Published:Updated:

ஆரணி தி.மு.க-வில் அடாவடி அரங்கேற்றம்!

திருவண்ணாமலை திகுதிகு

ஆரணி தி.மு.க-வில் அடாவடி அரங்கேற்றம்!

திருவண்ணாமலை திகுதிகு

Published:Updated:
##~##
ஆரணி தி.மு.க-வில் அடாவடி அரங்கேற்றம்!

ரணி தி.மு.க-வுக்குள் ஏற்பட்ட கோஷ்டி மோதல் உச்சத்துக்குப் போகவே, அறிவாலயத்தில் பஞ்சாயத்து நடந்து கொண்டிருக்கிறது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி தொகுதியில் தி.மு.க. வேட்பாளராக போட்டியிட்ட சிவானந்தம், எதிர்த்து நின்ற தே.மு.தி.க. வேட்பாளரிடம் தோற்றுப் போனார். 'என்னோட தோல்விக்குக் காரணம் நம்ம கட்சியைச் சேர்ந்த ஆரணி நகரச் செயலாளர் செல்வரசும், ஆரணி மேற்கு ஒன்றியச் செயலாளர் சங்கரும்தான்..!’ என தி.மு.க. செயல்வீரர்கள் கூட்டத்தில் போட்டு உடைத்ததோடு நில்லாமல் தீர்மானமும் நிறைவேற்றவே பிரச்னை வெடித்துக் கிளம்பி இருக்கிறது.

கடந்த 10-ம் தேதி செல்வரசும் சங்கரும் தங்களது ஆதரவாளர்களுடன் கருணாநிதியின் பிறந்த நாளை ஆரணி பாஞ்சாலியம்மன் திருமண மண்டபத்தில் கொண்டாடிக் கொண்டு இருந்திருக்கிறார்கள். அப்போது கல்யாண மண்டபத்துக்குள் தனது ஆதரவாளர்களுடன் நுழைந்த சிவானந்தம் அதகளத்தில் இறங்கி சேர்களை அடித்து நொறுக்கியதுடன் நில்லாமல், தயாராகிக் கொண்டு இருந்த மதிய உணவையும் கீழே கொட்டி துவம்சம் செய்தார். இதை படம் பிடித்துக் கொண்டிருந்த நாளிதழ் புகைப்படக்காரர் ஒருவரின் கேமராவும், அவர்களின் அட்டகாசத்துக்குத் தப்பவில்லை. இரண்டு தரப்பும் வாய்ச்சண்டையில் இறங்கி, அடுத்தகட்டம் அரங்கேறுவதற்குள் சிலர் சமாதானம் செய்து வெளியேற்றினர். செல்வரசு, சங்கர் இருவருக்கும் எதிரான கோஷங்களை எழுப்பியபடியே அவர்கள் வெளியே சென்றனர்.

ஆரணி தி.மு.க-வில் அடாவடி அரங்கேற்றம்!

நடந்த விவரங்களை, தி.மு.க. நகர செயலாளர் செல்வரசுவிடம் கேட்டோம். ''தலைவர் கலைஞரோட பிறந்த நாள் கொண்டாட்டத்துக்கு நாங்க ஏற்பாடு செஞ்சிக்கிட்டு இருந்தபோது உள்ளே புகுந்து எல்லாத்தையும் அடிச்சி நொறுக்கிவிட்டார். இதெல்லாம் நியாயமா? சிவானந்தத்துக்காக நாங்க எந்த அளவுக்கு தேர்தல் வேலை பார்த்தோம்ன்னு கட்சிக்காரங்க எல்லோருக்குமே தெரியும். அவரைத் தாண்டி ஆரணியில் யாரும் வளர்ந்துடக் கூடாது. அந்த அகங்காரத்துலயும் கோபத்துலயும் இப்படியெல்லாம் சிவானந்தம் பண்ணிட்டு இருக்கார். எல்லா விசயத்தையும் தலைவர் கலைஞரை சந்தித்து சொல்லி விட்டேன். 'சிவானந்தம் செஞ்சது தப்புதாம்ப்பா. நான் உடனே விசாரிக்கச் சொல்றேன். நீ போய் கட்சிப் பணியை பாரு..’ன்னு அனுப்பி வச்சார். கண்டிப்பா அவர் மேல நடவடிக்கை எடுப்பாங்கன்னு நம்பிக்கையோட இருக்கோம்!'' என்கிறார் ஆதங்கத்தோடு.

ஆரணி தி.மு.க-வில் அடாவடி அரங்கேற்றம்!

முன்னாள் எம்.எல்.ஏ. சிவானந்தம் மீது சொல்லப்படும் குற்றச்சாட்டுகளுக்கு அவரிடமே விளக்கம் கேட்டோம். ''சங்கரும், செல்வரசும் எலெக்ஷன் வேலையே பார்க்கலை. பார்த்திருந்தா நான் தோல்வியை சந்திச்சிருக்க மாட்டேன். மாவட்ட கமிட்டியில ஒரு குழு போட்டு, அவுங்க என்கொயரி பண்ணி இருக்காங்க. அதுக்குப் பிறகுதான் அவுங்க ரெண்டு பேர் மீதும் நடவடிக்கை எடுக்கச் சொல்லி தலைமைக்குப் புகார் பண்ணினோம். தீர்மானமும் போட்டோம்.

ஆரணி தி.மு.க-வில் அடாவடி அரங்கேற்றம்!

அவுங்க விஜயகாந்த் கட்சிக்குப் போறதுக்கு முடிவு பண்ணிட்டுத்தான் இப்படி புகார் சொல்லிக்கிட்டு இருக்காங்க. அது மட்டுமில்லைங்க... அ.தி.மு.க-வைச் சேர்ந்த அமைச்சர் அக்ரி.கிருஷ்ணமூர்த்தியை, இவங்க ரெண்டு பேரும் பார்த்துட்டு வந்திருக்காங்க.

அவுங்க நடத்துற கூட்டத்தைத் தடுத்து நிறுத்தத்தான் நாங்க கல்யாண மண்டபத்துக்குப் போனோம். நாங்க எதையும் உடைக்கல. யாரையும் அடிக்கல. அவுங்க ஆட்களே எல்லாத்தையும் செஞ்சிட்டுப் பழியை எங்க மேல போட்டுட்டாங்க. அவுங்களைப் போல நானும் பொய் கேஸ் கொடுக்கலாம். நான் எது செஞ்சாலும் அது கட்சிக்குத்தான் கெட்ட பேர். அதனால்தான் அமைதியா இருக்கேன்!'' என்று அலட்டிக் கொள்ளாமல் பேசினார்.

தி.மு.க. மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்ச​ருமான  எ.வ.வேலுவிடம் கேட்டபோது, ''பிரச்னை நடந்தபோது நான் ஊரில் இல்லை. கட்சிக்காரங்களையும் கூப்பிட்டு விசாரிச்சேன். இனி மேல் ஆரணி தொகுதிக்குள் மாவட்ட கழகத்தின் அனுமதி இல்லாமல் எந்த நிகழ்ச்சியும் நடத்தக்கூடாதுன்னு எல்லோருக்குமே கடிதம் அனுப்பிட்டேன். விவகாரம் கட்சித் தலைமை வரைக்கும் போய் விட்டதால் நான் எதுவும் செய்ய முடியாது. தலைமைதான் விசாரித்து முடிவு எடுக்கும்!'' என்று சொன்னார்.

சி.பி.ஐ. குடைச்சல், ஜெயலலிதா மிரட்டல் எல்லாம் போதாது என்று தி.மு.க. தலைமைக்கு இப்படியும் சில சோதனைகள்!

- கோ.செந்தில்குமார், படங்கள்: பா.கந்தகுமார்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism