Published:Updated:

ரயில் வரக் காரணம் டி.ஆர்.பாலுவின் முதல் மனைவி!

பொது மேடையில் பொளந்துகட்டிய அமைச்சர்

ரயில் வரக் காரணம் டி.ஆர்.பாலுவின் முதல் மனைவி!

பொது மேடையில் பொளந்துகட்டிய அமைச்சர்

Published:Updated:
ரயில் வரக் காரணம் டி.ஆர்.பாலுவின் முதல் மனைவி!
##~##

ட்டுக்கோட்டை - மன்னார்குடி - நீடாமங்கலம் ரயில்வே பாதை அமைக்க வேண்டி, அப்பகுதி மக்கள் நீண்ட நாட்களாகப் போராடி வந்தனர். ஒருவழியாக, இந்தத் திட்டத்தை மத்திய அரசு ஏற்றுக்கொண்டு நிதியை ஒதுக்கி யது. தற்போது, அந்தப் பணி முடியும் தறுவாயை எட்டிவிட்டது. இந்நிலையில், மன்னார்குடியில் திருச்சி கோட்ட ரயில்வே முன்பதிவு மையம் திறக்கப்பட்டது. இதில் அமைச்சர் பழனிமாணிக்கம், டி.ஆர்.பாலுவின் மகனும், மன்னார்குடி தி.மு.க. எம்.எல்.ஏ-வுமான ராஜா, திருவாரூர் தி.மு.க. மாவட்டச் செயலாளர் கலைவாணன் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விழாவில் பேசிய பலரும், 'இத்திட்டம் வருவதற்கு டி.ஆர்.பாலுவின் தீவிர முயற்சிதான் காரணம்’ என பேசினர். முன்பதிவு மையத்தைத் திறந்துவைத்துப் பேசிய அமைச்சர் பழனிமாணிக்கம், 'டி.ஆர்.பாலுவே காரணம் என பலரும் சொன்னார்கள். ஆனால், அவருக்கும் முன்பே இதற்காக முயற்சி எடுத்தவர் அவரது மூத்த மனைவி பொற் கொடிதான். தஞ்சாவூர் - அரியலூர் ரயில் திட்டத்துக்காக, அப்போது ரயில்வே துறையில் அமைச் சராக இருந்த வேலுவை சந்தித்தேன். அவர், 'டி.ஆர்.பாலுவின் மனைவி பொற்கொடி மன்னார்குடிக்கு ரயில்விட வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளார்’ என்றார். எனவே, இத்திட்டம் வருவ தற்கு முதல் அடி எடுத்து வைத்தவர் ராஜாவின் பெரி யம்மா பொற்கொடிதான். அவருக்கு நாம் நன்றி சொல்ல வேண்டும். இதை இங்கே நான் சொல்லாவிட்டால்... என்னை அவர் திட்டித் தீர்த்துவிடுவார். டி.ஆர்.பாலு பொதுவாக யாரையும் அனுசரிக்க மாட்டார். அவர் மகன் ராஜா அப்படியல்ல, எல்லோரையும் மதிக்கிறார்...' என பேசிக்கொண்டே போக, பலரும் அதிர்ச்சியில் உறைந்துவிட்டனர்.

ரயில் வரக் காரணம் டி.ஆர்.பாலுவின் முதல் மனைவி!

பொதுமேடையில் அமைச்சர் அப்படிப் பேச என்ன காரணம்?

'கடந்த தேர்தலில் நாடாளுமன்ற எம்.பி-யானபோது, டி.ஆர்.பாலு வுக்கு அமைச்சர் பதவி கொடுக்கவில்லை. மேலும் அவருடைய எரிசாராய ஆலைக்கு ஊர் மக்களிடம் கடும் எதிர்ப்புக் கிளம்பியது. தஞ்சை மற்றும் திருவாரூரின் தி.மு.க. மாவட்டச் செயலாளர்கள், 'டி.ஆர்.பாலுவை மத்திய மண்டல பகுதி அதிகார வட்டத்துக்குள் வரவிடவே கூடாது!’ என்பதில் தீவிரமாக இருந்தார்கள். இதனால், தனது மற்றொரு மனைவி ரேணுகாதேவியின் மகனான ராஜாவை, நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் மன்னார்குடியில் களம் இறக்கினார், டி.ஆர்.பாலு. இதை பொற்கொடி கடுமையாக எதிர்த்தார். இரண்டு குடும்பத்துக்கும் எப்போதும் ஏழாம் பொருத்தம்தான். ராஜாவுக்கு ஸீட் கிடைத்ததும், பொற்கொடியை சிலர் தூண்டிவிட்டு வேடிக்கை பார்த்தனர். ஒரு கட்டத்தில், எதிர்த் தரப்பு வேட் பாளரை வெற்றி பெற வைக்கவும் முயற்சிகள் நடந்தன. ஆனாலும், ராஜா வெற்றி பெற்றார். பழனிமாணிக்கத்தின் நாடாளு மன்றத் தொகுதிக்குள் மன்னார்குடி இருந்தாலும், 10 நிமிட பிரசாரத்துக்குப் பிறகு, மன்னார்குடி பக்கமே அவர் வரவில்லை.

கடந்த சட்டமன்றத் தேர்தலில் தன்னிடம் ஒப்படைக்கப் பட்ட திருவாரூர், மன்னார்குடி சட்டமன்றத் தொகுதிகளை டி.ஆர்.பாலு வெற்றி பெற வைத்தார். வாய்ப்பு கொடுக்கா விட்டாலும் கோ.சி.மணி, தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட கும்பகோணம், திருவிடைமருதூர் தொகுதிகளில் தி.மு.க-வை வெற்றிபெற வைத்தார். ஆனால், பழனி மாணிக்கம் ஓர் இடத்தில்கூட யாரையும் வெற்றி பெற வைக்கவில்லை. 'இனி, டெல்டா டி.ஆர்.பாலுவிடம் போய்விடும்’ என்கிற அச்சத்தில்தான், குடும்பத்துக்குள் குழப்பத்தை உண்டு பண்ணுகிறார் பழனிமாணிக்கம். இவர்களை ராஜா சமாளிப்பாரா? என்பது போகப் போகத்தான் தெரியும்!'' என்கிறார்கள் உள்ளூர் அரசியல் புள்ளிகள்.

ராஜாவின் ஆதரவாளர்களோ, 'பழனிமாணிக்கம் மத்திய இணை அமைச்சர் என்பதால் விழாவில் உரிய முக்கியத்துவம் கொடுக்கப்பட்டது. ஆனால், அவரோ தேவை இல்லாமல் குடும்பத்தைப்பற்றி பேசி இருக்கிறார். முதல் முறையாக அவர் மத்திய அமைச்சர் ஆனபோது, வர்த்தக சங்கத்தினர் மற்றும் முக்கியஸ்தர்கள், 'மன்னார்குடிக்கு ரயில்விட வேண்டும்’ என கோரிக்கை வைத்தனர். அப்போது, 'மலடி புள்ளை பெக்க முடியுமா?’ என்றார். மம்தா பானர்ஜியிடம் டி.ஆர்.பாலு நேரடியாகப் பேசி, இந்தத் திட்டத்தைக் கொண்டுவந்தார். அதற்காக மன்னார்குடி மக்கள், 'டி.ஆர்.பாலுவுக்கு நன்றி’ என்று டிஜிட்டல் போர்டுகள் வைத்தனர். உடனே திடீரென, 'பழனிமாணிக்கத்துக்கு நன்றி’ என சில போஸ்டர்கள் முளைத்தன. பிரஸ் மீட்டில், 'பட்டுக் கோட்டை - மன்னார்குடி - நீடாமங்கலம் ரயில்வே திட்டத்தைக் கொண்டு வந்தது நான்தான்’ என அறிவித்தார் டி.ஆர்.பாலு. இப்போது பழனிமாணிக்கம், அடுத்த முயற்சியாக 'பொற்கொடிதான் காரணம்’ என பேச ஆரம்பித்து இருக்கிறார். இதுபோன்ற சர்ச்சைகளைக் கிளப்புவது மூலம் ராஜாவின் வளர்ச்சியைத் தடுக்க நினைக்கிறார். ஆனால், அது முடியாது!' என ஆவேசப்பட்டனர்.

மத்திய இணை அமைச்சர் தரப்போ, 'ஒரு திட்டம் வருவதற்கு முயற்சி எடுத்த அனைவருக்கும் நன்றி சொல்ல வேண்டும். நடந்த சம்பவத்தின் அடிப்படையில், பொற்கொடிக்கும் நன்றி தெரிவிக்க வேண்டும் என்ற நல்ல எண்ணத்தில்தான் அமைச்சர் சொன்னார். இதில் தேர்தல் முடிவுகளையும், தனிப்பட்ட விஷயத்தையும் கோர்க்கக் கூடாது!' என்றனர்.

- சி.சுரேஷ்

படங்கள்: கே.குணசீலன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism