Published:Updated:

''தைரியம் இருந்தால் விலகிப் போ..''

கதர்களின் ஃப்ளெக்ஸ் பதிலடி

''தைரியம் இருந்தால் விலகிப் போ..''

கதர்களின் ஃப்ளெக்ஸ் பதிலடி

Published:Updated:
##~##
''தைரியம் இருந்தால் விலகிப் போ..''

'உதித்த சூரியனை மறைத்த கைகள்’ என்று சமீபத்தில் புதுக்கோட்டையில் ஃப்ளெக்ஸ் பேனர் வைத்துபரபரப்பைக் கிளப்பி இருந்தார், அறிவுடைநம்பி என்கிற  உடன் பிறப்பு. அதைப்பற்றி கடந்த 15.6.2011 ஜூ.வி. இதழில் ''காங்கிரஸ் கூட்டணியை தி.மு.க. கைவிடணும்!'' என்ற தலைப்பில் நாம் வெளியிட்டு இருந்தோம். 

ஒட்டுமொத்த விகடனுக்கும் ஒரே ஷார்ட்கட்!

அந்த விளம்பரத்துக்கு பதிலடி தரும் விதமாக, காங்கிரஸ் தரப்பில் ராகுல் பிறந்த நாளுக்காக ஒரு பேனர் வைத்து இருக்கிறார்கள். அதில், 'கூடா நட்பு கேடாய் முடியும். உண்மையிலேயே கூடா நட்பினால் காங்கிரஸுக்குத்தான் இழப்பு. கூடா நட்பை சுட்டிக்காட்ட தைரியமில்லா தலைவனே... தைரியமிருந்தால் விலகிப்போ’ என்பதுடன், 'ஒரு தவறு செய்தால், அதைத் தெரிந்து செய்தால் அவன் தேவன் என்றாலும் விடமாட்டோம். ஒரு காலம் வரும்... எங்கள் கடமை வரும்... இந்தக் காக்கைகள் கூட்டத்தை ஒழிப்போம்’ என்ற வாசகங்கள் மின்னுகின்றன! கூடவே, ராகுல் சாட்டையை சுழற்றுவது போல் படம் போட்டு இருப்பது தி.மு.க-வினரை கொதிக்கச் செய்து உள்ளது!

''தைரியம் இருந்தால் விலகிப் போ..''

இந்த பேனர் வைத்த மாவட்ட விவசாயப் பிரிவு காங்கிரஸ் தலைவரான அறந்தாங்கி ஆஸாத்திடம் பேசினோம். ''செய்றதை எல்லாம் செஞ்சிட்டு, ஒண் ணுமே செய்யாத மாதிரி போர்டு வெச்சா, நாங்க சும்மா இருப்போமா? அதான், இப்படி நடவடிக்கை எடுத் தோம். கூட்டணியில் 63 ஸீட் வேணும்னு

''தைரியம் இருந்தால் விலகிப் போ..''

சொல்ல... அதை தி.மு.க. கேட்கலை. கூட்டணி  பேச வந்த தலைவர்களும் டெல்லி போயிட்டாங்க. அப்போ, தனிச்சு நின்னு ஜெயிக்க முடியும்ன்னு தி.மு.க-வுக்கு நம்பிக்கை இருந்திருந்தா... இவங்க ஏன் டெல்லிக்கு போனாங்க? திரும்பவும் பேச அழகிரியையும், தயாநிதி மாறனையும் ஏன் டெல்லிக்கு அனுப்பி னாங்க? எப்படியோ சமாதானம் ஆனது.

தேர்தல் வந்துச்சு. தோத்தும் போயிட் டோம். 'மக்கள் ஓய்வு கொடுத்து இருக்கிறார் கள்’ என்று சொன்னவர், வாயை வச்சிக் கிட்டு சும்மா இருக்க வேண்டியது தானே... அப்புறம், 'கூடா நட்பு கேடாய் முடியும்’ன்னு ஏன் சொல்றார். 'கூடா நட்பு’ன்னு சொல்பவர் உடனே விலகிப் போக வேண்டியதுதானே? இன்னமும் ஏன் ஒட்டிக்கிட்டு நிக்கணும். 'நடந்து முடிஞ்ச தேர்தலில் ஒட்டுமொத்த தோல்விக்கும் காரணம், இலங்கைத் தமிழர் பிரச்னை’ன்னு தி.மு.க-காரங்க சொல்றாங்க. நிச்சயமா அது காரணம் இல்லை. அலைக்கற்றை விவகாரமும், அதுல நடந்த முறைகேடும்தான் முக்கியக் காரணம். அலைக்கற்றை முறைகேடு சாதாரண கிராமத்துவாசிகிட்ட கேட்டாக்கூட சொல்ற அளவுக்கு பரவிடுச்சு. அதைவைச்சுப் பாத்தா... காங்கிரஸோட தோல்விக்கு தி.மு.க-தான் காரணம்...'' என அனலாய் கக்கியவர், சற்றே நிறுத்தி மீண்டும் தொடர்ந்தார்.

''இன்னைக்கு தமிழகத்தில் இருக்குற பெரிய கட்சிகளில் எந்த கட்சியிலதான் கோஷ்டி அரசியல் இல்லை. ஒவ்வொரு தொண்டனும் அவனுக்குப் பிடிச்ச தலைவர் பாதையில் போய்க்கிட்டு இருக்கான். ஆனா,  தேர்தல்ன்னு வந்துட்டா கோஷ்டியை எல்லாம் மறந்து ஒற்றுமையா வேலை செய்வாங்க. ஆனா, தி.மு.க-வுல மட்டும்தான் அந்த சமயத்துக்காகவே காத்திருந்தமாதிரி, தேர்தலில் பழி வாங்குவாங்க. இந்த மாவட்டத்தில் தி.மு.க. வேட்பாளர்களும், எங்க கட்சி வேட்பாளர்களும் தோத்துப் போனதுக்கு அதுதான் காரணம்.

உதாரணத்துக்கு, அறந்தாங்கி தொகுதியில திருநாவுக்கரசர் போட்டியிட்டார். அரசரைப் பொறுத் தவரைக்கும் அவர் எந்தக் கட்சில இருந்தாலும், அவருடைய ஆதரவு பெற்ற வேட்பாளரைக்கூட ஜெயிக்க வைச்ச தொகுதி, அறந்தாங்கி. அப்படி இருந்தும் இந்த தேர்தலில் தி.மு.க-வோட உள்குத்து

''தைரியம் இருந்தால் விலகிப் போ..''

வேலையால அரசரே தோத்துப் போயிட்டார். ஆனாலும், நாங்க கூட்டணியில் இருக்கிறோம் என்ற காரணத்தால் இன்னைக்கு வரைக்கும் அந்தக் கட்சியை குறை சொல்லலை. நடைமுறை இப்படி இருக்க... 'கூடா நட்பு கேடாய் முடியும்’னு கலைஞர் சொல்றதும், அதைப் பார்க்குற தொண்டர்கள் எங்களை காயப்படுத்தி போஸ்டர் வைக்குறதுமா இருக்காங்க. வரும் உள்ளாட்சி தேர்தலில் காங்கிரஸோட செல்வாக்கை நாங்க நிரூபிக்கணும். அப்பத்தான் காங்கிரஸோட பலம் மத்த கட்சி களுக்குப் புரியும். அதனாலதான் இந்த விளம்பரத்தட்டி வைச்சோம். இப்பவாவது தமிழகத்துல இருக்குற காங்கிரஸ் தொண்டர்களோட மனநிலையை டெல்லி தலைமை தெரிஞ்சிக்கட்டும்!'' என கொதித்தார்.

இதுகுறித்து, தி.மு.க. மாவட்டச் செயலாளரான பெரியண்ணன் அரசுவிடம் கேட்டோம். ''அரசியலில் தலைவர்கள் எடுக்குற முடிவுக்கு தொண்டர்கள் கட்டுப்படணும். தி.மு.க-வுல அப்படித்தான் இருக்கோம். சொந்த விருப்பு வெறுப்புகளுக்கு இங்கே இடம் இல்லை. தி.மு.க. தரப்புல போர்டு வச்சிருந்த அறிவுடைநம்பியை, விசாரித்து வருகிறோம். அதுக்குள்ள அவசரப்பட்டு காங்கிரஸ் தரப்பு விளம்பரம் வைச்சுட்டாங்க. இங்க நடந்துக்கிட்டு இருக்குற விஷயங்கள் எல்லாமே தி.மு.க. மற்றும் காங்கிரஸ் தலைமைக்கு துளியும் தொடர்பு இல்லாத விஷயங்கள். சிலரோட சுய விளம்பரத்துக்காக இப்படி செய்கிறார்கள்!'' என்றார் நிதானமாக.

தொண்டர்கள் மோதல் தலைவர்கள் வரை எதிரொலிக்காமல் இருந்தால் சரிதான்!

- வீ.மாணிக்கவாசகம்

படங்கள்: பா.காளிமுத்து

தெளிவான புரிதல்கள் | விரிவான அலசல்கள் | சுவாரஸ்யமான படைப்புகள்Support Our Journalism