Published:Updated:

அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்!

திருநின்றவூரில் ஒரு பக்தர்

அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்!

திருநின்றவூரில் ஒரு பக்தர்

Published:Updated:
##~##
அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்!

''புட்சித் தலைவிதான் எனக்குத் தெய்வம். அதனால், செயின்ட் ஜார்ஜ் கோயிலுக்குள்(?!) செருப்பு அணிந்து வர மாட்டேன்!'' என்று புல்லரிக்க வைத்த அமைச்சர்; நாக்கு, மூக்கு, விரல்... என்று கண்டதையும் வெட்டிக் கொள்ளும் ரத்தத்தின் ரத்தங்கள்... இதெல்லாம் அ(ம்மா).தி.மு.க-வில் சகஜமான விஷயங்கள் தான்! 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

ஆனால், கட்சிக்கும் ஆட்சிக்கும் கொஞ்சம்கூட சம்பந்தமே இல்லாத எம்.ஜி.ஆர். பக்தர் ஒருவர், தனது சொந்த செலவில், எம்.ஜி.ஆருக்காக கோயில் ஒன்றையே எழுப்பி இருக்கிறார் என்றால், அது ஆச்சர்யம்தானே?

திருவள்ளூர் மாவட்டம், திருநின்றவூர் அருகே உள்ளது நத்தம்மேடு கிராமம். இங்குதான் இருக்கிறது, 'அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்!’ உபயம்: 'அதி தீவிர எம்.ஜி.ஆர். பக்தன் கலைவாணன்.’

செல்லியம்மன் சாலை ஓரத்தில், 1,800 சதுர அடியில், கும்பாபிஷேகத்துக்கு தயார் நிலையில் இருக்கும் எம்.ஜி.ஆர். ஆலயத்தில் இருந்த கலைவாணனிடம் பேசினோம்.

அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்!
அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்!

''என் சாமிக்கு (எம்.ஜி.ஆரை 'சாமி’ என்றேதான் சொல் கிறார்!) இருக்கிற கோடிக்கணக்கான ரசிக பக்தர்களில் நானும் ஒரு சாதாரண பக்தன். ஆனால், அந்த தெய்வத்துக்குக் கோயில் கட்டிப் பார்க்கிற புண்ணியத்தை எனக்குத்தான் அந்த சாமி கொடுத்திருக்கு.

'பூமிக்கு நேராக வாழ்பவர் எல்லோ ரும் சாமிக்கு நிகரில்லையா... பிறர் தேவை அறிந்துகொண்டு வாரிக் கொடுப்பவர்கள் தெய்வத்தின் பிள்ளை இல்லையா!’ என்று 'உன்னையறிந்தால் நீ உன்னையறிந்தால்’ பாடலில் பாடியபடியே ஊருக்கெல்லாம் வாரிக் கொடுத்த வள்ளல் என் சாமி. அந்த தெய்வத்துக்கு கோயில் கட்ட இப்போதுதான் நேரம் கூடிவந்தது.

திருநின்றவூரில் இருந்த எனது பூர்வீக வீடு, என் மனைவியின் நகைகளை விற்றுக் கிடைத்த

அருள்மிகு எம்.ஜி.ஆர். ஆலயம்!

15 லட்சத்தில் இந்தக் கோயிலைக் கட்டிவிட்டேன். இதை அறிந்த வேறு சில ரசிகர்களும் தங்கள் பங்குக்குப் பணம் அனுப்புகிறார்கள். இன்னும் கொஞ்சம் வேலைகள் பாக்கியிருக்கிறது. என் சாமியை சிலையாக வடிக்கும் பணிகளை ராஜஸ்தான் சிற்பிகள் செய்கிறார்கள். சிலை தயாரானதும் முறைப்படி கும்பாபிஷேகம் செய்ய வேண்டும். அது வரை சாமியின் படத்தை மட்டும் வைத்து பூஜை செய்கிறோம்'' என்று உணர்ச்சி வசப்படும் கலைவாணனின் குடும்பம் தற்போது வசித்து வருவது வாடகை வீட்டில் என்பது அதிகப்படியான ஆச்சர்யம்.

'உங்களுக்கு என்று சொந்தமாக வீடு கட்ட வில்லையா?’ என்றால், ''அதற்கும் என் சாமி வழிகாட்டுவார்!'' என்றபடியே எம்.ஜி.ஆர். புகைப்படத்தை நோக்கிக் கை காட்டுகிறார் கலைவாணன்.

- த.கதிரவன்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism