Published:Updated:

செருப்பால் அடிப்போம்..

ஆவேச வைகைச்செல்வன்.. அதிரும் அருப்புக்கோட்டை

செருப்பால் அடிப்போம்..

ஆவேச வைகைச்செல்வன்.. அதிரும் அருப்புக்கோட்டை

Published:Updated:
செருப்பால் அடிப்போம்..
##~##

ருப்புக்கோட்டை தொகுதியில் முன்னாள் அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர்.ராமச் சந்திரனை எதிர்த்து அ.தி.மு.க. சார்பில் மாநில இலக்கிய அணிச் செயலாளர் வைகைச்செல்வன் போட்டியிட்டு, வெற்றி பெற்றார். பதவியேற்பு விழாவின்போது, அவர் தவறி விழ... மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இதை சாதக மாக்கிக்கொள்ள நினைத்த மாஜி அமைச்சரின் ஆதர வாளர்கள், 'வைகைச்செல்வன் தொகுதி பக்கம் எட்டியே பார்க்கவில்லை. தேர்தல் நேரத்தில்

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

செருப்பால் அடிப்போம்..

3,000 மதிப்புள்ள பொருட்களை இலவசமாகத் தருவேன் என்று ஏமாற்றிவிட்டார்’ என்ற ரீதியில் பொதுமக்களிடம் பிரசாரம் செய்தனர். இதை கேள்விப்பட்ட அ.தி.மு.க. தரப்பு, எதிராகக் களம் இறங்க... பிரச்னை காவல் நிலையம் வரை சென்று ஓய்ந்தது.

செருப்பால் அடிப்போம்..

இந்நிலையில், கடந்த ஜூன் 11-ம் தேதி, அருப்புக்கோட்டை நகரில் சொக்கலிங்கபுரம், திருச்சுழி ரோடு, பழைய பஸ் ஸ்டாண்டு, அண்ணா சிலை உள்பட பல பகுதி களில் வாக்காளர்களுக்கு திறந்த ஜீப்பில் நன்றி சொல்ல வந்தார், வைகைச்செல்வன். அப்போது, ''காயம் ஏற்பட்டதால்தான் உடனே நன்றி சொல்ல வரவில்லை. அதற்காக, உங்கள் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டுக்கொள்கிறேன். அருப்புக் கோட்டைக்கு அரசு மருத்துவக் கல்லூரி மற்றும் அரசு கலைக் கல்லூரி உள்பட பல திட்டங்களை நிறைவேற்றித் தருவேன்...'' என்றவர், கொஞ்ச நேரத்தில் டாப் கியரில்,

''உங்களை 30 ஆண்டுகளாக ஏமாற்றிய வரை தேர்தலில் தோற்கடித்துவிருதுநகருக்கு அனுப்பிவிட்டேன். அருப்புக் கோட் டையைப் பிடித்து ஆட்டிய சனி ஒழிந்து விட்டது. விரைவில், அந்த ஆளை பாளையங் கோட்டைக்கு அனுப்பப் போகிறேன். அருப்புக்கோட்டை நகராட்சித் தலைவர் சிவப்பிரகாசம் அந்த ஆளோடு

செருப்பால் அடிப்போம்..

சேர்ந்துட்டு ஆட்டம் போடுறான். நீ அந்த ஆளுகிட்ட செருப்படி வாங்கிக்கிட்டு இருக்குற... திருந்தலைன்னா உன்னை நாங்க செருப்பால அடிப்போம். 9 மற்றும் 10 வார்டுகளில் அடிப் படை வசதிகளே இல்லை. இதைச் சொல்லி 30 வார்டு மக்களைக் கிளப்பிவிட்டா, உன்னை உண்டு இல்லைன்னு பண்ணிடுவாங்க. நான் அடிவாங்குற செட்டியார் இல்லை. அடிக்கிற செட்டியார்...'' என்று அவர் சொன்னதும், மக்கள் திகைத்துவிட்டனர்.

வைகைச்செல்வனின் இந்தப் பேச்சுதான் அருப்புக்கோட்டை மக்கள் மத்தியில் ஹாட் நியூஸ். நகராட்சித் தலைவர் சிவப்பிரகா சத்திடம் விளக்கம் கேட்டோம். ''புது எம்.எல்.ஏ., ஓட்டு போட்ட மக்க ளிடம் இப்படி மாஜி மந்திரியையும், என்னையும் தாறுமாறாகப் பேசி இருக்கிறார். 'அவர் பெரிய படிப்புகள் படித்தவர்... டாக்டர் பட்டம் வாங்கி இருக்கிறார்’ன்னு சொல்றாங்க. ஆனா, அவர் ஊருக்குள் வன்முறையைத் தூண்டுறது மாதிரி பேசுறார். ஒருவேளை, அவங்க கட்சி மேலிடத்தில நல்ல பேர் எடுக்குறதுக்காக இப்படித் திட்டுகிறார்ன்னு நினைக்கிறேன். நாங் களும் பதிலடி கொடுக்க ஆரம்பிச்சா... அசிங்கமாயிடும்...'' என்றார் சீரியஸாக.

அ.தி.மு.க-வினர் சிலர், ''வைகைச் செல்வனுக்கு ஆதரவாக தேர்தலில் வேலை செய்த சிலரை அடிக்கணும்னு சிவப் பிரகாசம் பேசி இருக்கிறார். அதனால் இப்படிப் பேசுனாத்தான், இங்கே அரசியல் பண்ண முடியும் என்று நினைத்து எங்கள் எம்.எல்.ஏ. தடாலடியாகப் பேசிவிட்டார். இதெல்லாம் பெரிய விஷயம் இல்லை!'' என்கிறார்கள்.

- எம்.கார்த்தி

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism