Published:Updated:

காலிப் பணியிட குளறுபடிகள்!

பழநிக்கு வந்த சோதனை

காலிப் பணியிட குளறுபடிகள்!

பழநிக்கு வந்த சோதனை

Published:Updated:
காலிப் பணியிட குளறுபடிகள்!
##~##

'பழநி தண்டாயுதபாணி கோயில் தேவஸ்தானத்தில் 170 பணி இடங்களுக்கு ஆட்கள் தேவை’ என்று கடந்த நவம்பர் மாதம் நாளிதழ்களில் விளம்பரம் வெளியிடப்பட்டது. தமிழகம் முழுவதும் இருந்து 20,000 பேர் விண்ணப்பம் அனுப்பினர். அதில், தகுதி இல்லை என 8,000 விண்ணப்பங்கள் கண்டறியப்பட்டன. ஜனவரி 25, 27, 28 மற்றும் 29 தேதிகளில் நேர்முகத் தேர்வுக்கு வருமாறு 12,000 பேருக்கு அழைப்பு அனுப்பப்பட்டது. இந்நிலையில், 'பழநி தேவஸ்தானத்தின் காலிப் பணியிடங்களில் எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கு ஒதுக்கீடு எவ்வளவு என்பதை அறிவிக்க வேண்டும், அதற்குப் பிறகுதான் நேர்முகத் தேர்வு நடத்த வேண்டும்’ என, உயர் நீதிமன்ற மதுரை கிளையில், பழநியைச் சேர்ந்த தங்கப் பாண்டியன் என்பவர் மனுத் தாக்கல் செய்தார். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

காலிப் பணியிட குளறுபடிகள்!

முதல் நாள் நேர்முகத் தேர்வு நடந்த ஜனவரி 25-ம் தேதியே, தங்கப்பாண்டியன் மனு மீதான விசாரணையும் நீதிமன்றத்தில் நடந்தது. 'இந்து சமய அறநிலையத் துறை ஆட்சி விதிகளுக்கு உட்பட்ட

காலிப் பணியிட குளறுபடிகள்!

கோயில் பணி இடங்களுக்கான தேர்வுகளில், 'எஸ்.சி./எஸ்.டி. பிரிவினருக்கு இடஒதுக்கீடு வழங்க முடியாது!’ என்று தீர்ப்பு வழங்கப்பட்டது. அந்த தீர்ப்பின் நகல், அன்று மாலையே சென்னையில் உள்ள அறநிலையத் துறை அலுவலகத்துக்கு ஃபேக்ஸ் வர, அது பழநி தேவஸ்தான அதிகாரிகளுக்குத் தெரிவிக்கப்பட்டது. ஆனால், 'இன்டர்வியூ நடத்த நீதிமன்றம் தடை விதித்து உள்ளதாக’ புரிந்துகொண்ட பழநி தேவஸ்தான அதிகாரி கள், ஜனவரி 27-ம் தேதி முதல் நடத்த வேண்டிய நேர்முகத் தேர்வை மறுதேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்தனர். அதற்குப் பிறகு இதுவரை அந்தத் தேர்வு நடத்தப்படவே இல்லை.

''இன்று நேற்று அல்ல, 17 ஆண்டுகளாக இப்படித்தான் நடக்கிறது பழநி தேவஸ்தானத்தில்...'' என்று கூறும்

வஞ்சிமுத்து என்பவர், 17 முறையும் விண்ணப்பித்து இருக்கிறாராம்.

''தேவஸ்தான நிர்வாக அதிகாரி மட்டுமல்ல, அறங்காவலர்கள் அனைவரும்கூட சட்டம் படித்த வர்கள்தான். வழக்கு நிலுவையில் இருக்கும்போது, இன்டர்வியூ கார்டு அனுப்பக் கூடாது என அவர் களுக்குத் தெரியாதா? நீதிமன்றத் தீர்ப்பில் இன்டர்வியூ நடத்தத் தடை எதுவும் விதிக்கப்படவில்லை. அறநிலையத் துறைக்கு சாதகமாகத்தான் தீர்ப்பு வழங்கப்பட்டு உள்ளது. ஆனால், இன்டர்வியூ எதற்காக ஒத்தி வைக்கப்பட்டது என்பதுதான் சந்தேகமாக இருக்கிறது...'' என்று ஆவேசப்படும் வஞ்சிமுத்து, 'இந்த விவகாரத்தில் என்னதான் நடக்கிறது?’ என்று கேட்டு, உயர் நீதிமன்ற மதுரை கிளையில் 'ரிட்’ மனுத் தாக்கல் செய்துள்ளார்.

இந்நிலையில் சிலர், ''1996, 1999, 2000, 2008 மற்றும் 2011 ஆகிய ஆண்டுகளில் 'ஆட்கள் தேவை’ என்று, நாளிதழ்களில் பழநி தேவஸ்தானம் விளம்பரம் செய்தது. 2008-ம் ஆண்டில் 30,000 பேர்

காலிப் பணியிட குளறுபடிகள்!

விண்ணப்பித்தனர். ஆனால், அவை மூட்டை கட்டப்பட்டு பரணில் வைக்கப்பட்டது. இந்த விவகாரத்தில் அமைச்சர்கள் முதல் அதிகாரிகள் வரை கோடிக்கணக்கில் பணம் விளையாடி இருக்கிறது. ஆனா லும், பணியிடங்கள் மட்டும் இன்னும் காலியாகவே இருக்கின்றன...'' என்கி றார்கள்.  

இந்த விவகாரம் குறித்து, இந்து சமய அறநிலையத் துறை முன்னாள் முதன்மை ஆணையர் சம்பத்திடம் கேட்டோம். ''இது தொடர்பான வழக்கு உயர் நீதிமன்ற மதுரை கிளையில் இருக்கிறது என்ற தகவல், ஜனவரி 25-ம் தேதி எங்களுக்கு வந்தது. அதே நாள்தான் பழநி தேவஸ்தானத்தில் நேர்முகத் தேர்வு நடத்தினோம். விசாரணை செய்த நீதிபதி, 'விசாரணை நடப்பதற்குள் ஏன் நேர்காணல் நடத்தினீர்கள்?’ என்று கேட்டார். அதனால்தான், அதை ஒத்திவைத்தோம். நீதிமன்ற உத்தரவு தேவஸ்தானத்துக்கு வந்தபிறகு நேர்காணல் நடத்தப்படும்...'' என்றார்.

பழநி தேவஸ்தான இணை ஆணையராகப் பொறுப்பேற்றுள்ள ராஜா, ''பணி நியமன இழுத்தடிப்புக் குளறுபடி பற்றி எனக்குத் தெரியாது. அது குறித்து விசாரித்து நடவடிக்கை எடுப்பேன்!'' என்றார்.

அறநிலையத் துறை அமைச்சர் எஸ்.பி.சண்முகநாதனை தொடர்பு கொண் டோம். அவருடைய டிரைவர் லைனில் வந்து தகவல்களைக் கேட்டுக்கொண்டு, ''அமைச்சரை உங்களிடம் பேசச் சொல்கிறேன்...'' என்றார். இதுவரை, அமைச்சர் பேசவில்லை. பழநி கோயிலிலும், அதன் கட்டுப்பாட்டில் உள்ள கல்லூரிகளிலும் அதிகளவு வருமானம் இருக்கிறது. 'ஆட்கள் தேவை’ விவகாரத்தில் என்னதான் நடக்கிறது என்பதை மக்களுக்கு தமிழக அரசாவது தெளிவுபடுத்த வேண் டும்!

- வீ.ஜெ.சுரேஷ்

படங்கள்: வீ.சிவக்குமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism