Published:Updated:

'வரும்... ஆனா வராது!'

'கந்தசாமி'யை நம்பி நொந்தசாமிகள்

'வரும்... ஆனா வராது!'

'கந்தசாமி'யை நம்பி நொந்தசாமிகள்

Published:Updated:
'வரும்... ஆனா வராது!'
##~##

விக்ரம் நடித்த 'கந்தசாமி’ படத்தை அடுத்து பரபரப்பாகத் தொடங்கப்பட்டது, 'கந்தசாமி அறக்கட்டளை’. அடிப்படை வசதிகள் இல்லாத கிராமங்களைத் தத்தெடுத்து, தன்னிறைவு பெற்ற கிராமங்களாக மாற்றுவதாக விளம்பரம் செய் யப்பட்டது. முதற்கட்டமாக 27 கிராமங்களைத் தத்தெடுத்து, ஒவ்வொரு கிராமத்துக்கும்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

'வரும்... ஆனா வராது!'

3 லட்சம் வழங்கப்படும் என அறிவித்தார்கள். தமிழகம் முழுவதும் ஏராளமான கிராமங்களில் இருந்து, அதன் தலைவர்கள் விண்ணப்பித்தனர். அதில், தேர்ந்து எடுக்கப்பட்ட கிராமப் பொறுப்பாளர்களுக்கு,

'வரும்... ஆனா வராது!'

3 லட்சம் என்று எழுதப்பட்ட மெகா மாதிரி காசோலை 'கந்தசாமி’ படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் கொடுக்கப்பட்டது. 

மேடையில் பிரமாண் டமாக விளம்பரம் செய்து அறிவிக்கப்பட்ட நிதி, சம்பந்தப்பட்ட கிராமங்களுக்கு இது வரை கிடைக்கவில்லை என்ற தகவல் வந்து சேரவே, விசாரணையில் இறங்கினோம்.

'வரும்... ஆனா வராது!'
'வரும்... ஆனா வராது!'

'கந்தசாமி அறக் கட்டளை’ தத்து எடுத்த கிராமங்களின் பட்டியலில் இருந்த திருப்பூர் மாவட்ட நத்தக்காடையூர் கிராமத்துக்குச் சென்றோம்.

ஊராட்சித் தலைவர் ஜெகதீசன் நம்மிடம் பேசினார். ''பேப்பர்லதான் அவங்க விளம்பரத்தைப் பார்த்தோம். உங்க கிராமத்துக்குத் தேவையான 5 அடிப்படைத் தேவைகள் குறித்து எழுதி அனுப்புங்கள். 'கந்தசாமி அறக்கட்டளை’ உதவும் என்று சொல்லி இருந்தார்கள். 2,500 பேர் வசிக்கும் எங்கள் கிராமத்துக்கு நூலகம், அரசு நடுநிலைப் பள்ளியில் விளையாட்டு மைதான சீரமைப்பு, சமுதாயக் கூடம், நவீன வசதியுடன் கூடிய கழிவறை, இலவச பொது மருத்துவமனை என்று 5 தேவைகளை எழுதி அனுப்பி இருந்தேன்.

எங்கள் கிராமத்தைத் தத்து எடுத்து இருப்பதாக அறிவித்தனர். எங்கள் ஊருக்கு ஒரு குழு வந்தது. கிராம மக்களை வீடியோவில் படம் பிடித்துச் சென்றனர். 'சென்னையில் நடக்கும் 'கந்தசாமி’ பாடல் வெளியீட்டு விழாவில் முதல்கட்ட நிதி வழங்கப்படும். உங்கள் ஊரில் இருந்து ஆண்கள், பெண்கள் என தலா 10 நபர்களை வேனில் அழைத்து வர வேண்டும். வேனின் முகப்பு மற்றும் பின்பக்கத்தில் 'தத்தெடுக்கலாம் வாங்க, 'கந்தசாமி பவுண்டேஷன்’ என்ற பேனரை கட்டிக் கொண்டு வர வேண்டும்’ என்று சொன்னார்கள்.

நாங்களும் வேனில் சென்றோம். விழா அரங்கில், தத்தெடுக்கும் திட்டம் பற்றிப் பேசினார்கள். சன் மியூசிக் சேனலில் இந்த நிகழ்ச்சி நேரடி ஒளிபரப்பு செய்யப்பட்டது.

'வரும்... ஆனா வராது!'

3 லட்சம் என எழுதப்பட்டிருந்த காசோலை போன்ற பேனரை, மேடையில் வழங்கினர். வேன் வாடகை, சாப்பாட்டுச் செலவு

'வரும்... ஆனா வராது!'

ஆகியவற்றைக் கொடுத்தார்கள். ஆனால், அந்த பணம் மட்டும் எங்களுக்குக் கிடைக்கவே இல்லை, எங்களிடம் இருப்பது அந்த பேனர் மட்டும்தான். இது குறித்து பல முறை போன் செய்து கேட்டேன். இப்போ வரும், அப்போ வரும்னு சொன்னாங்க. அவங்க எங்கள் தொடர்புக்குக் கொடுத்து இருந்த செல்போன் நம்பர்கள் எல்லாம் இப்போ ஸ்விட்ச்ஆஃப் ஆகி விட்டன. இனி யாரைத் தொடர்பு கொள்வது என்று புரியவில்லை. எங்களுக்கு மட்டுமல்ல, அன்று மேடையில் ஏற்றி, மாதிரி செக் கொடுத்த எந்த ஊருக்குமே அவர்கள் இன்னும் பணம் கொடுக்கவில்லை!'' என்றார் வேதனையுடன்.

'கந்தசாமி’ படத்தின் தயாரிப்பாளர் கலைப்புலி தாணுவைத் தொடர்பு கொண்டு கேட்டோம்.

''எங்கள் எதிர்காலமே அந்தத் திட்டத்தில்தான் அடங்கி இருக்கிறது. அந்தத் திட்டம் கைவிடப் படவில்லை. அதுக்காகவே 30 பேர் கொண்ட ஒரு குழு அமைக்கப்பட்டு உள்ளது. கிராம மக்கள்தான் ஒத்துவர மறுக்கின்றனர். கிராம மக்களை ஒருங்கிணைத்து, நீங்கள் கூட அழைத்து வரலாம். அவர்களுக்குத் தரவேண்டிய பணத்தை, எங்கள் குழுவிடம் பேசி விட்டுத் தந்து விடுகிறேன்!'' என்றார்.

'வரும்... ஆனா வராது!'

'கந்தசாமி’யை இயக்கிய சுசி.கணேசனை தொடர்பு கொண்டோம். ''மதுரை அருகில் உள்ள 'காந்திபுரம்’ கிராமத் தைத் தத்தெடுத்து நலத்திட்டங்கள் செய்தோம். அதைப் பார்த்த தாணுவுடைய சில நண்பர்கள், தத்தெடுக் கும் திட்டத்துக்கு நிதி உதவி தருவதாகவும், அதற் காக ஒரு அறக்கட்டளை ஆரம்பிக்கலாம் என்றும் கூறினர். அதன் பிறகுதான், 'கந்தசாமி அறக்கட்டளை’யைத் தொடங்கினோம். ஐங்கரன் கருணா, திருப்பூர் விநியோ கஸ்தர் சுப்பிரமணியம் உட்பட தாணுவின் நண்பர்கள் 25 பேர், சில கிராமங்களைத் தத்தெடுக்க முன்வந்தனர். அவர்களுடைய பணத்தை அறக்கட் டளைக்குள் கொண்டு வர, உள்துறை அமைச் சகத்தில் அனுமதி பெறவேண்டும். அது தவிர, இன்னும் நிறைய விதிமுறைகள் இருக் கின்றன. அதனால்தான், இதற்குரிய ஃபைல்களை நிதி உதவி செய்பவர்களிடமே கொடுத்து விட்டோம். அந்த கிராமங்களைத் தத்தெடுத்தவர்கள்தான், பணத்துக்குப் பொறுப்பு. மேலும் ஏதாவது தகவல் வேண்டும் என்றால், தாணுவிடம் கேளுங்கள்...'' என்றார்.

படத்துக்கு விளம்பரம் வேண்டும் என்பதற்காக, அப்பாவி கிராம மக்களை ஏமாற்றுவது நியாயம்தானா என்பதை சம்பந்தப்பட்டவர்கள் சிந்திக்கட்டும்!

- ஞா.அண்ணாமலை ராஜா

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism