Published:Updated:

அப்ப இனிச்சது... இப்ப கசக்குதா?

ஆத்திரத்தில் நடனக் கலைஞர்கள்

அப்ப இனிச்சது... இப்ப கசக்குதா?

ஆத்திரத்தில் நடனக் கலைஞர்கள்

Published:Updated:
அப்ப இனிச்சது... இப்ப கசக்குதா?
##~##

'தேர்தல் பிரசாரத்துக்கு எங் களைப் பயன்படுத்தி விட்டு, காரியம் முடிந்ததும் எங்கள் பிழைப்பில் மண் அள்ளிப் போடுகிறார்கள் அரசியல்வாதிகள்! ஆடல் பாடல் நிகழ்ச்சிகள் அப்போது இனிச்சது, தேர்தலுக்குப் பிறகு மட்டும் கசக்குதா?' என்று கொந்தளிக்கிறார்கள் நடனக் கலைஞர்கள்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

மதுரையில் தோன்றி தமிழகம் முழுவதும் பரவிய கலை, ஆடல் பாடல் நிகழ்ச்சி. அச்சு அசலாக சினிமா நட்சத்திரங்கள் போன்ற ஒப்பனையுடன் அசத்தும் இந்த நிகழ்ச்சியில், ரசிகர்களைத் திருப்திப்படுத்த சிலர் ஆபாசத்தையும், சாதியையும் புகுத்த... பிரச்னைகள் வெடித்தன. இதைத் தொடர்ந்து ஒரு சில தென் மாவட்டங்களில் தடை போட்டார்கள். இந்தத் தேர்தலுக்குப் பிறகு மதுரையிலும் ஆடல், பாடல் நிகழ்ச்சிக்கு தடை போட்டுவிட்டது, காவல்துறை. இதனால், சுமார் 50,000 பேர் பிழைப் புக்கு வழி இன்றித் தவிக்கிறார்கள்.

அப்ப இனிச்சது... இப்ப கசக்குதா?

தென் மாவட்ட மேடை நடன, நாட்டியக் கலைஞர்கள் நலச் சங்கத் தலைவர் ரஞ்சித்குமார், 'நாங்கள், 'சட்டத்தை மதிக்கிறோம், போலீஸாருக்கு ஒத்து ழைப்புக் கொடுக்கிறோம். ஆபாசமான, சாதி உணர்வைத் தூண்டுகிற வகையில் நிகழ்ச்சி செய்ய மாட்டோம்’ என்று பத்திரத்தில் எழுதி வாங்கிய

அப்ப இனிச்சது... இப்ப கசக்குதா?

பின்னரே, ஆடல் குழுவினரை எங்கள் சங்கத் தில் உறுப்பினராகச் சேர்க்கிறோம். ஆனால், நிகழ்ச்சிக்கு போலீஸ் அனுமதி மறுக்கிறது. அரசுக்கு மனு மேல் மனு அனுப்பியும், போராட் டங்கள் நடத்தியும் தீர்வு கிடைக்காததால், மதுரை உயர் நீதிமன்றக் கிளையில் வழக்குத் தொடர்ந்தோம். 'ஆடல் பாடல் நிகழ்ச் சிகள் நடத்த அனுமதிக்கலாம்!’ என்று 2010-ல் நீதிமன்றம் உத்தரவு இட்டது. அதையும் போலீஸ் மதிக்கவில்லை. நெல்லை, குமரி, தூத்துக்குடி மாவட்டங்களில் சாதிப் பிரச்னை ஏற்படும் என்று சொல்லி அனுமதி மறுத்த போலீஸார், மதுரை போன்ற ஊர்களில் அனுமதி கொடுக்கிறார்கள். திரு நெல்வேலி எஸ்.பி-யாக இருந்த ஆஸ்ரா கர்க் மதுரை வந்ததும், இங்கும் தடை போட்டுவிட்டார். கோயில் திருவிழாவில் மட்டுமல்ல, திருமங்கலத் தில் நடக்கும் வர்த்தகப் பொருட்காட்சியில் 10 நாட்கள் நிகழ்ச்சிக்கு அனுமதி வாங்கி இருந்தோம். அதையும் ரத்து செய்துவிட்டனர். இப்படியே போனால், நாங்கள் பட்டினி யால் சாக வேண்டியதுதான்!' என்றார் வேதனையாக.

சங்கச் செயலாளர் ராம்குமார் ராஜா, 'மாசி முதல் புரட்டாசி வரையிலான திருவிழாக் காலங்கள்தான் எங்களுக்கு சீஸன். அந்த வருமானத்தை வைத்துத்தான் எஞ்சிய 6 மாதங்களையும் ஓட்ட வேண்டும். தேர்தல் நேரத்தில் தலைவர்களைப்போல் வேடம் அணிந்து ஓட்டு கேட்கவும், பொதுக் கூட்டத்துக்கு ஆள் சேர்க்கவும் எங்களைப் பயன்படுத்தும் அரசியல் கட்சியினர், ஆட்சிக்கு வந்ததும் எங்களை மறந்து விடுகிறார்கள். சினிமாவிலும், டி.வி-யிலும் இல்லாத ஆபாசத்தையா மேடையில் காட்டிவிட முடியும்? தைரியம் இருந்தால் டி.வி. நிகழ்ச்சிகளைத் தடை செய்ய வேண்டியதுதானே? இப்போது அம்மா முதல்வராக இருக்கிறார். அவர் கண்டிப்பாக எங்கள் குறைகளைக் களைவார் என்று நம்புகிறோம்!'' என்றார் நம்பிக்கையுடன்.

நல்லதே நடக்கட்டும்.

- கே.கே.மகேஷ்

படங்கள்: எஸ்.கிருஷ்ணமூர்த்தி, க.கார்த்திக்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism