. இதில், தரம் உயர்த்தப்பட்ட மேல்நிலைப் பள்ளிகளில் 98-ம் ஆண்டு முதல் முதுகலைத் தமிழாசிரியர் பணியிடங்களை அரசு உருவாக்கவில்லை. இதனால், தமிழகம் முழுவதும் சுமார் 1,500 முதுகலை தமிழாசிரியர் பணியிடங்கள் காலியாகவே உள்ளன. பொதுவாக, மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்படும் பள்ளிக்கு ஆங்கிலம், இயற்பியல், வேதியியல் கணிதம், உயிரியியல் என 5 பணியிடங்களை மட்டுமே உருவாக்குவது என்பது அரசு கடைப்பிடித்து வரும் நடைமுறை. தமிழுக்கு மட்டும் ஏன் இந்தப் பாரபட்சம் என்று கேட்டால், நிதிப் பற்றாக்குறை என்று பதில் சொல்கின்றனர், கல்வி அதிகாரிகள்.

அரசு விழாக்கள் நடத்த கோடிக்கணக்கான பணம் செலவு செய்யப்படுகிறது. ஆனால், தமிழ் ஆசிரியர்களை நியமிக்க மட்டும் பணம் இல்லை என்று சொல்வது என்ன நியாயம்? ''தமிழ்ப்

தமிழுக்கு ஆசிரியர்கள் வேண்டாம்.. நோட்ஸ் போதும்

பாடத்துக்கு ஆசிரியர் தேவை இல்லை. நோட்ஸ் இருந்தால் மாணவனே படித்து விடுவான் என்று கல்வி அதிகாரிகளே கூறுகின்றனர். தமிழகத்தில் பல மேல்நிலைப் பள்ளிகளில் முதுகலைத் தமிழ் ஆசிரியர் இல்லாததால், அங்குள்ள பட்டதாரி ஆசிரியர்களே பாடம் நடத்துகின்றனர்!'' என்று கொந்தளித்தார்.

அவரே தொடர்ந்து, ''மொழி வளம் இருந்தால்தான் ஒரு மாணவர் படைப்பாற்றலில் சிறந்து விளங்க முடியும். தமிழைத் தவிர வேறு எந்தப் பாடத்தையும் முதன்மைப் பாடமாக எடுத்துப் படித்தாலும் விரைவில் வேலை, பதவி உயர்வு, சலுகைகள் கிடைக்கும் என்ற எண்ணம் இன்றைய தலைமுறையிடம் ஏற்பட்டு விட்டது. இதனால், கல்லூரி மற்றும் பல்கலைக் கழகங்களில் தமிழை முக்கியப் பாடமாக எடுத்துப் படிக்கும் மாணவர்களின் எண்ணிக்கை குறைந்து வருகிறது. எங்கும் தமிழ், எதிலும் தமிழ் என்று முழங்கியவர்கள், தமிழுக்குச் செய்த தொண்டு இதுதான்!'' என்று தனது வேதனையைக் கொட்டினார்.

''காஞ்சிபுரம் மாவட்டத்தில் சமீபத்தில் தரம் உயர்த்தப்​ பட்ட 19 அரசு மேல்நிலைப் பள்ளிகளில், இன்று வரை முதுகலை தமிழாசிரியர் பணியிடம் ஒன்றுகூட உருவாக்கப்படவில்லை என்றும், இந்தப் பள்ளிகளின் மாணவர்கள் நோட்ஸை மட்டுமே நம்பி இருக்கின்றனர்...'' என்றும் அதிர்ச்சி அளித்த, தமிழ்நாடு மேல்நிலைப் பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர்கள் சங்க மாவட்டப் பொறுப்பாளர் சுந்தரராஜன், ''தமிழகத்தில் இருந்து இந்தி மொழியை விரட்ட 60-களில் தீவிரமான போராட்டம்

தமிழுக்கு ஆசிரியர்கள் வேண்டாம்.. நோட்ஸ் போதும்

தமிழகத்தில் நடத்தப்பட்டது. அதே வழியில் இப்போது, தமிழை விரட்டவும் சதி நடக்கிறதோ என்று தோன்றுகிறது. தமிழ் ஆசிரியர்கள் இல்லாதது ஒரு பக்கம் இருக்கட்டும், ஆசிரியர்கள் உள்ள பள்ளிகளில் அவர்களுக்குப் போதிய பாட வகுப்புகளே தரப்படுவது இல்லை. மற்ற பாடங்களுக்கு வாரத்துக்கு தலா ஏழு வகுப்புகள் என்றால், தமிழுக்கு நான்குதான். அதுவும் கடைசி நேர மாறுதலுக்கு உட்பட்டது. மேல்நிலைப் பள்ளிகளில் 400 மாணவர்களுக்கு மேல் படித்தாலே மொழிப் பாடத்துக்கு இரண்டு ஆசிரியர்கள் நியமிக்க வேண்டும் என்பது நடைமுறை. ஆனால், பெரிய காஞ்சிபுரம் அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் 1,500-க்கு மேற்பட்ட மாணவர்கள் படிக்கின்றனர். இவர்கள் அத்தனை பேருக்கும் ஒரே ஒரு தமிழ் ஆசிரியர்தான் இருக்கிறார்.

இந்த மாவட்டத்தில் உள்ள ஐயங்கார்குளம், ஒரக்காட்டுப்பேட்டை, குன்றத்தூர் மகளிர் மேல்நிலைப்​பள்ளி, செம்பாக்கம், பண்ருட்டி இப்படி 20-க்கும் மேற்பட்ட பள்ளிகளில் முதுநிலை தமிழாசிரியர்களே இல்லை. எத்தனையோ மனு கொடுத்தும் கல்வி அதிகாரிகள் இதை உணர்வதாகத் தெரியவில்லை. விடைத்தாள் திருத்தும் பணியின்போது தமிழ்த் தாளை திருத்தப் போதிய ஆசிரியர் இல்லாததால், இருக்கின்ற ஆசிரியர்களே கூடுதலான தாள்களைத் திருத்த வேண்டிய கட்டாயம் ஏற்படுகிறது. மற்ற பாட ஆசிரியருக்கு காலையில் 12, மதியம் 12 என ஒரு நாளைக்கு 24 தாள்களை ஒதுக்கும் அதிகாரிகள், தமிழ் ஆசிரியர்களுக்கு மட்டும் காலையில் 20, மாலையில் 20 என ஒரே நாளில் 40 தாள்களை திணிக்கின்றனர். 'தமிழ் வாழ்ந்தால் தமிழர் வாழ்வர், தமிழர் வாழ்ந்தால் தமிழ் வாழும்’ என எதுகை மோனையோடு தமிழின் பெருமையை கூறிய கருணாநிதி, அவரது ஆட்சிக்காலத்தில் எங்களது கோரிக்கைகளைக் கண்டுகொள்ளவே இல்லை. ஆட்சியைக் கைப்பற்றியுள்ள புதிய அரசாவது, தமிழின் முக்கியத்துவத்தைத் உணர்ந்து செயல்படும் என்று நினைக்கிறோம்!'' என்றார்.

தமிழுக்கு வந்த சோதனை இந்த ஆட்சியிலாவது தீரட்டும்!

- கிருபாகரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism