Published:Updated:

''மீண்டும் வேண்டும் மெக்னீஷியம் ஆலை!''

ராமநாதபுர குமுறல்...

''மீண்டும் வேண்டும் மெக்னீஷியம் ஆலை!''

ராமநாதபுர குமுறல்...

Published:Updated:
''மீண்டும் வேண்டும் மெக்னீஷியம் ஆலை!''
##~##

''ராமநாதபுரம் மாவட் டத்தில் இருக்கும் இயற்கை வளம் வீணாகிறது. அந்த இயற்கை வளத்துக்காகப் பிறரிடம் கையேந்தும் நிலை இனியாவது மாறவேண்டும்!'' என்று கொதிப்புடன் ஜூ.வி. ஆக்ஷன் செல் எண்ணுக்கு (044-42890005) தகவல் வரவே, விசாரணையில் இறங்கினோம். விமான பாகங்கள் செய்யப் பயன் படும் கனமான உலோகம் மெக்னீஷியம். இந்த உலோகத்துக்கு உலக நாடுகள் அனைத்திலும் ஏகப்பட்ட வரவேற்பு. அப்படிப்பட்ட கனிமம், ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள வாலிநோக்கம் என்ற கிராமத்தின் கடலோரப் பகுதிகளில் அதிக அளவில் கிடைக்கிறது. இங்குள்ள கடலோரப் பகுதிகளில் மட்டும் சுமார் 3,000 முதல் 4,000 ஏக்கர்களில் மெக்னீ ஷியம் இருப்பதாக சொல்லப்படுகிறது. 1993-ம் ஆண்டு உப்புக் கழிவுகளில் இருந்து மெக்னீஷியம் பிரித்து எடுக்கும் ஆலை ஒன்றை மத்திய மற்றும் மாநில அரசுகள் இணைந்து இந்த கிராமத்தில் நிறுவின. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

''மீண்டும் வேண்டும் மெக்னீஷியம் ஆலை!''

அடுத்து நடந்ததைச் சொல்கிறார் வாலிநோக்கம் கிராமத்தைச் சேர்ந்த பிரமுகர், ''அந்த ஆலை மூலம் ஒரு நாளைக்கு 3 ஷிப்ட்களில் மாதம் 1,000 டன்கள் வரை மெக்னீஷியம் உற்பத்தி செய்யப்பட்டு வந்தது. ஆனால், திடீரென ஆலை நஷ்டத்தில் இயங்குவதாகக் கூறப் பட்டு மூடப்பட்டது. அதன் பிறகு இந்த ஆலையை ஒரு தனியார் தொழிலதிபர் வசம் ஒப்படைக்கப் பேச்சுவார்த்தை நடத்தப் பட்டு, அதுவும் நடைமுறைக்கு வராமல் போனது. அதன் பிறகு எந்த நடவடிக்கையுமே எடுக்கப்படவில்லை. இன்று அங்கே மெக்னீஷியம் ஆலை இருந்ததற்கான அடையாளமே இல்லை. இயந்திரங்கள் எல்லாம் அப்புறப்படுத்தப்பட்டு, ஆலை இருந்த இடத்தில், உப்பு ஆலைதான் இன்று இயங்கி வருகிறது!'' என்று வருத்தப்பட்டார்.

அவரே தொடர்ந்து, ''அந்த மெக்னீஷியம் ஆலையில் இருந்த 13 இயந்திரங்களில் இரண்டு மட்டுமே இயங்கியது. அதனால்தான் ஆலை நஷ்டத்தில் ஓடுவதாகக் கூறப்பட்டு, மூடப் பட்டது. செயல் இழந்த இயந்திரங்களை சரி செய்வதற் கான முயற்சி எதுவுமே எடுக்கப்படவில்லை. அரசால் முடியாது என்றால், அந்தப் பணியை தனியாரி டமாவது ஒப்படைத்து இருக்கலாமே. எந்த மாற்று ஏற்பாடுகளையும் செய்யாமல், ஆலையை மூடிவிட்டு நஷ்டம் எனக் கணக்குக் காட்டியது நியாயம்தானா? இதுகுறித்து அரசுக்கு பலமுறை கோரிக்கை வைத்தும் எதுவுமே நடக்கவில்லை. இனியாவது இந்த வளத்தைப் பயன்படுத்த அரசு முன்வர வேண்டும். இருக்கும் வளங்களை பயன்படுத்தாமல், நமது நாடு விரைவில் வல்லரசாக மாறிவிடும் என்று சொன்னால் எப்படி நடக்கும்?'' என்று கேள்வி எழுப்பினார்.

இந்த விவகாரம் குறித்து ராமநாதபுரம் கலெக்டர் அருண் ராயிடம் கேட்டபோது, ''நான் இப்போதுதான் பணிக்கு வந்திருக்கிறேன். இந்த விவகாரம் குறித்து விசாரித்து நடவடிக்கை எடுக்கிறேன்!'' என்றார்.

- ச.புபேஸ், படம்: உ.பாண்டி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism