Published:Updated:

போலிச் சான்றிதழ்... அதிகாரிகளுக்கு மிரட்டல்!

ஆட்டம்போடும் விழுப்புரம் அ.தி.மு.க-வினர்

போலிச் சான்றிதழ்... அதிகாரிகளுக்கு மிரட்டல்!

ஆட்டம்போடும் விழுப்புரம் அ.தி.மு.க-வினர்

Published:Updated:
##~##
போலிச் சான்றிதழ்... அதிகாரிகளுக்கு மிரட்டல்!

'ஆட்சிக்கு வந்த ஒரு மாதத்திலேயே அரசு அதிகாரிகளை அ.தி.மு.க-வினர் மிரட்ட ஆரம்பித்து விட்டனர். எங்கள் ஊரில் கிராம நிர்வாக அலுவலர், வருவாய் ஆய்வாளர்களை மிரட்டி தகுதி இல்லாதவர்களுக்கு, சான்றிதழ் தரச்சொல்லி மிரட்டுகின்றனர்!'' என்ற தகவல் ஜூ.வி. ஆக்ஷன் செல்லுக்கு (044-42890005) வந்தது. 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

விசாரணையில் உடனே இறங்கினோம். விழுப்​புரம் அருகேயுள்ள கப்பூர் கிராமத்தில்தான் இந்த முறைகேடு. ஊர் மக்கள் சிலரிடம் பேசினோம். ''முதியோர் உதவித்தொகை உட்பட அனைத்து உதவித் தொகைகளையும் வாங்கித் தர்றோம்ன்னு கப்பூர் அ.தி.மு.க. செயலாளர் ஜே.பி.அன்பழகனும், கோலியனூர் ஒன்றிய அ.தி.மு.க. விவசாய அணி செயலாளர் எஸ்.எஸ்.ராஜாமணியும் வசூல் செய்ய ஆரம்பிச்சுட்டாங்க. ஒவ்வொரு மனுவுக்கும்

போலிச் சான்றிதழ்... அதிகாரிகளுக்கு மிரட்டல்!

4,000 வரைக்கும் வாங்குறாங்க. தி.மு.க. ஆட்சியிலகூட இப்படி யாரும் பணம் வசூல் பண்ணவில்லை. உதவித் தொகை அதிகமாக்கி ஜெயலலிதா அறிவித்ததும், இவங்க வசூல் செய்யும் தொகையும் அதிகமாகி விட்டது.

போலிச் சான்றிதழ்... அதிகாரிகளுக்கு மிரட்டல்!

ஆதவற்றோர் உதவித் தொகை பெற வேண்டுமானால், சம்பந்தப்பட்டவருக்கு சம்பாதிக்கும் நிலையில் ஆண் மகன் இருக்கக் கூடாது. ஆனால், ரேஷன்கார்டில் உள்ள பிள்ளைகளின் பெயரை மறைத்து ஜெராக்ஸ் எடுத்து, ஆதரவு இல்லாதவர்ன்னு சான்றிதழ் வாங்கிக் கொடுக்குறாங்க. விசாரணையில் போலியான சர்டிஃபிகேட் என்று தெரியவந்து, சிலருக்கு உதவித்தொகை தர மறுத்து விட்டார்கள். உடனே அந்த அ.தி.மு.க. பிரமுகர்கள் ரெண்டு பேரும் அதிகாரிகளை மிரட்டுகிறார்கள். தி.மு.க. ஆட்சியில்தான் இந்த மாதிரியான மிரட்டல், ஊழல் இருந்தது. ஆனால், இப்போது அ.தி.மு.க. ஆட்சியின் ஆரம்பத்திலேயே அதே அவலம் நடக்கிறதே... இதை யார் தட்டிக் கேட்பது?'' என ஆதங்கப்பட்டனர் கிராம மக்கள்.

இந்தக் குற்றச்சாட்டுகள் உண்மைதானா என்ற கேள்வியோடு, கப்பூர் கிராம நிர்வாக அலுவலர் ராஜவேலுவை சந்திதோம். ''உண்மைதான். தகுதி இல்லாதவர்களுக்கு சான்றிதழ் தரச்சொல்லி அ.தி.மு.க. பிரமுகர் ராஜாமணி மிரட்டினார். உயர் அதிகாரிகளுக்குத் தகவல் தெரிவித்தோம். அதிகாரிகள் வந்து, அவரிடம் பேசினர். உதவித் தொகை பெற தகுதி உள்ளவர்களா என விசாரணை செய்த பிறகுதான், சான்றிதழ் வழங்கப்படும் என்று சொல்லி விட்டனர்!''  என்றார்.

இதுபற்றி, ராஜாமணியிடம் கேட்டோம். சட்டென்று கோபம் அடைந்தவர், ''நான் யாரிடமும் பணம் வசூலிக்கவில்லை. யாரையும் மிரட்டவும் இல்லை!' என்று நம்மிடமே மிரட்டல் தொனியில் பேசினார். இந்தத் தகவலை சம்பந்தப்பட்ட மேலிடத்தின் கவனத்துக்கு நாம் கொண்டு சென்றுள்ளோம்.

ஆதரவு இல்லாமல் இருப்பவர்களுக்கு உதவித்தொகை வாங்கிக் கொடுக்க உதவி செய்வது தவறு இல்லை. ஆனால், அதற்கான பணம் பிடுங்குவதும், தவறான சான்றிதழ் தயாரித்து அரசை ஏமாற்றுவதும் சரிதானா?

-அற்புதராஜ், படங்கள்: எஸ்.தேவராஜ்

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism