Published:Updated:

சாலை ஒன்று... நிதி இரண்டு!

சிக்கலில் தேவிகாபுரம் ஊராட்சித் தலைவி

சாலை ஒன்று... நிதி இரண்டு!

சிக்கலில் தேவிகாபுரம் ஊராட்சித் தலைவி

Published:Updated:
சாலை ஒன்று... நிதி இரண்டு!
##~##

'திருவண்ணாமலை மாவட்டம் மேற்கு ஆரணி ஒன்றியத்தில் இருக்கிறது, தேவிகா புரம் ஊராட்சி. வேலூர் நாடாளுமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியில் இங்கு சிமென்ட் சாலை ஒன்று அமைக்கப்பட்டது. ஆனால், ஊராட்சி நிதியில் இந்த சாலை அமைக்கப் பட்டதாகப் போலி ஆவணம் தயார் செய்து, ஊராட்சித் தலைவர் மற்றும் ஒன்றியப் பொறியாளர் ஆகிய இருவரும் முறைகேடு செய்துள்ளனர்!’ என்று தகவல் கிடைக்கவே உடனே விரைந்தோம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

தேவிகாபுரம் ஊராட்சித் தலைவராக தி.மு.க-வைச் சேர்ந்த ராஜேஸ்வரி, துணைத் தலைவராக கே.சி.சண்முகம் ஆகியோர் பதவி வகிக்கின்றனர். இந்த ஊராட்சியில் தி.மு.க-வுக்கு ஐந்து, அ.தி.மு.க-வுக்கு ஐந்து மற்றும் காங்கிரஸ் கட்சிக்கு இரண்டு என்று மொத்தம் 12 உறுப்பினர்கள். ஊராட்சித் தலைவர் மீது தி.மு.க-வைச் சேர்ந்த உறுப்பினர்களே குற்றச்சாட்டுகளை அடுக்கு வதால், ஏரியா பரபரத்துக் கிடக்கிறது.

சாலை ஒன்று... நிதி இரண்டு!

ஊராட்சி மன்ற உறுப்பினர் கௌரியின் கணவர் சகாயம், ''பெரியநாயகி அம்மன் கோயில் வடக்கு மாட

சாலை ஒன்று... நிதி இரண்டு!

வீதியில், எம்.பி. தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, 2006-ம் ஆண்டு சிமென்ட் சாலையை

சாலை ஒன்று... நிதி இரண்டு!

3 லட்சம் செலவில் கான்ட்ராக்டர் பழனி அமைத்தார். அதற்கான தொகை 13.03.07 அன்று வழங்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், தெற்கு மாட வீதியில்

சாலை ஒன்று... நிதி இரண்டு!

1.50 லட்சம் செலவில், சிமென்ட் சாலை அமைக்க ஊராட்சி மன்றக் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு, அதில் எல்லா உறுப்பினர்களும் கையெழுத்துப் போட்டுள்ளனர். இது குறித்து தலைவரிடம் கேட்டால், 'தெற்கு மாட வீதியில் பணி நடக்கவில்லை, வடக்கு மாட வீதியில் அமைக்கப்பட்ட சிமென்ட் சாலைக்குத்தான் இந்த செக் வழங்கப்பட்டு உள்ளது...’ என்கிறார். தெற்கு மாட வீதி என்று தீர்மான பதிவேட்டில் இருந்ததை வடக்கு மாட வீதி என்று திருத்தி உள்ளனர். இதற்கு, ஒன்றியப் பொறியாளர் மோகன்குமாரும் உடந்தை. மேலும், போலி ரசீதுகள் தாக்கல் செய்து பணம் எடுக்கப்பட்டது கண்டுபிடிக்கப்பட்டு, கலெக்டர் உத்தரவுப்படி அந்தப் பணம் ஊராட்சி பொது நிதியில் 27.05.09 அன்று செலுத்தப்பட்டுள்ளது. இது தவிர கை பம்ப், மின் மோட்டார் ஆகியவற்றை பழுது நீக்கியது, மின் மோட்டாருக்கு காயில் கட்டியது, எழுதுகோல் வாங்கியது, சமுதாயக் கூடத்தை சுத்தம் செய்தது, குப்பை வண்டிகளில் பழுது நீக்கப்பட்டது என போலி பில் தயார் செய்து, சுமார்

சாலை ஒன்று... நிதி இரண்டு!

8 லட்சத்துக்கும் மேல் முறைகேடு செய்யப்பட்டு உள்ளது...'' என்றார் ஆவேசமாக.

சாலை ஒன்று... நிதி இரண்டு!

இந்தக் குற்றச்சாட்டுகள் குறித்து விளக்கம் கேட்க ஊராட்சித் தலைவர் ராஜேஸ்வரியை பார்க்கச் சென்றோம். அவர் மகன் வெங்கடேசன் பேசினார். ''வடக்கு மாட வீதிக்கு எம்.பி. நிதி

சாலை ஒன்று... நிதி இரண்டு!

3 லட்சமும் தெற்கு மாட வீதிக்கு

சாலை ஒன்று... நிதி இரண்டு!

2 லட்சமும் ஒதுக்கப்பட்டது. வடக்கு மாட வீதி பணி அந்தப் பணத்தில் முழுமையாக முடிக்கப்படவில்லை. அதனால் ஊராட்சி நிதியையும் பயன்படுத்திக் கொண்டோம். நாங்கள் செய்த தவறு ஒன்றே ஒன்றுதான். பணி பாதியில் நிற்பதால், தென் மாட வீதியின் எம்.பி. நிதியை மாற்றி, வடக்கு மாட வீதி பணியை முடித்து விட்டோம். அதற்காக தெற்கு மாட வீதிக்கு போட்ட தீர்மானத்தை திருத்தி வடக்கு மாட வீதி என்று மாற்றி விட்டோம்...'' என்றார் நிதானமாக.

ஊராட்சித் தலைவரிடம் இருந்த 'செக்’ பவரை கட் செய்தும், தலைவர் பதவியை விட்டு நீக்குவதற்கு விளக்கம் கேட்டும், கலெக்டர் நோட்டீஸ் அனுப்பியுள்ளாரே என்று கேட்டோம். ''ஆமாம் கடிதம் வந்துள்ளது. ஆனால், ஊராட்சித் தலைவர் காசிக்கு சென்று உள்ளதால் அவர் வந்தவுடன் விளக்கம் அளிப்பார்...'' என்று மழுப்பலாகச் சொன்னார்.

சாலை ஒன்று... நிதி இரண்டு!

ஒன்றியப் பொறியாளர் மோகன் குமாரை சந்தித்தோம். ''ஒரு நல்ல காரி யம் செய்யப் போய் என்னை சிக்கலில் மாட்ட வைத்து விட்டனர். என் மீது வழக்கும் போட்டு உள்ளனர். அதனால், மேற்கொண்டு பேச நான் தயாராக இல்லை. ஆனால், நான் குற்றவாளி இல்லை!'' என்று சத்தியம் செய்தார்.

கான்ட்ராக்டர் பழனியிடம் விசாரித்தோம். ''வடக்கு மாட வீதியில் வேலையை முடித்து அதற்கான பணமும் பெற்று விட்டேன். பணி முழுமையாக முடிவடையாததால், மீதி வேலை யையும் என்னையே செய்யச் சொல்லி அதற்குரிய பணமும் கொடுத்து விட்டனர். ஆனால், மீதி வேலைக்கான ஒப்பந்தம் நான் எடுக்கவில்லை. அது வேறு ஒருவர் பெயரில் எடுக்கப்பட்டு, வேலை மட்டும் நான் செய்ததற்காக எனக்கு பணம் தரப்பட்டது!'' என்று நழுவினார்.

திருவண்ணாமலை கலெக்டராக இருந்த ராஜேந்திரனிடம் கேட்டோம். ''முறைகேடு நடந்து இருப்பதால்தான், தலைவரிடம் இருந்து முதற்கட்டமாக செக் பவர் பறிக்கப்பட்டுள்ளது. அதே நேரத்தில் தலைவரை பதவியில் இருந்து எடுக்கவும் நோட்டீஸ் கொடுத்துள்ளோம். விரைவில் அதுவும் நடக்கும்...'' என்றார் உறுதியாக.

தி.மு.க-வினருக்கு இது போதாத காலம்தான்!

- கோ.செந்தில்குமார்

படங்கள்: பா.கந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism