Published:Updated:

''காங்கிரஸ் கூட்டணியை தி.மு.க. கைவிடணும்!''

புதுக்கோட்டை புகைச்சல்..

''காங்கிரஸ் கூட்டணியை தி.மு.க. கைவிடணும்!''

புதுக்கோட்டை புகைச்சல்..

Published:Updated:
''காங்கிரஸ் கூட்டணியை தி.மு.க. கைவிடணும்!''
##~##

'கூடா நட்பு கேடாய் முடியும்’ - எந்த அர்த்தத் தில் கருணாநிதி இதைக் கூறினாரோ... தெரியாது! அதைத் தங்களுக்குக் கொடுத்த சிக்னலாகவே எடுத்துக்கொண்டு, அரசியல் யுத்தத்துக்குத் தயாராகிவிட்டனர், புதுக்கோட்டை தி.மு.க-வினர்! 'உதித்த சூரியனை மறைத்த கைகள் நம்மை விட்டு விலகட்டும். உமது உயரிய நலன்களை நாளைய தமிழகம் உணரட்டும்!’ என்று கருணாநிதியின் பிறந்த நாளுக்காக ஒரு விளம் பரத் தட்டியை வைத்து, கூட்டணிக்குள் சூட்டைக் கிளப்பி இருக்கின்றனர். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

இந்த விளம்பரத்தை வைத்தவர், புதுக்கோட்டை நகரத்தின் ஆறாவது வட்டச் செயலாளர் அறிவுடைநம்பி. அவரிடம் பேசியபோது, ''இந்தத் தேர்தலில் எங்க கட்சி எதிர்பார்க்காத தோல்வியைத்

''காங்கிரஸ் கூட்டணியை தி.மு.க. கைவிடணும்!''

தழுவி யிருக்கு. அதுக்கு முக்கிய மான காரணமே காங்கிரஸ் கட்சிதான். ஆரம்பத்தில் இருந்தே இலங்கைத் தமிழர் பிரச்னை, தமிழக மக்கள் மத்தி யில் ரொம்பப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியது. கூட்டணியில் இருந்து கொண்டு ஒரு முதல்வராக எந்த அளவுக்கு மத்திய அரசை வலியுறுத்த முடியுமோ, அந்த அளவுக்குப் போராடினார் கலைஞர். மத்திய அரசில் தி.மு.க-வினருக்கு அமைச்சர் பதவி கொடுத்த ஒரே காரணத்தால்(!) தி.மு.க-வின் எந்தக் கோரிக்கையையும் மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை. கடந்த தி.மு.க. ஆட்சியில், தமிழகத்தில் இருக்கும் அத்தனை குடும்பங்களும் ஏதோ ஒரு அரசு திட்டத்தில் பயனடைந்த குடும்பமாகத்தான் இருக்கும். எப்பவுமே தமிழக மக்கள் நன்றி மறக்காதவர்கள். அரசு திட்டங் களால் பயனடைஞ்ச அத்தனை பேரும் தி.மு.க-வுக்கு ஓட்டுப் போடத் தயாராத்தான் இருந்தாங்க. ஆனா, இலங்கைத் தமிழர் பிரச்னையில் இந்திய அரசின் அலட்சியம், இங்கே இருக்கற ஒட்டுமொத்த தமிழக மக்களையும் அதிருப்தி அடைய வெச்சிருச்சி.

உலகத்தில் எந்த மூலையில என்ன நடந்தாலும் மூக்கை நுழைக்கும் இந்திய அரசு, நம்மோட அண்டை நாடான இலங்கையில் தமிழர்களுக்கு ஏற்பட்ட பிரச்னையை ரொம்பவே அலட்சியப்படுத்தியது. அதோடுவிடாமல், எல்லா விஷயத்திலயும் ராஜபக்ஷேவுக்கு சாதகமாகவே நடந்தது. இப்படித் தமிழர்களுக்கு எதிராக காங்கிரஸ் கட்சி செயல்பட்டதால்தான் தேர்தலில் மக்கள், காங்கிரஸுக்கு எதிராக வாக்களிச்சிட்டாங்க. அதுதான் கூட்டணியில் இருந்த தி.மு.க-வையும் பாதித்தது!'' என்று சற்று நிறுத்தியவர், மேலும் தொடர்ந்தார்.

''காங்கிரஸ் கூட்டணியை தி.மு.க. கைவிடணும்!''

''காங்கிரஸ் போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் தி.மு.க-காரங்க எப்படி வேலை பார்த்தாங்கன்னு அவங்களுக்கே தெரியும். தி.மு.க போட்டியிட்ட எல்லாத் தொகுதியிலேயும் வாசன் கோஷ்டி ஆட்கள் வந்தா, இளங்கோவன் தரப்பு ஆட்கள் வர்றதில்லை. இளங்கோவன் கோஷ்டி வந்தா, ப.சிதம்பரம் கோஷ்டி வர்றதில்லைன்னு கோஷ்டி கோஷ்டியாவே இருந்துட்டாங்க. அவங்க அத்தனை பேரையும் ஒருங்கிணைக்கிறதுக்கே தி.மு.க-காரங்களுக்குப் பாதி உசுரு போயிடுச்சி. அப்படி இருந்தும்கூட, காங்கிரஸ் போட்டியிட்ட அத்தனை தொகுதிகளிலும் வாங்கியிருக்கும் வாக்குகள், தி.மு.க மற்றும் கூட்டணிக் கட்சிகள் போட்டதுதான். ஏன்னா, காங்கிரஸ்காரங்களே பாதிப் பேருக்கு மேல அந்தக் கட்சிக்கு ஓட்டுப் போடல. ஆனா, தி.மு.க. போட்டியிட்ட தொகுதியில் எந்த காங்கிரஸ்காரங்களும் முழுசா தேர்தல் வேலை பாக்கவில்லை. புதுக்கோட்டைத் தொகுதியில் போட்டியிட்ட பெரியண்ணன் அரசுக்கு ஆதரவா காங்கிரஸ், பெரிய அளவுல ஒத்துழைப்பு தரலைங்கறது எல்லாருக்கும் நல்லாவே தெரியும். ஓரளவுக்கு புதுக்கோட்டையில வாக்கு வங்கி வெச்சிருக்கும் காங்கிரஸ் ஓட்டு போட்டு இருந்தாலே போதும்... எங்க மாவட்டச் செயலாளர் ஜெயிச்சிருப்பார். இதே போலத்தான் தமிழகத்தில் தி.மு.க. போட்டியிட்ட அத்தனை தொகுதிலேயும் நடந்திருக்கு. அதனாலதான் 'உதித்த சூரியனை மறைத்த கைகள்’னு நான் போர்டு வெச்சிருக்கேன். இதுல என்ன தப்பு?'' என்று கேள்வியோடு முடித்தார்.

இது குறித்து காங்கிரஸ் கட்சியின் புதுக்கோட்டை மாவட்டத் தலைவரான புஷ்பராஜிடம் கேட்டோம். ''கூட்டணி என்பது தலைவர்கள் எடுத்த முடிவு. அதில் நான் கருத்துச் சொல்லக் கூடாது. தேர்தலில் காங்கிரஸார் தி.மு.க-வுக்கு வேலை செய்யவில்லை என்பது தவறான கருத்து. இன்னொரு விஷயம், தி.மு.க போட்டியிட்ட பெரும்பாலான தொகுதிகளில் எங்கள் கட்சியினரைத் தேர்தல் வேலை செய்யக் கூப்பிடவே இல்லை. அதோடு, காங்கிரஸ் போட்டியிட்ட பல தொகுதிகளில் தி.மு.க-வின் உட்கட்சிப் பூசல்தான் தோல்வியைத் தழுவ வைத்தது. புதுக்கோட்டை தொகுதியில் தி.மு.க. தோற்றதற்கு இங்கே இருந்த தி.மு.க-வினரின் கோஷ்டிப் பூசல்தான் காரணமே தவிர, காங்கிரஸின் கோஷ்டிப் பூசல் அல்ல! இதை மறைக்கவும் மறுக்கவும் கூடாது. புதுக்கோட்டை காங்கிரஸைப் பொறுத்த வரை, யார் எந்தத் தலைவரை ஆதரித்தாலும், தேர்தல் என்று வந்துவிட்டால், ஒன்றாகச் சேர்ந்து வேலை செய்வார்கள். இந்தத் தேர்தல் மட்டும் இல்லை... கூட்டுறவுத் தேர்தல் தொடங்கி, நாடாளுமன்றம், சட்டசபை என அத்தனையிலுமே அப்படித்தான் நடந்தது. மற்றபடி, தி.மு.க. - காங்கிரஸ் கூட்டணி பற்றிப் பேச அகில இந்திய தலைவர்கள் இருக்கிறார்கள். நான் அதற்கு பதில் சொல்ல முடியாது. அவர்கள்தான் முடிவு எடுக்க வேண்டும்!'' என்று நிறுத்திக்கொண்டார்.

'தி.மு.க. கட்சி, காங்கிரஸ் கூட்டணியை விட்டு விலக வேண்டும்!’ என்று திருச்சி காங்கிரஸார் ஒரு புறம் கலகக் குரல் கொடுக்க... புதுக் கோட்டை தி.மு.க-விலோ 'காங்கிரஸை கூட்டணியில் இருந்து விலக்க வேண்டும்!’ என்று குரல்கள் ஒலிக்கத் தொடங்கி இருக்கிறது!

- வீ.மாணிக்கவாசகம்

படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism