Published:Updated:

''நிர்வாணப் படுத்தியவர்களுக்கு, சஸ்பெண்ட்தானா தண்டனை?''

நெல்லை கல்லூரியில் கண்துடைப்பு நடவடிக்கை

''நிர்வாணப் படுத்தியவர்களுக்கு, சஸ்பெண்ட்தானா தண்டனை?''

நெல்லை கல்லூரியில் கண்துடைப்பு நடவடிக்கை

Published:Updated:
''நிர்வாணப் படுத்தியவர்களுக்கு, சஸ்பெண்ட்தானா தண்டனை?''
##~##

நெல்லை மருத்துவக் கல்லூரியில் 'ஹாஸ்டல் டே’ கொண்டாட்டம் முடிந்த பின்னர், நள்ளிரவில் மாணவியர் விடுதிக்குள் அத்துமீறி நுழைந்த சில மாணவர்கள் அங்கிருந்த மாணவிகளிடம் கொடூரமாக நடந்து கொண்ட சம்பவம் பற்றி கடந்த 12.6.2011 ஜூ.வி. இதழில் எழுதி இருந்தோம். செய்தி வெளியான பிறகும் மருத்துவக் கல்லூரி நிர்வாகமும், போலீஸும் நடந்த சம்பவத்தை மூடி மறைப்பதிலேயே கவனமாக இருந்தனர். தங்களுடைய தவறை மறைப்பதற்காக, சில மாணவர்களைத் தூண்டிவிட்டு ஜூ.வி-க்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அதே நேரம் உண்மை வெளிவரவேண்டும் என்ற எண்ணத்தில், அரசியல் கட்சியினரும் கல்வியாளர்களும் இந்த விவகாரத்தைக் கையில் எடுத்து போராடத் தொடங்கினர். பி.ஜே.பி. நெல்லை மாவட்ட அமைப்புச் செயலாளர் சுரேஷ் மற்றும் மகளிரணியைச் சேர்ந்த வழக்கறிஞர் சீதா ஆகியோர், போலீஸ் கமிஷனர் வரதராஜுவை சந்தித்து, மனு கொடுத்தனர். மாணவிகளுக்கு நேர்ந்த அவலத்தைக் கேள்விப்பட்டு பதறிப்போன, அண்ணா பல்கலைக் கழக முன்னாள் துணைவேந்தர் அனந்த கிருஷ்ணன் நம்மைத் தொடர்பு கொண்டு விசாரித்தார். பின்னர், இந்த விவகாரத்தை உயர் அதிகாரிகளின் கவனத்துக்கும் கொண்டு சென்றார்.

''நிர்வாணப் படுத்தியவர்களுக்கு, சஸ்பெண்ட்தானா தண்டனை?''
''நிர்வாணப் படுத்தியவர்களுக்கு, சஸ்பெண்ட்தானா தண்டனை?''

அரசியல்வாதிகள், கல்வியாளர்களின் எதிர்ப்பு வலுக்கத் தொடங்கியதால், கலெக்டர் நடராஜன் இந்த விவகாரம் குறித்து மருத்துவக் கல்லூரி நிர்வாகிகள் மற்றும் போலீஸ் அதிகாரிகளிடம் விசாரித்தார். ஏற்கெனவே, மருத்துவக் கல்லூரிப் பேராசியர்கள் நடத்தி இருந்த விசாரணை அறிக்கையைக் கேட்டு வாங்கினார். இதற்குப் பின்னும் சும்மா இருக்க முடியாது என்று சுதாரித்துக் கொண்ட மருத்துவக் கல்லூரி நிர்வாகம், நான்கு மாணவர்களை சஸ்பெண்ட் செய்து உள்ளது.

ஆனால், 'இது வெறும் கண்துடைப்பு’ என குமுறுகிறார்கள், பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர். ''மாணவிகளை நிர்வாணப்படுத்தி நடனம் ஆட வைத்தவர்களை ஓரிரு நாட்கள் சஸ்பெண்ட் செய்வது மட்டுமே இந்தப் பிரச்னைக்கு நிரந்தரத் தீர்வாக அமையாது. கடும் நடவடிக்கை எடுத்தால்தான் இனிமேல் இதுபோன்ற கொடுமைகள் நடக்காது. அவர்களுக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும்!'' என்கிறது பெற்றோர் தரப்பு.

தவறு செய்தவர்களை பாதுகாப்பதும் தவறுதான் என்பதை நிர்வாகம் எப்போது உணரப் போகிறதோ?

- ஆண்டனிராஜ்

படங்கள்: எல்.ராஜேந்திரன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism