Published:Updated:

எங்கெங்கு காணினும் சக்தியடா!

அடடே.. திருச்சி

எங்கெங்கு காணினும் சக்தியடா!

அடடே.. திருச்சி

Published:Updated:
எங்கெங்கு காணினும் சக்தியடா!
##~##

'அம்மா மாவட்டத்தில் அல்லி ராஜ்யம்!’- இந்தக் கட்டுரைக்கு இப்படியும் தலைப்பு வைக்க லாம்... ஆம், முதல்வர் ஜெயலலிதாவின் ஸ்ரீரங்கம் தொகுதி அடங்கிய திருச்சி மாவட்டத்தில் உயர் பொறுப்புகளில் பெண்களே கோலோச்சுகின்றனர்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருச்சி மாவட்டத்தில் கவனிக்கத்தக்க பெண் அதிகாரியாக வலம் வந்தவர் ஆர்.டி.ஓ. சங்கீதா. கடந்த சட்டமன்றத் தேர்தலில், இவர்தான் திருச்சி மேற்குத் தொகுதி தேர்தல் அலுவலர். விடியற்காலை

எங்கெங்கு காணினும் சக்தியடா!

இரண்டு மணிக்கு அவரது செல்போன் அலற... எடுத்துப் பேசினால், 'பொன்னகர் பகுதியில் ஒரு தியேட்டரின் பின்புறம் உள்ள ரோட்டில் ஆம்னி பஸ் ஒன்று நிற்கிறது. அதில் கோடிக்கணக்கான பணம் பதுக்கிவைக்கப்பட்டு இருக்கிறது’ என்று ஒரு ரகசியத் தகவல். உடனடியாக சங்கீதா, உதவிக்கு ஒரு போலீஸ்காரரை மட்டும் அழைத்துக்கொண்டு தனது ஜீப்பில் ஸ்பாட்டுக்கு விரைந்தார். பஸ்ஸின் மேற்கூரையில் டிராவல் பேகுகளில் கட்டுக்கட்டாக பதுக்கிவைக்கப்பட்ட

எங்கெங்கு காணினும் சக்தியடா!

5 கோடியே 11 லட்சத்தைக் கைப்பற்றினார். அரசியல் நெருக்கடி கள் எதற்கும் பயப்படாத அவரது துணிச்சலைப் பார்த்து அனைவரும் வியந்தனர். திருச்சியை தன் கட்டுப்பாட்டுக்குள் வைத்திருந்த நேருவைக் கண்டும் அசராமல் எதிர்த்து நின்றவர். சொல்லப் போனால், ஆளும் கட்சியின் அடாவடிகளையும் தாண்டி திருச்சி மேற்குத் தொகுதியில் தேர்தலை நேர்மையாக நடத்தக் காரணமாக இருந்தவர் சங்கீதா.

சங்கீதாவுக்கு அடுத்து டி.ஆர்.ஓ-வாக திருச்சியில் பொறுப்பு ஏற்றவர் பேச்சியம்மாள். அமைதியான சுபாவம் கொண்டவர். ஆனாலும் தினமும் பொது மக்களை சந்திப்பது... அவர்களின் குறைகளைக் கேட்டு அதிகாரிகளிடம் உடனுக்குடன் நடவடிக்கை எடுக்கச் சொல்வது என அசத்திக் கொண்டிருக்கிறார். இவர் பொறுப்பேற்றதும், ஆர்.டி.ஓ. சங்கீதாவை கூப்பிட்டாராம். 'உங்களைப் பற்றி நிறையவே கேள்விப்பட்டு இருக்கேன். ரொம்பவும் துணிச்சலாகவும் விவேகமாகவும் செயல்படுறீங்க. எதைப் பத்தியும் கவலைப்படாம வேலை பாருங்க. உங்களுக்கு எப்பவும் பக்கபலமா நான் இருப்பேன்’ என்று சொல்லி எழுந்து நின்று கைகுலுக்கினாராம். நன்றி சொல்லிவிட்டுக் கிளம்பிய சங்கீதா, இப்போது தனது அதிரடிகளைத் தொடர ஆரம்பித்து விட்டார்.

எங்கெங்கு காணினும் சக்தியடா!
எங்கெங்கு காணினும் சக்தியடா!

இப்படி இரண்டு பெண்கள் ஆட்சித் துறையில் அதிரடிகளை நடத்திக் கொண்டிருக்க... ஜெயலலிதா தலைமையில் புதிய ஆட்சி அமைந்த பிறகு கலெக்டர்கள் மாற்றத்தில் திருச்சி கலெக்டராக ஜெயஸ்ரீ முரளிதரன் நியமிக்கப்பட்டார். இவர் ஏற்கெனவே திருச்சி மாவட் டத்தில் டி.ஆர்.ஓ-வாக பணியாற்றியவர்தான். பதவி ஏற்ற நாளில் இருந்து இவரும் சுறுசுறுவென களத்தில் இறங்கிவிட்டார். குறை தீர்ப்புக் கூட்டத்துக்கு வரும் பொதுமக்களிடம் கனிவையும், அதே சமயம், ரேஷன் கடை உள்ளிட்ட இடங்களில் ஆய்வு செய்யும்போது அதிரடியும் காட்டி மக்களை வியக்க வைக்கிறார். ''சனி, ஞாயிறு விடுமுறை என்பதால், பல துறை அதிகாரிகள் திங்கள்கிழமை நடக்கும் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வராமல் கேம்ப் என்று எழுதி வைப்பதாகத் தெரியவருகிறது. இனி, அதுபோல் நடக்கக் கூடாது. திங்கள் அன்று கண்டிப்பா எல்லோரும் குறை தீர்க்கும் கூட்டத்துக்கு வந்தே ஆகவேண்டும். மக்களோட பிரச்னைகளுக்கு முதலில் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்று முதல்வர் சொல்லி இருக்காங்க. இனி குறை தீர்க்கும் கூட்டத்துக்கு யாராவது வராமல் இருந்தால், கண்டிப்பா நடவடிக்கை கடுமையாகவே இருக்கும். அதுக்கு பிறகு என் மீது வருத்தப் படாதீங்க. அது மட்டுமில்ல.. இது வரைக்கும் மாதம் ஒரு தடவை நடந்து வந்த அதிகாரிகளுடனான ஆலோசனைக் கூட்டம் இனி 15 நாட்களுக்கு ஒரு முறை நடக்கும்'' என்று சொல்லி அதிகாரிகளை அலற வைத்திருக்கிறார், கலெக்டர்.

திருச்சி மாநகர மேயர் சுஜாதா, மாவட்டப் பஞ்சாயத்துத் தலைவர் சங்கீதா என்று அரசியல் வட்டத்திலும் முதன்மைப் பதவிகளை பெண்களே அலங்கரிக்கின்றனர்!

காவல் துறை அதிகாரிகள் மாற்றத்தில், திருச்சி ரூரல் எஸ்.பி-யாக புதிதாகப் பொறுப்பேற்க உள்ளவரும் ஒரு பெண்தான். ஊழல் தடுப்புப் பிரிவில் இருந்து திருச்சிக்கு மாற்றப்பட்டு இருக்கிறார் லலிதா லட்சுமி. நேர்மைக்கும் அதிரடிக்கும் பேர் போனவராம் லலிதா லட்சுமி. திருச்சி புறநகர்ப் பகுதிகளில் முன்னாள் அமைச்சர் நேருவும் அவரது ஆதரவாளர்களும் இது வரை செய்து வந்த தகிடுதத்தங்களை கண்டுபிடிக்கவும், அவர்களை ஒடுக்கவும்தான் லலிதா லட்சுமியின் பெயரை திருச்சிக்கு டிக் செய்தாராம் முதல்வர். லலிதா லட்சுமி திருச்சியில் அடியெடுத்து வைத்ததும் அதிரடிகள் ஆரம்பமாகுமாம்..!

பெண்கள் ராஜ்யம் சிறக்கட்டும்!

- ஆர்.லோகநாதன்

படங்கள்: 'ப்ரீத்தி’ கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism